என்னதான் கடவுள் மீது தீராத பக்தி வைத்திருந்தாலும், நம்மையும் அறியாமல் சில தவறுகளை செய்து விடுகிறோம். அவற்றை அறிந்து கொண்டு உடனே சரி செய்து பாருங்கள், நல்ல மாற்றம் உண்டாகும்

kovil
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் தங்கள் வாழ்க்கையில் பல கட்டங்களில் பலவித பிரச்சினைகளை சமாளித்து வருகிறான். ஒரு சில நேரங்களில் அவனையும் மீறி மனதிற்கு வேதனையாக இருக்கும் பொழுது பலரும் தங்களை தெளிவுபடுத்திக்கொள்ள செல்லும் ஒரே இடம் கோவில் மட்டும் தான். இங்கு சென்று சுவாமியை தரிசித்து, நமது மனக் குறைகளை அவரிடம் சொல்லி வீடு திரும்பும்போதுதான் நமது மனது லேசாக மாறுவது போல் தோன்றும். அது மட்டுமல்லாமல் பிரச்சனைகள் அனைத்தும் கூடிய விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் உண்டாகும். எனினும் இவ்வாறு கடவுள் மீது பக்தி கொண்டு இருக்கும் நாம், நம்மையும் அறியாமல் சாமி கும்பிடும்போது வீட்டிலும், கோவிலிலும் செய்யக்கூடிய சில தவறுகளால் நமது வேண்டுதல்கள் நிறைவேறாமல் போய் விடுகிறது. அவை என்னென்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் கோவிலுக்குள் செல்லும் பொழுது கோவிலின் வாசலில் இருக்கும் படிகட்டு போன்ற பகுதியை கைகளால் தொட்டு கும்பிட்டு, தாண்டி செல்ல வேண்டும். சிலர் அதன்மீது ஏறி செல்வதும், நின்று கொண்டிருப்பது என செய்வார்கள். இதனை செய்வது மிகவும் தவறான காரியமாகும். அவ்வாறு கோவிலில் விளக்கு ஏற்றுவதற்கு என்று கொடுக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் விளக்கை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பின்னர் சுவாமி சிலைகளில் மீது படுமாறு விளக்கை ஏற்றி வைக்கக் கூடாது. அவ்வாறு சுவாமி சிலைகளை கைகளால் தொட்டு கும்பிட கூடாது, அடுத்ததாக கோவிலுக்கு செல்வதாக இருந்தால் வீட்டில் கோலமிட்டு, விளக்கேற்றி பூஜை செய்த பிறகு தான் கோவிலுக்கு செல்ல வேண்டும். அதைப்போல் விளக்கு எரியும் பொழுது அதில் இருக்கும் நெய் மற்றும் எண்ணெயை கைகளால் தொடக் கூடாது.

ஒரு சிலர் எண்ணெயை கைகளால் தொட்டுவிட்டு, அதனை தலையில் தேய்த்துக் கொள்வார்கள். இவ்வாறு செய்வது மிகவும் தவறான காரியம். சுவாமி படங்களில் இருக்கும் காய்ந்த மலர்களை அப்படியே விட்டுவிடாமல், உடனே அகற்ற வேண்டும். அதேபோல் கோவிலுக்கு சென்றால் சிறிது நேரம் அமர்ந்து விட்டு தான் எழுந்து வருவோம்.

- Advertisement -

ஆனால் விஷ்ணு கோவிலுக்கு சென்று வரும் பொழுது மட்டும் அங்கு அமராமல் உடனே வர வேண்டும், ஏனென்றால் மகாலட்சுமி தேவியும் நம்முடன் சேர்ந்து வருவார்கள். அதைப்போல் ஸ்வஸ்திக் சின்னம், ஓம் சின்னம், விநாயகர்படம் இவற்றை வாசலில் வைப்பது மிகவும் நன்மையை கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்வதும் வீட்டிற்கு நல்ல உயர்வை கொடுக்கிறது.

இவ்வாறு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள் செய்யும் பொழுது அதற்கு உரிய நபர்கள் வீட்டில் உறங்கக் கூடாது. ஒரு சிலர் வீட்டில் பூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது, படுக்கையை விட்டு எழுந்திருக்காமல், குளிக்காமல் அப்படியே இருப்பார்கள். இவ்வாறு செய்வது வீட்டிற்கு நல்ல பலனை கொடுப்பதில்லை. எனவே இதுபோன்ற தவறுகளை சரி செய்துகொள்வது நமக்கும், நமது குடும்பத்திற்கு நன்மையைக் கொடுக்கும்.

- Advertisement -