- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபெண்கள் சமையலறையில் இந்த 2 விஷயங்களை மறக்காமல் செஞ்சு பாருங்க! சேமிப்பு உயர்ந்து செல்வ மழை...

பெண்கள் சமையலறையில் இந்த 2 விஷயங்களை மறக்காமல் செஞ்சு பாருங்க! சேமிப்பு உயர்ந்து செல்வ மழை பொழியும்.

- Advertisement -

பெண்கள் சமையல் அறையில் எப்பொழுதும் ஆளுமை செலுத்துகின்றனர். எனவே நீங்கள் ஆளுமை செலுத்தும் இந்த சமையலறையில் இந்த இரண்டு விஷயங்களை செய்து வைக்கும் பொழுது சேமிப்பது பன்மடங்கு உயர்வதாக ஐதீகம் உண்டு. சமையலறையில் அன்னபூரணியும், மஹா லக்ஷ்மியும் வாசம் செய்கின்றனர். எனவே தன, தான்யத்திற்கு குறைவில்லாமல் இருக்க சமையலறையில் நாம் செய்ய வேண்டிய இந்த இரண்டு விஷயங்களை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

kitchen2

சமையலறையில் இருக்கும் இனிப்பு பொருட்களில் மகாலட்சுமி வாசம் செய்கின்றாள். இந்த வகையில் நீங்கள் சமையலறையில் வைத்திருக்கும் சர்க்கரை மற்றும் வெல்லத்தில் மகாலட்சுமி இருக்கின்றாள். ஒரு சிறிய அளவிலான கண்ணாடி பௌலில் வெல்லம் அல்லது சர்க்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பணத்தை ஈர்க்கும் பட்டை ஒன்றை பெரிதாக எடுத்து சொருகி வைத்துக் கொள்ளுங்கள். இதனை திறந்த நிலையில் உங்கள் வீட்டு சமையலறையில் ஏதாவது ஒரு மூலையில் வைக்க வேண்டும்.

- Advertisement -

எறும்பு தொல்லை ஏற்படாமல் இருக்க இந்த பௌலை சுற்றிலும் எறும்பு சாக்பீஸ் போட்டு வைக்கலாம் அல்லது ஒரு சிறிய அளவிலான தட்டில் தண்ணீர் ஊற்றி அதன் மீது இந்த கண்ணாடி பவுலை வைக்கலாம். இதனால் எறும்புகள் வராமல் இருக்கும். வாரம் ஒருமுறை இதில் இருக்கும் சர்க்கரை அல்லது வெல்லத்தை நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இதனால் குடும்பத்தில் இருக்கும் கசப்பான விஷயங்கள் நீங்கி இனிப்பான நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது நம்பிக்கை. மேலும் சமையலறையில் இருக்கும் அஞ்சரை பெட்டியில் எப்பொழுதும் எல்லா வகையான பொருட்களுடன் கண்டிப்பாக சோம்பு இருக்க வேண்டும்.

anjarai-petti

அஞ்சறைப் பெட்டியில் சோம்பு இருப்பது விசேஷமான பலன்களைக் கொடுக்கக் கூடிய அமைப்பாகும். சோம்பு பணத்தை ஈர்க்கும் அதீத சக்தி வாய்ந்த பொருள் ஆகும். எனவே கண்டிப்பாக அஞ்சறைப் பெட்டியில் சோம்பு இருந்தால் மடமடவென உங்களுடைய சேமிப்பு உயரும் என்பது நம்பிக்கை. சமையலறையில் நீங்கள் ஒரு உண்டியலை வைக்க வேண்டும். நீங்கள் வாங்கும் உண்டியல் மற்ற அறைகளை காட்டிலும் சமையலறையில் வேகமாக நிறையும் என்பது நிதர்சனமான உண்மை. கிடைக்கும் சில்லறைகள், நோட்டுகளை சேகரித்து வந்து கொண்டே இருந்தால் காலப்போக்கில் உங்களை அறியாமல் நீங்கள் சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல பெரிய தொகையை சேமித்து வைத்திருப்பீர்கள்.

- Advertisement -

எனவே சமையலறையில் உண்டியலை வைத்து சேமிப்பது சிறப்பு. அதே போல அஞ்சறைப் பெட்டியில் இருக்க வேண்டிய இன்னொரு முக்கியமான பொருள் ஏலக்காய். ஏலக்காயும் பணத்தை ஈர்க்கக்கூடிய அதீத சக்தி வாய்ந்த பொருளாகும். மேலும் இதன் மணம் மகாலட்சுமியை வீட்டிற்கு வரவழைக்கும். எனவே அஞ்சறைப் பெட்டியில் ஏலக்காய் இருப்பது நல்லது. ஆனால் இதன் மணம் வெகு விரைவில் போய்விடும் என்பதால் அதனை காற்று புகாத கண்டெய்னரில் வைப்பது வழக்கம். எனவே ஒன்றிரண்டு ஏலக்காய்களை அஞ்சறை பெட்டியில் வையுங்கள். அதே போல அஞ்சறைப் பெட்டியில் கட்டாயம் சில்லரை நாணயங்களைப் போட்டு வைக்க வேண்டும்.

mahalakshmi1

சில்லறை நாணயங்கள் மகாலட்சுமியின் அம்சமாகும். அஞ்சறைப் பெட்டியை இப்படி சோம்பு, சில்லரை நாணயங்கள், ஏலக்காய் மணம் கொண்டதாக வைத்திருந்தால் அங்கு மகாலட்சுமி நிரந்தரமாக குடியேற, நீங்கள் சேமிக்கும் தொகையானது பன்மடங்கு பெருகும். இவற்றுடன் ஒரு துண்டு மஞ்சள் கிழங்கையும் அதில் வைத்துக் கொள்ளலாம். மஞ்சள் மங்களகரமான அம்சம் என்பதால் சுபகாரியத் தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சம் நிலைக்கும். சாதாரண சமையலறையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? என்பது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இந்த சாதாரண விஷயத்தை நம்பிக்கையுடன் கடைபிடித்து பாருங்கள், நல்லதே நடக்கும்.

சற்று முன்