பூஜையில் முழு பலனை பெற பரிகாரம்

mahalashmi1
- Advertisement -

இறைவனை நினைத்து, பூஜை அறையில், பூஜை செய்யும் போது அந்த பூஜையில் எந்த ஒரு குறையும் இருக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல் பூஜையில் நாம் அறியாமல் செய்யும் தவறுகளின் மூலம் எந்த ஒரு தோஷமும் நம் குடும்பத்திற்கு ஏற்பட்டு விடக்கூடாது. அந்த காலத்தில் வீட்டில் பெரியவர்கள், மூத்தவர்கள் இருப்பார்கள். எந்த பூஜையை எப்படி செய்ய வேண்டும், எந்த சாமியை எப்படி கும்பிட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.

அவர்களுடைய குடும்ப வழக்கத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்து வந்தார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலை அப்படி கிடையாது. நம்முடைய அம்மா எப்படி சாமி கும்பிட்டாங்கன்னு நமக்கு தெரியாது. நம்முடைய பாட்டி எப்படி சாமி கும்பிட்டாங்கன்னு நமக்கு தெரியாது. நமக்கு தெரிஞ்ச முறையில், நமக்கு கிடைத்த பொருட்களை வைத்து மன நிறைவோடு இறைவழிபாடு செய்கின்றோம். வீட்டில் பூஜை செய்கின்றோம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால் அந்த பூஜை முழுமை அடைந்ததா என்பதில் தான் கேள்விக்குறியே இருக்கிறது.

- Advertisement -

சாஸ்திர சம்பிரதாய முறைப்படி செய்யாத ஒரு பூஜையின் மூலம் நம் குடும்பத்திற்கு எந்த ஒரு தோஷமும், பிரச்சனையும் வந்து விடக்கூடாது. அந்த வகையில் உங்களுடைய வீட்டில் செய்யக்கூடிய பூஜை முழு பலனை தரவும், அதேசமயம் அறியாமல் நீங்கள் பூஜையில் செய்யும் தவறுகளின் மூலம் உங்கள் குடும்பத்திற்கு எந்த தோஷமும் ஏற்படாமல் இருக்கவும், பூஜையில் கட்டாயம் வைக்க வேண்டிய ஒரு பொருளை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

செய்யும் பூஜையில் முழு பலனும் கிடைக்க

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை பூஜை செய்தாலும் சரி, அந்த பூஜையில் கட்டாயமாக வெற்றிலை பாக்கு பழம் பூ இருக்க வேண்டும். தாம்பூலம் இல்லாமல் செய்யக்கூடிய ஒரு பூஜையானது நிறைவான பூஜையாக இருக்காது என்று சொல்கிறது சாஸ்திரம். ஆனால் இன்று நாம் வெற்றிலை பாக்கு வைத்து பெரும்பாலும் வெள்ளிக்கிழமை பூஜையை செய்வதை கிடையாது.

- Advertisement -

அதை வாங்கினால் யாரும் சாப்பிட ஆள் இல்லை. வீணாகப் போகிறது என்று வெற்றிலை பாக்கு வாங்குவதையே தவிர்த்து விட்டோம். வெள்ளிக்கிழமை பூஜை ஆனாலும் சரி, கட்டாயம் அந்த பூஜையில் வெற்றிலை பாக்கு இருக்க வேண்டும். அதிலும் கொட்டை பாக்கு வைத்து பூஜை செய்வது சிறப்பு.

இதோடு சேர்த்து ஒரு சின்ன கிண்ணத்தில் எப்போதுமே ஒரு குண்டு மஞ்சள் பூஜை அறையில் இருக்க வேண்டும். அந்த குண்டு மஞ்சளுக்கு மேல் கொஞ்சமாக சந்தனம் வைத்து, கொஞ்சமாக குங்குமம் வைத்து, பூஜை அறையில் வைத்து விடுங்கள். எப்போது நீங்கள் பூஜை செய்தாலும் சரி, உங்கள் பூஜையில் இந்த குண்டு மஞ்சள் இருக்க வேண்டும். குண்டு மஞ்சளுக்கு தோஷத்தை விளக்கக்கூடிய சக்தி இருக்கிறது.

- Advertisement -

பூஜையில் அறிந்தோ அறியாமலோ நீங்க ஏதோ ஒரு தவறு செஞ்சுட்டீங்க, ஆனா அதன் மூலம் எந்த தோஷமும் உங்கள் குடும்பத்திற்கு வரக்கூடாது. உதாரணத்திற்கு சாமிக்கு போட அவசரத்திற்கு வாசம் நிறைந்த பூ கிடைக்கவில்லை, அல்லது வெற்றிலை பாக்கு உங்களால் வாங்கி வைக்க முடியவில்லை, எனும் பட்சத்தில் இதையெல்லாம் சரிகட்ட இந்த 1 குண்டு மஞ்சள் உங்கள் பூஜையில் இருந்தால் போதும்.

மஞ்சளுக்கு தோஷத்தை நீக்கக்கூடிய சக்தி இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பூஜையில் இந்த மஞ்சள் இருக்கும் போது உங்களுடைய வேண்டுதல் சீக்கிரம் பலிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எந்த ஒரு கெட்ட சக்தியாலும், எந்த ஒரு எதிர்மறை ஆற்றலினாலும் உங்களுடைய பூஜை பாதிக்கப்படாது. இறையருள் முழுமையாக கிடைக்க உங்கள் உடைய வீட்டு பூஜை அறையில் நீங்கள் செய்யும் பூஜையில் கட்டாயம் இனிமேல் குண்டு மஞ்சளை வச்சுக்கோங்க.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் கருமஞ்சள் பரிகாரம்

இந்த குண்டு மஞ்சளை உரசி இழைத்து தான் பெண்கள் முகத்தில் பூசிக் கொள்வார்கள். பெண்கள் இந்த மஞ்சளை தங்கள் சருமத்தில் பூசுவதன் மூலம் அந்த பெண்களுக்கு எந்த ஒரு தோஷமும் தாக்காமல் இருக்கும். இப்படி பூஜை அறையில் வழிபாட்டிற்காக வைத்த வைத்த மஞ்சளை, ஒரு மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். பழைய மஞ்சள் வீட்டில் இருக்கும் பெண்கள் உரசி முகத்தில் தேய்த்து குளிக்கலாம். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -