உங்கள் வீட்டில் துளசி மாடம் உள்ளாதா? அப்படியானால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் உங்களுக்காக காத்திருக்கிறது. துளசி செடியுடன் இதையும் சேர்த்து வைத்தால் எங்கிருக்கும் அதிர்ஷ்டமும் உங்கள் வீடு தேடி வந்து விடும்.

mahalshmi thulasi
- Advertisement -

நம் முன்னோர்கள் முதலே வீட்டில் துளசி செடியை வைத்து வழிபடும் முறையை கடைப்பிடித்து வந்தனர். இன்றைய கால சூழ்நிலையில் பலரும் இதை செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்த துளசி செடியை வீட்டில் வைத்து வழிபடுவது வீட்டிற்கு அத்தனை பெரிய யோகத்தை கொடுக்கும். இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் துளசி செடியுடன் நாம் இன்னொரு பொருளையும் சேர்த்து வைத்து வணங்கி நம்முடைய செல்வ நிலையை அதிகரித்துக் கொள்ள முடியும் என்ற தகவலை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

துளசி செடியானது மகாலட்சுமி தாயாராகவே பாவிக்கப்படுகிறது. ஆகையால் தான் இந்த துளசி செடி மிகவும் பவித்திரம் வாய்ந்ததாகவும் தெய்வீக தன்மை நிறைந்ததாகவும் இருக்கிறது. இத்தகைய காரணங்களால் தான் பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் துளசிச் செடியை வைத்து அதற்கென தனியாக வழிபாடும், தீபம் ஏற்றி வணங்கும் முறைகளும் செய்யப்படுகிறது. இப்போது இந்த துளசி செடியை வழிபாட்டுடன் நம் வீட்டில் செல்வம் அதிகரிக்க செய்ய வேண்டியது என்னவென்று பார்க்கலாம்.

- Advertisement -

வீட்டில் செல்வ செழிப்பை அதிகரிக்க துளசி செடி வழிபாடு
பொதுவாகவே வெள்ளிக்கிழமையில் துளசி செடி வைத்திருக்கும் தொட்டிக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இத்துடன் தினமும் துளசி செடியின் தண்டும் மண்ணும் இணையும் அந்த இடத்தில் இருக்கும் மண்ணை நெற்றியில் வைத்து வந்தால் நம் நினைக்கும் காரியம் அனைத்தும் சித்தியாகும்.

அதே போல இந்த துளசி செடியை வைத்திருக்கும் தொட்டியின் அடிப்பாகத்தில் சிறிய நெல்லி மர துண்டை வைத்து அதன் மேலே மண்ணை போட்டு துளசி செடியை வைக்க வேண்டும். இன்னொரு நெல்லி மரத் துண்டை துளசி செடியின் அருகிலே துளசிச் செடியின் தண்டு படும்படி புதைத்து வைத்து விட வேண்டும். இப்படி வைத்த பிறகு இந்த துளசி செடிக்கு வெள்ளிக்கிழமை தோறும் மஞ்சள் கலந்த தண்ணீரால் சுத்தம் செய்த பிறகு வாசனை மிக்க மலரை வைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சிறிய பட்டலான ஜரிகை துணியை அதில் கட்டி நெய்வேத்தியம் வைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

- Advertisement -

துளசி செடி எப்படி மகாலட்சுமி தாயாரின் அம்சமாக பார்க்க படுகிறதோ, அதே போல நெல்லின் மரம் விஷ்ணு பகவானின் அம்சமாக பார்க்கப்படுகிறது. நம் வீட்டில் துளசி தொட்டியில் செடியும் நெல்லி மர துண்டும் ஒன்றாக இருப்பது விஷ்ணு பகவானும் மகாலட்சுமி தாயாரும் தம்பதி சமேதராக நம் வீட்டில் வந்து அமர்ந்து நமக்கு ஆசிர்வாதத்தை தருவது போன்ற ஆகும். இந்த இருவரையும் நாம் ஒன்றாக இது போல வைத்து வணங்கி வரும் போது நம்முடைய வீட்டின் செல்வம் நிலை பல மடங்கு உயர்ந்து நம்மை தேடி அதிர்ஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: சர்க்கரையோடு எப்போதும் இந்த 1 பொருள் சேர்ந்து இருந்தால், வீட்டு பெண்களின் கையில் எப்போதும் பணப்புழக்கம் தாறுமாறாக புரளும்.

வீட்டில் துளசி செடி வைத்து வழிபாடு செய்பவர்கள் இனி மேல் இந்த முறையில் அந்த வழிபாட்டை செய்து வரும் போது மேலும் பல பலன்களை பெறுவதுடன், வாழ்க்கையில் சகலவிதமான செல்வ வளங்களையும் பெற்று வாழலாம்.

- Advertisement -