வீட்டில் செல்வ மழை பொழிய நாளை வியாழக்கிழமையோடு வந்திருக்கும் அமாவாசை நாளில் இந்த வழிபாட்டை செய்து விடுங்கள். என்றென்றைக்கும் வற்றாத செல்வத்தை தரும் அற்புதமான வழிபாடு.

selvam peruga
- Advertisement -

இந்த அமாவாசை தினம் என்றதுமே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பித்ரு வழிபாடு தான். இந்த வழிபாட்டை முறையாக செய்யும் போது நம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து நிம்மதியாக வாழ அவர்களுடைய ஆசிர்வாதம் கிடைக்கும். அதே போல் இதே அமாவாசை நாளில் நம் வீட்டில் செல்வ வளம் பெருகவும் சில வழிபாடுகளை செய்யலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அதுவும் ஆவணி மாதத்தில் வரக் கூடிய இந்த அமாவாசை வியாழக்கிழமையில் வந்திருப்பது செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ள நமக்கு ஒரு அற்புதமான வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ள அமாவாசை குபேர வழிபாடு
இந்த அமாவாசை வியாழக்கிழமையில் வந்திருப்பதால் நம் வீட்டில் செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ள குபேரரை வழிபடலாம் என்று சொல்லப்படுகிறது. குபேரர் வழிபாட்டிற்கு உகந்த நாள் எனில் அது வியாழக்கிழமை தான். அமாவாசை தினத்தில் காலை முதல் மதியம் வரை பித்ருக்களுக்கான கடமைகளை நாம் சரிவர செய்த பிறகு மாலை இந்த குபேர பூஜையை செய்யலாம். அதற்கு அமாவாசை வழிபாடு முடிந்த பிறகு பூஜை அறை இந்த குபேர பூஜை செய்வதற்காக நீங்கள் தயார் செய்து கொள்ளுங்கள்

- Advertisement -

இந்த குபேர பூஜை செய்வதற்கு நமக்கு லட்சுமி குபேரர் படம் தேவை. இந்தப் படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து மலர் மாலை சாற்றிய பிறகு குபேரர் படத்திற்கு முன்பாக நெய் தீபம் ஏற்றி விடுங்கள். அதன் பிறகு அவருக்கு நெய்வேத்தியமாக அவலை படைக்க வேண்டும் இதற்கு எந்த அவல் வேண்டுமானாலும் வைக்கலாம். அதன் பிறகு குபேர வழிபாட்டில் முக்கியமானதாக சொல்லப்படுவது சில்லறை சத்தங்கள். ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் சில்லறை நாணயங்களை பரப்பி அதன் சத்தத்தை எழுப்பி வழிபாடு செய்யுங்கள். இது நம் வீட்டில் செல்வம் வளத்தை அதிகரிக்க செய்யக் கூடியதாக அமையும்.

அத்துடன் இதே நாளில் நாம் மகாலட்சுமி தாயாரை வணங்குவதும் நம்முடைய செல்வ நிலை உயரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கும் இதே போல் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வாசனை மிக்க மல்லிகை மலரால் மாலை சாற்றிய பிறகு அவருக்கும் இதே போல் தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த தீபத்தை ஒரு தட்டில் பச்சரிசியை முழுவதுமாக பரப்பி அதன் மேல் கொஞ்சம் துவரம் பருப்பு பரப்பி வைக்க வேண்டும். அதற்கு மேல் இந்த அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றி தாயாரை வணங்க வேண்டும். இந்த தீபம் நம் வீட்டில் உள்ள தரித்திர நிலையை போக்கி என்றென்றைக்கும் வீட்டில் வற்றாத செல்வத்தை தரக்கூடிய தீபமாக சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: நாளை அமாவாசை! முன்னோர்கள் சாபத்தால் முன்னுக்கு வர முடியாமல் தத்தளிக்கும் குடும்பத்தினர் இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்.

நாளைய அமாவாசை தினத்தை இந்த வழிபாட்டிற்கான ஒரு நாளாக நாம் பயன்படுத்தி கொள்வது மிகவும் நல்லது. ஒரே நாளில் நாம் பித்ருக்களை வழிப்பாடுவதுடன் குபேரர் மகாலட்சுமி தாயார் என அனைவரையும் வழிபடுவது நம் வீட்டில் செல்வ நிலையை பல மடங்கு உயர்த்தி கொள்ள சிறந்த வழி. இந்த வழிபாட்டை ஒவ்வொரு அமாவாசை பவுர்ணமி நாளில் தவறாமல் செய்து செய்து வருவதும் மேலும் பல நல்ல பலன்களை தரும்.

- Advertisement -