செல்வம் பெருக தைப் பொங்கல் வழிபாடு

- Advertisement -

நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு விசேஷங்களையும் ஒவ்வொரு பூஜைகளையும் நாம் வெகு விமர்சையாகவும் சிரத்தையாகவும் கொண்டாடுகிறோம். அந்த வகையில் தைப்பொங்கல் நம் தமிழர்களின் ஒரு உன்னதமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையானது சூரிய கடவுளை வணங்க வேண்டிய முக்கியமான ஒரு நாளாகும்.

அன்றைய நாளில் செய்யக் கூடிய வழிபாடுகள் அனைத்துமே நம் குடும்பம் நல்ல முறையில் சந்தோஷத்துடன் செல்வ வளத்துடன் வாழ்வதற்காக இறைவனின் அருளை பெறவே. அத்தகைய வழிபாட்டுடன் சேர்த்து அன்று மாலை செய்யக் கூடிய ஒரு எளிய வழிபாட்டு முறையைப் பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

செல்வம் பெருக தைப்பொங்கல் வழிபாடு

பொங்கல் தினத்தன்று காலை முதல் மதியம் வரை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற நேரத்தில் பொங்கல் வைத்து சூரிய கடவுளை வழிபடுவார்கள். இது அவரவரின் வழக்கத்தை பொறுத்து இந்த வழிபாடுகள் அமையும். இவையெல்லாம் செய்த பிறகு மாலையில் நம் குடும்பம் செல்வ செழிப்புடன் இருக்க இந்த ஒரு வழிபாட்டை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த வழிபாடு செய்வதற்கு குபேரர் அல்லது மகாலட்சுமி தாயாரின் படம் இருந்தால் படத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து வாசம் மிக்க மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இந்த பூஜைக்கு இரண்டு மலர்கள் கட்டாயம் தேவை ஒன்று செவ்வரளி மற்றொன்று மல்லிகைப்பூ இரண்டும் சம அளவில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்போது இந்த பூஜையை தொடங்கு மகாலட்சுமி தாயார் அல்லது குபேரர் படத்திற்கு முன்பாக குத்து விளக்கை வைத்து ஐந்து முகத்திலும் திரி போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக சக்கரை பொங்கல் செய்து வைக்க வேண்டும். காலையில் நாம் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டு இருந்தாலும் மாலையில் இந்த வழிபாட்டிற்குகென தனியாக செய்ய வேண்டும்.

இப்போது நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பூவை கையில் வைத்துக் கொண்டு ஓம் குபேராய நமக என்ற வார்த்தையை சொல்லி குத்து விளக்கில் பூவை போட வேண்டும். ஒரு முறை செவ்வரளி பூவை போட்டால் அடுத்த முறை மல்லிகை பூவை போட வேண்டும். இந்த மந்திரத்தை 108 முறை சொல்வது சிறப்பு இதற்கு மேலும் சொன்னாலும் நல்லது தான். ஒவ்வொரு முறை மந்திரம் சொல்லும்போது ஒவ்வொரு மலராக போட வேண்டும்.

- Advertisement -

தைப்பொங்கல் அன்று செய்யக் கூடிய இந்த பூஜையை அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் காணும் பொங்கல் என மூன்று நாட்களும் தொடர்ந்து செய்தால் நல்ல விசேஷமான பலன்களை பெறலாம். இதை செய்ய முடியாதவர்கள் ஒரு நாள் மட்டுமாவது தவறாமல் செய்து விடுங்கள். இந்த வழிபாட்டிற்கு பயன்படுத்திய பூக்களை உடனே எடுத்து நாம் வெளியில் போட்டு விடக்கூடாது இதை ஒரு இடத்தில் பத்திரப்படுத்தி நன்றாக காய்ந்த பிறகு தான் இதை கால்படாத இடத்தில் போட வேண்டும்.

வருடம் முழுவதும் செல்வ செழிப்புடன் வாழ வைக்கக்கூடிய இந்த ஒரு எளிய பூஜை முறையை பொங்கல் அன்று நாம் செய்யும் வழிபாட்டுடன் சேர்த்து செய்யும்போது பெறலாம் என்று சொல்லப்படுகிறது இந்த வழிப்பாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை உடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே: போகி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்

இந்த தை பொங்கலை அனைவரும் மகிச்சியுடன் கொண்டாடுவதுடன், வாழ்வில் சகல சௌபாக்கியத்தையும் பெற வேண்டும் என தெய்வம் குழுவின் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

- Advertisement -