உங்கள் ஜாதகத்தில் இந்த கிரகங்கள் சேர்க்கை ஏற்படுத்தும் பலன் என்ன தெரியுமா?

astro

ஒரு மனிதனின் வீரம், சகோதரர், ரத்தம் போன்றவற்றிற்கு காரகத்துவம் வகிக்கும் கிரகம் செவ்வாய் கிரகம். அதே போன்று மனிதனின் ஆயுட்காலம், அவனது செயல் திறன், மனோதிடம் ஆகியவற்றிற்கு அதிபதியாக சனி பகவான் இருக்கிறார். செவ்வாய் மற்றும் சனி கிரகம் ஒன்றுக் கொன்று பகைமை கொண்ட கிரகங்களாகும். இப்படி பகைமை உள்ள இந்த இரு கிரகங்களும் ஒரே நபரின் ஜாதகத்தில் லக்னம் முதல் 12 வீடுகளிலும் சேர்க்கை பெற்றிருந்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதையும், அதற்கான பரிகாரம் என்ன என்பது குறித்தும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

sevvai

லக்னத்தில் செவ்வாய், சனி சேர்ந்திருந்தால் உடல்நலம், கௌரவம் போன்றவை பாதிப்பிற்குள்ளாகிறது. தேவை இல்லாத குழப்பங்கள், மன உளைச்சல் ஏற்படும். லக்னத்திற்கு 2 ஆம் வீட்டில் செவ்வாய்-சனி சேர்க்கை குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் எப்போதும் சண்டை ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும். தாயாரின் உடல்நிலையும் பாதிக்கும்.3ஆம் வீடு சகோதர பாவம் எனப்படும். இங்கு செவ்வாய்-சனி சேர்க்கை பெறுவதால் சகோதரர்களின் ஒற்றுமை குறைக்கிறது.

லக்கினத்திற்கு 4ஆம் வீட்டில் செவ்வாய்-சனி சேர்ந்திருந்தால் கல்வியை முழுமையாக முடிக்க முடியாத நிலை ஏற்படும். மேலும் தாயாருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கும். வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படும். சமயங்களில் வாகன விபத்தும் ஏற்படலாம். ஜாதகருக்கு நோய் மற்றும் கடன்கள் பெருகும்.லக்னத்திற்கு 5ஆம் வீட்டில் செவ்வாய்-சனி இருந்தால் குழந்தைகளின் உடல்நலம், கல்வி பாதிப்பிற்குள்ளாக்கும். பூர்வீக சொத்து தொடர்புடைய வழக்குகள் ஏற்படும். ஜாதகருக்கு இதய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாகிறது. லக்கினத்திற்கு 6ல் செவ்வாய்-சனி இருந்தால் மிகுதியான கடன்சுமை அழுத்தும். உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் உண்டாகும்.

sevvai

லக்னத்திற்கு 7ஆம் வீட்டில் செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றால் ஜாதகருக்கு திருமண தடை உண்டாக்கும். அப்படியே திருமணம் நடந்தாலும் தம்பதிகளுக்குள் ஒற்றுமை இருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் பிரச்சனைகள் தோன்றும். வீட்டில் கணவன் அல்லது மனைவிக்கு உடல்நலக்குறைவு உண்டாகும் லக்னத்திற்கு 8 ஆம் வீட்டில் செவ்வாய்-சனி இருந்தால் அரசாங்கத்துடன் விரோதம் உண்டாகும். அடுத்தவருக்கு முன்பின் ஆலோசிக்காமல் ஜாமீன் கொடுத்து ஜாதகர் நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய நிலையும் உண்டாகும். லக்னத்திற்கு 9 ஆம் வீட்டில் செவ்வாய்-சனி இணைந்தால் சொத்து வாங்கும் விஷயத்தில் பிறரால் ஏமாற்றப்படும் சூழல் ஏற்படுவதால் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் அந்நாட்டில் மிகவும் கஷ்டப்படவேண்டியிருக்கும். தந்தை – மகனுக்கிடையே பிரச்சனைகள் தோன்றும்.

- Advertisement -

Sani baghavan

லக்னத்திற்கு 10 ஆம் வீட்டில் செவ்வாய்-சனி இருந்தால் தொழில்துறையில் கடுமையான போட்டியை உண்டாக்கும். மேல் அதிகாரிகளின் உதவி உங்களுக்கு கிடைக்காது. நிரந்தரமான தொழில், வேலை அமையாது. லக்னத்திற்கு 11ஆம் வீட்டில் செவ்வாய்-சனி இருந்தால் மூத்த சகோதரருக்கு பிரச்சினைகள் உண்டாக்கும். ஜாதகருக்கும் உடல்நிலை பாதிக்கும். லக்னத்திற்கு 12 ல் செவ்வாய்-சனி இணைந்தால் வீண் வழக்கு- வம்பு ஜாதகரை தேடி வந்த வண்ணம் இருக்கும். நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் ஜாதகருக்கு இருக்காது.

sani bagavaan

ஜாதகத்தில் செவ்வாய்-சனி கிரகங்களின் சேர்க்கையில் உண்டாகும் பாதிப்புக்கு முருகப்பெருமானையும், விநாயகரையும், மகா விஷ்ணுவையும் வணங்க வேண்டும். செவ்வாய்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் படித்து வர வேண்டும். செவ்வாய்-சனி சேர்க்கையால் உண்டாக்கக்கூடிய பாதிப்புகள் கட்டுப்படும். ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் முருகப் பெருமானையும், ஸ்ரீமன் நாராயணன் எனப்படும் பெருமாளையும் வழிபட்டு வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
திருமண ஜாதகத்தில் இவை முக்கியம் ஏன் தெரியுமா?

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sevvai sani serkai remedy in Tamil. It is also called as Sevvai sani serkai palan in Tamil or Sevvai graham in Tamil or Sani graham in Tamil.