செய்வினையை உடைத்தெறியும் வாராகி வழிபாடு

varahi1
- Advertisement -

செய்வினை, கண் திருஷ்டி, எதிரிகளால் பிரச்சனை என்றாலே நம் கண் முன்னே வந்து நிற்பது வாராகிதாய் தான். பெரும்பாலும் நாம் எல்லோருக்கும் இது தெரிந்திருக்கும். இந்த வாராஹித் தாயின் பாதங்களை இறுக்கப்பற்றிக் கொண்டால், இந்த உலகத்தில் இருக்கும் எந்த கெட்டதுக்கும் நாம் பயப்பட தேவை இருக்காது.

காரணம் வாராகி தாயை நம்பி அவளை வழிபாடு செய்ய தொடங்கி விட்டால் போதும். உங்களுக்கு யார் கெடுதல் செய்கிறார்களோ, அவர்களை அந்த வாராகித்தாய் அழித்து விடுவாள். இதுதான் உண்மை. இதை நாங்கள் சொல்லவில்லை. வழிவழியாக வாராகி தாயை வழிபட்டவர்கள் சொன்ன விஷயம் இதுதான்.

- Advertisement -

செய்வினையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டிய வாராகி வழிபாடு

உங்களுக்கு கண் திருஷ்டி பாதிப்பு இருக்குதா, யாரோ செய்வினை வச்சுட்டாங்க ஏவல் பில்லி சூனியத்தில் சிக்கிக்கொண்டீர்களா. எதுவும் செய்யாதீங்க. வராகி கோவிலுக்கு போயிட்டு தேய்பிறை பஞ்சமி திதி, வளர்பிறை பஞ்சமி திதியில், பூசணிக்காய் விளக்கு போடணும். பூசணிக்காய் இரண்டாக அறுத்து, அதன் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு முக்கால்வாசி நல்லெண்ணெய் ஊற்றி சிவப்பு நிறத்தில் திரி போட்டு வாராகி தாய்க்கு விளக்கு ஏற்ற வேண்டும்.

பூசணிக்காய் க்கு உள்ளே ஒரு விதை கூட இருக்கக் கூடாது சுத்தமா எடுக்கணும் கவனம் தேவை. குறிப்பாக இந்த பஞ்சமி நாட்களில் மதியம் 11.00 மணியிலிருந்து 12.00 மணிக்குள் அந்த வாராகி தாய்க்கு இந்த விளக்கை போட்டுவிட்டு சரணாகதி அடைந்து இந்த செய்வினை பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் என்று உண்மையாக யார் ஒருவன் வேண்டுதல் வைக்கின்றானோ, அன்றிலிருந்து அவனுடைய வாழ்க்கையில் விமோசனம் கிடைக்கும்.

- Advertisement -

உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் வாராஹி சன்னிதானம் இருக்கும் கோவிலுக்கு சென்று இந்த விளக்கை போடலாம். தவறு கிடையாது. இருந்தாலும் சிறப்புமிக்க கோவில்கள் நம்முடைய ஊர்களில் நிறைய இருக்கிறது. அந்த வரிசையில் காஞ்சிபுரத்திற்கு அருகில் சிறுவாக்கம் கிராமத்தில், ஸ்கந்தாலயா ஆசிரமம் உள்ளது. அங்கு ஒரு முருகன் கோவில் இருக்கிறது.

சிறுவாக்கம் ஸ்கந்தாலயா முருகன் கோவில். அந்த முருகன் கோவிலில் வாராஹி தாய்க்கு தனியாக ஒரு சன்னிதானம் இருக்கிறது. உங்களுக்கு செய்வினை இருக்கிறது எனும் பட்சத்தில், இந்த கோவிலுக்கு போங்க. ஒருவேளை உங்களுக்கு நிஜமாகவே செய்வினை பாதிப்பு இருந்தால், இந்த கோவிலுக்கு போக வேண்டும் என்று நினைத்தாலே தடங்கல் வரும்.

- Advertisement -

இந்த கோவிலுக்கு செல்ல விடாதபடி உங்களுடைய பிரச்சனை தடுக்கும். இருந்தாலும் வாராகி தாயை மனதில் நினைத்துக் கொண்டு எப்படியாவது இந்த கோவிலுக்கு சென்று வளர்பிறை பஞ்சமி திதி, தேய்பிறை பஞ்சமி திதியில் மேலே சொன்ன பூசணிக்காய் விளக்கை ஏற்றி வாராகி தாயின் முன்பு அமர்ந்து வேண்டிக் கொண்டால் போதும்.

உங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும். தொடர்ந்து விளக்கு போடணும் ஒரு மாதம், இந்த விளக்கை போட்டுவிட்டு அதோடு விடக்கூடாது. 3 மாதம், 6 மாதம், 11 மாதம் இப்படி பஞ்சமி திதியில், இந்த பூசணிக்காய் விளக்கை வாராகித் தாய்க்கு போட போட, உங்களுடைய பிரச்சனைகள் படிப்படியாக குறைவதை காண்பீர்கள்.

ஒரு கட்டத்தில் உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் எப்படி தொலைந்து போனது என்றே உங்களுக்கு தெரியாது. நீங்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ தொடங்கி இருப்பீர்கள். அதற்கான வழியை வாராகித்தாய் காண்பித்துக் கொடுப்பாள். வாராஹி அன்னையின் சக்தி வாய்ந்த கோவில்களில் இந்த கோவிலிலும் ஒன்றாக சொல்லப்பட்டுள்ளது. இது தவிர இன்னும் நிறைய கோவில்கள் உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பள்ளூர் வாராகி அம்மன் கோவில் இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்திரகோசமங்கையில் சுயம்பு வடிவத்தில் உருவான வாராஹி அம்மன் கோவில் இருக்கிறது. சேலம் நெத்திமேடு காளியம்மன் கோவிலில் வாராகி அம்மன் சன்னிதானம் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பிரசித்தி பெற்ற வாராஹி அம்மன் வழிபாட்டுத்தலங்கள் இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: தரித்திரத்தை விரட்டி அடிக்கும் சக்தி கொண்ட இரண்டு இலைகள்

அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலாக நீங்கள் பார்த்துக் கொள்ளவும். அப்போதுதான் மாதம் தோறும் இரண்டு முறை அந்த கோவிலுக்கு சென்று உங்களால் விளக்கு போட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. செய்வினை பாதிப்பு உள்ளவர்கள் எதிரி தொல்லையால் பிரச்சனை என்பவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வாராகி வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -