வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்கள் வீட்டிலும் வருமானம் நிரந்தரமாக வரத்தொடங்கும்! வறுமையை விரட்டி, ஐஸ்வர்யத்தை நிலை நிறுத்தக்கூடிய சக்தி வாய்ந்த மந்திரம்.

shivan

இன்று எல்லோருமே இறைவனிடம் பணம் வேண்டும்! பணம் வேண்டும்! என்ற வேண்டுதலை தான் வேண்டிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் அந்தப் பணம் நம் கைக்கு வந்த பின்பு, வீண் விரயம் ஆகாமல் தங்க வேண்டும் என்ற வேண்டுதலை யாருமே வைப்பது கிடையாது. லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் நம் கைக்கு வந்தால் மட்டும் போதுமா? அது சுபகாரியங்களுக்கான செலவாக மாற வேண்டாமா? நம்முடைய கையிருப்பில் தங்க வேண்டாமா? வந்த பணம் வந்த வழியே சென்று விட்டால் அதன் மூலம் பலன் ஏது? நாம் இந்த பிரபஞ்சத்திடம் எதை கேட்கின்றோமோ, அதைத்தான் இந்தப் பிரபஞ்சம் நமக்கு கொடுக்கும்.

cash

பணம் வேண்டும் பணம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தால் பணம் வந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் உங்களுடைய கர்மவினை, உங்களுடைய ஜாதக கட்டம், பணத்தை சேமிப்பில் வைக்க கூடாது, விரயத்தில் செலவழிக்க வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தால், வந்த பணம் நிச்சயம் கையில் தாங்காமல் தான் போகும். ஆக, உங்களுடைய தலையெழுத்தை மாற்ற, வீண் விரயத்தை குறைக்க சேமிப்பை அதிகரிக்க, என்ன வழிபாடு செய்ய வேண்டும். எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பணத்தேவை என்றாலே குபேரரையும் மகாலட்சுமி தேவியும் தான் வணங்குவோம். இருப்பினும் குபேரருக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் செல்வ வளத்தை அள்ளிக் கொடுத்ததே, சிவபெருமான் தான் என்று சொல்கிறது ஒரு வரலாறு. இப்படியாக சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம், நம்முடைய வறுமை நீக்கப்பட்டு, கஷ்ட காலத்தில் இருப்பவர்களுக்கு கூட, கைமேல் பலனை தரக்கூடிய ஒரு வழிபாட்டுமுறை தான் இது. அதற்காக குபேரரையும் லட்சுமி தாயாரையும் வழிபட கூடாது என்று சொல்லவில்லை. சிவபெருமானின் சிறப்பான மந்திரத்தைத் தெரிந்து கொள்வதற்காக சொல்லப்பட்டுள்ள பதிவு இது. யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

shivan

செல்வ செழிப்பை நம்மிடமே நிரந்தரமாக தங்க வைக்கக்கூடிய, ஆதி சிவனின் மந்திரத்தை இன்றைய தினம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுக்கான ஆதிசிவ மந்திரம் இதோ!

- Advertisement -

ஓம் நமசிவாய ஆதி சிவாய சிம் அம் சர்வ
ஐஸ்வர்யமும் மம வசி வசி நம சுவாஹா!

shivan1

இவ்வளவு தாங்க, ரொம்ப கஷ்டத்துல இருக்கிறவங்க, தீராத பண கஷ்டத்தால் அவதிப்பட்டு வருபவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள மந்திரம் தான் இது. உங்களது செல்வ வளம் நிச்சயம் படிப்படியாக உயர, தினமும் காலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. கீழே அமரும் போது சுத்தமான துணியின் மீதோ அல்லது மன பலகையின் மீது அமர்ந்து கொள்ளுங்கள்!

money

எம்பெருமான் ஈசனை மனதார நினைத்து இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து உங்களுடைய வீட்டில் பூஜையை செய்து வாருங்கள் 48 நாட்களுக்குள் வறுமை நீங்கி, வருமானம் அதிகரித்தது, சேமிப்பு உயர்ந்து, நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான வழி நிச்சயம் உங்கள் கண்களுக்கு புலப்பட்டே தீரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் துளசி செடி வைத்திருப்பவர்கள் இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்! வருமானம் தடைபடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.