செல்வத்தை அள்ளித்தரும் கோபூஜை எப்படி முறையாக செய்ய வேண்டும் என்று தெரியுமா?

ko
- Advertisement -

நாம் வெளியில் நடந்து செல்லும்பொழுது பசுவினை கண்டால் ஒரு சிலர் தொட்டு வணங்குவதை கண்டிருப்போம். இதற்கான காரணம் என்னவென்றால் பசு எப்போதும் மகாலட்சுமி தேவியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால்தான் புதுமனை புகுவிழாவின் பொழுது முதலில் வீட்டிற்குள் பசுவினை வரவழைத்து பூஜை செய்கின்றனர். பசு நமது வீட்டிற்குள் நுழைவது மகாலட்சுமி தேவியே வீட்டிற்குள் நுழைவதற்கு சமமாகும். இவ்வாறு தெய்வாம்சம் பொருந்திய கோமாதாவை எவ்வாறு வழிபட்டால் நன்மைகள் உண்டாகும் என்பதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cow

கோமாதாவின் உடல் முழுவதும் அனைத்து தெய்வங்களும், தேவர்களும், முனிவர்களும் குடி கொண்டிருப்பதாக நமது புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வகையில் கோமாதாவின் பின் புறத்தில் தான் மகாலட்சுமியின் இடம் இருப்பதாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே அனைவரும் பசுவினை கண்டால் அதன் பின்புறத்தில் தொட்டு வணங்குகின்றனர். பசுவின் எந்த பகுதியை தொட்டு வணங்கினாலும் நமக்கு புண்ணியங்கள் கிடைக்கும். கோமாதாவை தொடர்ந்து வணங்கி வந்தாலே நமது பிரச்சினைகள் தீர்ந்து வீடு எப்போதும் செல்வச் செழிப்புடன் இருக்கும். இவ்வாறு செல்வ வளங்களை அள்ளித்தரும் கோ பூஜையை நமது வீட்டிலோ அல்லது ஆலயங்களுக்கு சென்றோ செய்து வருவது மிகவும் நன்மையை அளிக்கும்.

- Advertisement -

கோபூஜை வழிபடும் முறை:
வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர ஓரையில் கோமாதா பூஜை செய்வது அனைத்து செல்வ வளங்களை அள்ளித் தரும். வெள்ளிக்கிழமை அன்று பசுவிற்கு அகத்திக்கீரை வாங்கி கொடுப்பது பித்ரு தோஷம் நீங்கி எவ்வாறு நமக்கு நன்மையை அளிக்கிறதோ அது போதும் பசுவை குழந்தையாய் பாவித்து அதற்கு அருகம்புல் வாங்கி உண்ணக் கொடுப்பது நமக்கு இருக்கும் தோஷங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்து புண்ணிய பலன்களை கொடுக்கும். இதற்காக பசுவினை வெளியே தேட வேண்டிய அவசியம் இருக்காது. வெள்ளிக்கிழமை அன்று அனைத்து கோவில்களிலும் கோ பூஜை நடைபெறும். அங்கு சென்று பசுவிற்கு உணவு வாங்கி கொடுக்கலாம்.

cow

அதேபோல் வெள்ளிக்கிழமை தோறும் வீட்டிலிருக்கும் வெள்ளி, தங்கம் அல்லது மண்ணால் செய்யப்பட்ட கோ மாதாவிற்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, மலர்கள் சூடி ஏதேனும் இனிப்பை நைவேத்தியமாக படைத்து ஓம் எனும் மந்திரத்தை 108 முறை சொல்லி கோமாதாவை மனதார வேண்டிக் கொண்டால் உங்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளித் தருவாள்.

- Advertisement -

ஒரு சிலர் இந்த கோ மாதா சிலையை தனது பூஜை அறையில் எங்கு வைப்பது எந்த திசையை பார்த்து வைப்பது என்ற சந்தேகத்துடன் இருப்பார்கள். கோமாதா சிலையின் முகம் எப்பொழுதும் பூஜை அறையின் மேற்கு திசை நோக்கியும் அதன் வால் பகுதி கிழக்கு திசை நோக்கியும் இருக்குமாறு வைக்க வேண்டும். இவ்வாறு வைத்து பூஜை செய்வது வீட்டிற்கு விசேஷ பலனைக் கொடுக்கும்.

ko1

அதேபோல் கோ பூஜை செய்வதற்கான சிறந்த தினமான மாட்டுப் பொங்கல் தினத்தன்று இந்த பூஜையை நாம் செய்து வருவதால் நல்ல பலனை பெற முடியும். நமது தலைமுறைகள் தழைத்து வளர மாட்டுப் பொங்கலன்று கோபூஜை தவறாமல் செய்திட வேண்டும். எப்பொழுது பசுவினை கண்டாலும் அதனை வணங்கி, அதற்கு உணவு அளிப்பது நமக்கு புண்ணியத்தை சேர்க்கும்.

- Advertisement -