மாடித் தோட்டம் வைத்திருப்பவர்கள் இதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டால் போதும் எவ்வளவு பெரிய தோட்டத்தையும் வைத்து செலவே இல்லாமல் வளர்க்கலாம்.

Maadi Thottam
- Advertisement -

இயற்கையை விரும்பாத மனிதர்கள் உலகத்தில் இருக்கவே முடியாது. இயற்கை பிடிக்கும் எனும் போதே இந்த மரம், செடி, கொடி எல்லாம் பிடிக்கத் தான் செய்யும். இவையெல்லாம் பிடித்தாலும் கூட எல்லோரும் மரம்,செடி கொடிகளை வளர்ப்பதில்லை தான். இதற்கு காரணம் நேரமின்மை ஆக இருந்தாலும் கூட, அதை வளர்க்க அதிக செலவு செய்ய வேண்டியது இருக்கும் என்ற காரணத்தினாலே தவிர்த்து விடுகிறார்கள். இந்த வீட்டுக் தோட்டம் பதிவில் எப்படி செலவே இல்லாமல் இந்த உரம்,பூச்சிக் கொல்லி போன்றவற்றை நாமே தயாரிப்பது என்பதை தான் இதில் தெரிந்து கொள்ள போகிறோம்.

மாடியில் செடி வைப்பதற்கு குரோபேக் வாங்கி தான் வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. நாம் வீட்டில் தேவையில்லாமல் தூக்கிப் போடும் பிளாஸ்டிக் டப்பாக்கள், பிளாஸ்டிக் பக்கெட், ட்ரம், தண்ணீர் கேன் போன்றவற்றையே பயன்படுத்திக் கொள்ளலாம். கீரை விதை, புதினா, கொத்தமல்லி போன்றவற்றையெல்லாம் சிமெண்ட் கவர், பிளாஸ்டிக் அரிசி பை போன்றவற்றில் கூட வளர்க்கலாம். இப்போதெல்லாம் கொட்டாங்குச்சி, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் கூட செடி வளர்க்கத் தொடங்கி விட்டார்கள். இது போன்றவை எல்லாம் நாமும் முயற்சி செய்யலாம்.

- Advertisement -

அடுத்ததாக மாடி தோட்டத்தில் நாம் பயன்படுத்தும் குரோபேக்காக இருக்கட்டும், பிளாஸ்டிக் டப்பாவாக இருக்கட்டும் அதை நேரடியாக தளத்தில் வைக்கக் கூடாது. இதனால் தளம் பாதிக்கப்படுவதோடு, செடிகளுக்கு அதிக சூடு ஏற்பட்டு செடியின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். அத்துடன் இதன் அடியில் தேங்கும் நீரால் பூச்சிகள் வந்து செடிகளும் வீணாகும் வாய்ப்பு அதிகம். எனவே நாம் குரோபேக், பிளாஸ்டிக் எதில் செடி வைப்பதாக இருந்தாலும் தளத்தில் இருந்து கொஞ்சம் உயரமாக வைக்க வேண்டும்.

அதற்கு நாம் தண்ணீர் குடிக்கும் பாட்டலில் வீட்டிலில், தேவையில்லாமல் தூக்கிப் போடும் பிளாஸ்டிக் கவர், பருப்பு கவர், அதாவது மக்காத குப்பைகள் அனைத்தையும் அந்த பாட்டிலில் போட்டு அடைத்து வைத்துக் கொண்டால், அதை கீழே வைத்து அதன் மேல் பலகை போன்றவற்றை வைத்து தொட்டி வைக்கலாம். இதனால் செங்கல் வாங்கும் செலவை கூட தவித்து விடலாம்.

- Advertisement -

அடுத்து செடிகளுக்கு மீன் அமிலம் தயாரித்து கொடுக்கலாம். இதற்கு நாம் வீட்டில் மீன் வாங்கி பயன்படுத்திய மீதமாகும் கழிவு களில் தண்ணீர் ஊற்றி நாட்டுச் சர்க்கரை சேர்த்து நொதிக்க விட்டு, அந்த தண்ணீருடன் சாதாரண தண்ணீரை கலந்து வடிகட்டி செடிகளுக்கு ஊற்றி வந்தாலே போதும். இதுவே செடிகளுக்கு மிக அருமையான உரம்.
சைவம் சாப்பிடாதவருக்கு இது கிடைக்காது என்றால் அதற்கு தேமோர் கரைச்சலும் பயன்படுத்தலாம். அதாவது தேங்காய் பாலும் அதே அளவிற்கு புளித்த மோரையும் எடுத்து அதை நன்றாக நொதிக்க வைத்து அத்துடன் தண்ணீர் கலந்து அதையும் செடிகளுக்கு ஊற்றி வரலாம். இதுவும் செடிகளுக்கு அருமையான உரம்.

இவையில்லாமல் நாம் வீட்டில் பயன்படுத்தும் காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், அரிசி களைந்த தண்ணீர் இவற்றை எல்லாமே கூட சேகரித்து வைத்து அதையே செடிகளுக்கு கொடுத்து வரலாம். இவையெல்லாம் நல்ல ஒரு இயற்கையான உரம். இதில் இன்னொரு முறையும் உண்டு. அழுகிப் போன காய்கறிகள், பழங்கள் இவற்றையெல்லாம் ஒரு மூடி போட்ட டப்பாவில் போட்டு விடுங்கள். அத்துடன் ஒரு கைப்பிடி கல் உப்பு, ஒரு கைப்பிடி நாட்டுச் சர்க்கரை, ஒரு கைப்பிடி தோட்ட மண் அனைத்தையும் கலந்து தண்ணீர் ஊற்றி மூன்று நாள் வரையில் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு அந்த தண்ணீருடன் தண்ணீர் கலந்து செடிகளுக்கு கொடுங்கள். இது இன்னும் அருமையான ஒரு உரம்.

- Advertisement -

அதே போல் பூச்சி கொல்லிக்கு வேப்ப எண்ணெய், வேப்ப கொட்டை, வேப்பம் புண்ணாக்கு இது போன்றவைகளை பயன்படுத்தலாம். இது மரம் வைத்திருப்பவர்கள் செய்யலாம் இல்லாதவர்கள் நாம் வீட்டில் பயன்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் அரைத்து அதை அப்படியே தண்ணீரில் கலந்து செடிகளுக்கு தெளித்து வந்தால் இதுவே அருமையான பூச்சிக் கொல்லி. இதை வாரம் ஒரு முறை தெளித்து வந்தாலே கூட போதும் பூச்சி தொல்லை எதுவும் இருக்காது.

இதையும் படிக்கலாமே: உங்க வீட்டில் கருவேப்பிலை செடி இருக்கா? அப்படின்னா சமையலறையில் மீந்து போற இதையெல்லாம் இனி தெரியாமல் கூட தூக்கி போடாதீங்க! இந்த செடிக்கு ஊத்துங்க கெமிக்கல் இல்லாத கொத்து கொத்தாக தினசரி தேவைக்கு கருவேப்பிலை கிடைக்கும்.

இப்படி தோட்டம் அமைக்க தொடங்குவது முதல் அதில் கொடுக்கும் உரம், பூச்சிக் கொல்லி அனைத்துமே நம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து செய்து விடலாம். இதற்காக நீங்கள் எந்த உரங்களையும் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் வீட்டு தோட்டத்தில் இதையெல்லாம் பயன்படுத்தி பாருங்கள்.

- Advertisement -