வீண் விரயச் செலவுகளை குறைக்க, சேமிப்பை பல மடங்காக உயர்த்த பைரவரை இப்படி வழிபாடு செய்வது தான் முறை.

kala-bairavar-vilakku
- Advertisement -

வீண் செலவுகளை குறைக்க வேண்டும். கொஞ்சமாவது பணத்தை சேமித்து வைக்க வேண்டுமென்ற ஆசை நம்மில் எல்லோருக்கும் உண்டு. ஆனால் என்னமோ தெரிவதே கிடையாது. வரக்கூடிய வருமானத்திற்கும் மேலாக தான் செலவுகள் வரிசைகட்டி நிற்கின்றன. வீண் விரையங்கள் என்பது வெறும் பணத்திற்கு மட்டும் தானா? என்று கேட்டால் அதுவும் கிடையாது. நம்மை அறியாமல் நம்முடைய வீட்டில் சில சமயங்கள் மனிதர்களின் உயிர் கூட விரயமாவதுண்டு. அதாவது எதிர்பாராத மரணம். அதுவும் நமக்கு ஒரு இழப்பு தானே. சொல்லப்போனால் பணம விரையத்தை விட, இந்த மனித உயிர் இழப்பு என்பது மிகப்பெரியது.

நம்முடைய வீட்டில் எதுவுமே விரையம் ஆகக்கூடாது. நாம் சாப்பிடும் உணவுப் பண்டங்களாக இருந்தாலும் சரி, நம் கைக்கு வரும் வருமானமாக இருந்தாலும் சரி, உயிர்களாக இருந்தாலும் சரி, இந்த வீண் விரயங்களை தவிர்க்க நாம் என்ன வழிபாட்டை மேற்கொள்வது. உலகத்துக்கே காவல் தெய்வமாக நிற்பவர் பைரவர். பைரவரின் பாதங்களை நாம் பற்றிக் கொண்டால் நம் வீட்டிற்கு அனாவசியமாக எந்த விரயமும் ஏற்படுவதற்கு வாய்ப்பே கிடையாது.

- Advertisement -

தினம் தோறும் பைரவரை நினைத்து மனதார வழிபாடு செய்யுங்கள். உங்கள் வீட்டின் அருகில் சிவன் கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு சென்று சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பைரவருக்கு இரண்டு மண் அகல் தீபங்களை ஏற்றி மனதார வேண்டிக்கொள்ளுங்கள். எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த தீப வழிபாட்டை செய்யலாம். என்னுடைய குடும்பத்திற்கு காவல் தெய்வமாக நின்று எல்லாவற்றையும் பாதுகாக்க வேண்டும் என்று மனம் உருகி பைரவரிடம் பிரார்த்தனை செய்தால், அந்த பைரவர் உங்கள் குடும்பத்திற்கு எப்போதும் காவல் தெய்வமாக நின்று காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை.

உங்களால் பைரவர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும் சரி, வீட்டில் பைரவரை மனதார நினைத்து ஒரு மண் விளக்கில் தனியாக தீபம் ஏற்றி வைத்து அந்த தீபச்சுடரில் பைரவரை ஆவாகனம் செய்து வழிபாடு செய்வதும் நல்ல பலனை கொடுக்கும். உண்மையான மனதோடு நம்பிக்கையோடு பைரவரை வழிபாடு செய்பவர்கள் எந்த நேரத்திலும் கைவிடப்பட்டதில்லை.

- Advertisement -

அடுத்தபடியாக பைரவரை நினைத்து குலதெய்வத்தை நினைத்து பணம் வீண் விரயம் ஆக கூடாது என்று இந்த முடிச்சை தயார் செய்து உங்கள் வீட்டில் வைக்க வேண்டும். ஒரு வெள்ளைத் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 கைப்பிடி அளவு உளுந்து வைத்து, உளுந்துடன் ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து, முடிச்சு போட்டு வரவேற்பறையில் வைக்கலாம். அப்படி இல்லை என்றால் பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம். இந்த உளுந்து முடிச்சு பண விரயத்தை குறைக்கும். சேமிப்பை அதிகரிக்கும்.

6 மாதத்திற்கு ஒருமுறை இந்த பழைய உளுந்தை எடுத்து பறவைகளுக்கு இறையாக போட்டுவிட்டு, மீண்டும் புதிய முடிச்சு கட்டி வைப்பது நல்லது. வீட்டில் அடிக்கடி மருத்துவச் செலவு வருகின்றது. தேவையில்லாமல் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நிலையான வருமானம் இல்லை என்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது எல்லாவிதமான பண பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். உங்களுக்கு கடன் சுமை இருந்தாலும் அது படிப்படியாக குறையும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இரண்டு பரிகாரத்தையும் செய்து பலன் அடையலாம் என்ற கருதுடன் இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -