சேமிப்பு அதிகரிக்க பணப்பட்டி ரகசியம்

mahalashmi2
- Advertisement -

பணத்தை சேமித்து வீட்டில் எந்த இடத்தில், எப்படி வைத்தாலும் அதற்கான செலவு தேடி வருகிறது. சேமித்த பணம் செலவாகும் வரை, பிரச்சனை ஓய்வதே இல்லை. வரக்கூடிய வருமானத்தை பத்திரமாக சேமித்து வைக்க என்ன தான் வழி என்று கேட்பவர்களுக்கு என்று ஆன்மீகம் சார்ந்த ஒரு சிறப்பான வழியை தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உங்களுடைய வீட்டில் நீங்கள் சேமித்து வைக்கும் பணத்தை இந்த பெட்டிக்குள் வைத்தால் அந்த பணம் மகாலட்சுமி தேவியின் பாதுகாப்பில் பத்திரமாக உங்கள் வீட்டிற்குள் இருக்கும். அது என்ன பெட்டி அந்த பெட்டிக்குள் பணத்தை எப்படி வைப்பது பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

பணத்தை சேமிக்க பணப்பெட்டி ரகசியம்

பணத்தை சேமித்து வைக்க நீங்கள் மா மரத்தினால் செய்யப்பட்ட மரப்பெட்டியை வாங்க வேண்டும். மாமரத்தை வாங்கிக் கொடுத்து ஆசாரியிடம் பணப்பெட்டி செய்து கொண்டாலும் சரிதான். சிறிய அளவில் உங்களுக்கு தேவையான அளவு இந்த மரப்பெட்டியை தயார் செய்து கொள்ளுங்கள். மா என்பது மகாலட்சுமியை குறிக்கக்கூடிய வார்த்தையாக சொல்லப்பட்டுள்ளது.

அந்த மாமரத்தில் சுக்கிர பகவானும், மகாலட்சுமி தேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் தான் மாஇலை தோரணத்தையும் கொண்டு வந்து நம் வீட்டு வாசல் படியில் மகாலட்சுமி குடியேறுவதற்காக கட்டி வைக்கின்றோம்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் பூஜை அறை தனியாக இருந்தால் அந்த பூஜை அறையிலேயே பீரோ வைத்து அந்த பீரோவுக்குள் இந்த மாமர பெட்டியை வைத்து பணம் நகைகளை அந்த பெட்டிக்குள் வைத்து பத்திரப்படுத்தி வைக்கும் போது அந்த பணம் பல மடங்காக பெருகும். சேமித்த பணம் வீண் விரைய செலவு ஆகாது.

அந்த மாமர பெட்டிக்குள் வெட்டிவேர், ஏலக்காய், சிறிது குங்குமப்பூ, கொஞ்சமாக வெந்தயம், இந்த நான்கு பொருட்களையும் அப்படியே போட்டு வைக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக இந்த நான்கு பொருட்களை அந்த பெட்டிக்குள் போட்டால் போதும். எந்த துணியிலும் வைத்து முடிச்சாக கட்டி போட வேண்டாம்.

- Advertisement -

இதனுடைய சக்தி நேராகவே அந்த பெட்டிக்குள் நிரம்பி இருக்கும் பட்சத்தில் உங்கள் பணப்பெட்டியில் பணம் மேலும் மேலும் பெருகும். இந்த பெட்டிக்குள் வைக்கக்கூடிய தங்கம் வெள்ளி எல்லாம் பல மடக்காக பெருகும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. வாரந்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையில் மகாலட்சுமிக்கு பூஜை செய்வீங்க.

இதையும் படிக்கலாமே: கடன் தீர ஏற்ற வேண்டிய தீபம்

அதோடு சேர்த்து இந்த மாமர பெட்டிக்கு உள்ளே இருக்கும் பணத்திற்கும் தீப தூப ஆராதனை காண்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெள்ளிக்கிழமை பூஜையில் மாதுளம் பழத்தை நிவேதியமாக வைத்து பூஜை முடிந்தவுடன் அந்த பழத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பிரசாதமாக சாப்பிட வேண்டும். மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றினாலே போதும் உங்களுடைய வீட்டில் பணம் நகை பல மடங்காக பெருகும். வீண்விரய செலவுகள் குறையும்.

- Advertisement -