செல்வம் பெருக மார்கழி வெள்ளியில் ஏற்ற வேண்டிய தீபம்

mahalakshmi dheepam sozhi
- Advertisement -

மார்கழி மாதத்தின் சிறப்புகளை பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருப்போம் மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்தது தான் இந்த மாதம் வழிபாட்டிற்கெனவே ஒதுக்கப்பட்ட ஒரு மாதம் அப்படியான இந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நாளை இந்த தீபத்தை நம் வீட்டில் ஏற்றுவதன் மூலம் சுக்கிரனின் அருளையும் மகாலட்சுமி தாயாரின் அருளையும் ஒருசேர பெற முடியும்.

ஒருவர் நல்ல செல்வ செழிப்புடன் வாழ வேண்டுமெனில் சுக்கிரனும் சுக்கிரனுக்கு அதிதேவதையான மகாலட்சுமி தாயாரின் அருளும் நிச்சயமாக தேவை. இந்த ஒரு தீப வழிபாட்டு நிச்சயம் உங்களுக்கு இவை இரண்டையும் ஒன்றாக தரும் என்பது சந்தேகமே இல்லை இந்த தீப வழிபாட்டை எப்படி செய்வது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

செல்வம் பெருக மார்கழி மாதத்தில் ஏற்ற வேண்டிய தீபம்

இந்த தீப வழிபாட்டை காலை பிரம்ம முகூர்த்த வேளையிலும் சுக்கிர ஹோரையிலோ செய்வது மிகவும் சிறந்தது செய்ய முடியாதவர்கள் அடுத்து மாலை வரும் சுக்கிர ஓரை செய்யுங்கள் இல்லையெனில் மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து முடித்து விடுங்கள்.

இந்த வழிபாடு செய்ய நமக்கு தேவை இரண்டு குத்து விளக்கு இரண்டு தாம்பாள தட்டு இரண்டு மந்தார இலை சோழிகள் சிறிதளவு மருதாணி விதைகள் இவைகளை தயார் செய்து கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக மாதுளை முத்துக்கள் வைக்க வேண்டும். இந்த இரண்டு குத்து விளக்குகளையும் நன்றாக பளிச்சென்று சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு குத்து விளக்குக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள். இப்பொழுது பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு இரண்டு தாம்பாள தட்டை வைத்து அதன் மேல் இரண்டு மந்தாரை இலையும் வையுங்கள். மந்தார இலைக்கு மேல் இரண்டு இலையிலும் ஒரு கைப்பிடி அளவு சோழி,மருதாணி விதைகளை பரப்பி வைக்க வேண்டும்.

அடுத்ததாக குத்து விளக்கு இந்த இரண்டு தட்டின் மேலும் குத்து விளக்கை அம்மன் போல அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அது உங்களால் எப்படி செய்ய முடிகிறதோ அது போல செய்யுங்கள். ஆனால் குத்துவிளக்கை நல்ல முறையில் அலங்காரம் செய்ய வேண்டும். இந்த குத்து விளக்கில் இடுப்பை எண்ணையும் புங்க எண்ணையும் ஒன்றாக சேர்த்து ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள்.

- Advertisement -

அடுத்து குத்து விளக்குக்கு சாம்பிராணி தூபம் காட்டி வெற்றிலை பாக்கு பழம் மாதுளை முத்துக்கள் அனைத்தையும் நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள். நல்ல வாசனை மிக்க ஊதுபத்திகளை ஏற்றி வைத்து விடுங்கள். இந்த குத்து விளக்கு முன் அமர்ந்து மகாலட்சுமி அஷ்டோத்திரம் அல்லது உங்களுக்கு தெரிந்த வேறு மகாலட்சுமி மந்திரம், சுக்கிரன் மந்திரம் அல்லது அம்மனுடைய மந்திரங்கள் எது தெரிந்தாலும் அதை சொல்லலாம்.

இதையெல்லாம் சொல்லி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு நெய்வேத்தியமாக வைத்த மாதுளை முத்துக்களை வீட்டில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து கொடுங்கள் இந்த வழிபாட்டை விரதம் இருந்தும் செய்யலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் எளிமையான உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த வழிபாடு செய்யும் நாளில் கண்டிப்பாக அசைவத்தை தவிர்த்து விட வேண்டும். பூஜை முடிந்த பிறகு பூஜைக்கு பயன்படுத்திய சோழி மந்தாரை இலைகளை பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.வாழ்க்கையில் அனைத்து செல்வ நலன்களையும் பெற்றுத் தரக்கூடிய இந்த வழிபாட்டு முறையை நாளைய மார்கழி மாதத்தில் கடைசி நாளில் தவறவிடாமல் செய்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பொருளாதார தடை நீங்க சமையலறை பரிகாரம்

இதன் மூலம் வரும் தை மாதம் உங்களுக்கு சிறப்பானதாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்கள் பொருளாதார நிலையும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் இந்த வழிப்பாட்டு முறையில் நம்பிக்கை இருக்கு நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -