கேட்ட வரத்தை அருளும் உங்கள் நட்சத்திரத்திற்குரிய சித்தர்கள்.

birthstar-siddhar
- Advertisement -

சித்தர்கள் என்பவர்கள் கடவுளுடன் தொடர்புடையவர்களாக கருதப்படுகிறார்கள். சித்தர்களிடம் எண்ணற்ற சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்கள் இந்த உலகிற்கு தந்தருளிய குறிப்புகள் ஒவ்வொன்றும் அசாதாரணமானவை. மனித அறிவிற்கு அப்பாற்பட்ட சம்பவங்களை சித்தர்கள் நிகழ்த்தி காட்டியுள்ளனர். சித்தர்கள் வாக்கு சிவன் வாக்கு என்ற பழமொழிக்கேற்ப அவர்களின் வாக்கு கட்டாயம் பலிதம் ஆகிவிடும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சித்தர்கள் இருக்கின்றனர். அந்த நட்சத்திரகாரர்கள் அந்த சித்தரை மனதார வணங்கி பிரார்த்தனை செய்தால் கட்டாயம் அந்த சித்தர்கள் தன்னுடைய நட்சத்திரகாரர்களுக்கு கேட்ட வரங்களை வாரி வழங்குவார். எந்த நட்சத்திரக்காரர்களுக்கு எந்த சித்தர்கள் இருக்கின்றனர் என்பதை காணலாம்.

siddhargal

நட்சத்திரம் – சித்தர்கள்:

- Advertisement -

1. அஸ்வினி – காலங்கி நாதர் சித்தர்
– ஜீவசமாதி: கஞ்சமலை & திருக்கடையூர்
2. பரணி – போகர் சித்தர்
– ஜீவசமாதி: பழனிமலை முருகன் சன்னதி

siddhar

3. கார்த்திகை – ரோமரிஷி சித்தர்
– ஜீவசமாதி: இல்லை (காற்றோடு காற்றாக கலந்து விட்டார் என்று கூறப்படுகிறது.)
4. ரோகிணி – மச்ச முனி சித்தர்
– ஜீவசமாதி: திருபரங்குன்றம்
5. மிருகசீரிடம் – பாம்பாட்டி சித்தர் & சட்டமுனி சித்தர்
– ஜீவசமாதி: சங்கரன் கோவில் & திருவரங்கம்
6. திருவாதிரை – இடைக்காடார் சித்தர்
– ஜீவசமாதி: திருவண்ணாமலை
7. புனர்பூசம் – தன்வந்திரி சித்தர்
– ஜீவசமாதி: வைதீஸ்வரன் கோவில்
8. பூசம் – கமலமுனி சித்தர்
– ஜீவசமாதி: திருவாரூர்
9. ஆயில்யம் – அகத்தியர் சித்தர்
– ஜீவசமாதி: திருவனந்தபுரம், குற்றால பொதிகை மலையில் ஒளிவட்டம் வந்து செல்லும்.
10. மகம் – சிவவாக்கியர் சித்தர்
– ஜீவசமாதி: கும்பகோணம்
11. பூரம் – ராமதேவ சித்தர் (யகோபு)
– ஜீவசமாதி: மெக்கா (அரபு நாடு), அழகர் மாலையில் ஒளிவட்டம் வந்து செல்லும்.
12. உத்தரம் – காக பூஜண்ட சித்தர்
– ஜீவசமாதி: திருச்சி உறையூர்

- Advertisement -

Kaagapujandar Siddhar

13. அஸ்தம் – கருவூறார் சித்தர்
– ஜீவசமாதி: கரூர் பசுபதீஸ்வரர் கோவில், தஞ்சை பெரிய கோவிலில் ஒளிவட்டம் வந்து செல்லும்.
14. சித்திரை – புண்ணாக்கீசர் சித்தர்
– ஜீவசமாதி: நண்ணா சேர்
15. சுவாதி – புலி பாணி சித்தர்
– ஜீவசமாதி: பழனி அருகே வைகாவூர்
16. விசாகம் – நந்தீசர் சித்தர் & குதம்பை சித்தர்
– ஜீவசமாதி: காசி & மாயவரம்
17. அனுஷம் – வால்மீகி சித்தர்
– ஜீவசமாதி: எட்டுக்குடி
18. கேட்டை – வியாசர் சித்தர்
– ஜீவசமாதி: இல்லை (காற்றோடு காற்றாக கலந்து விட்டார் என்று கூறப்படுகிறது.)
19. மூலம் – பதஞ்சலி சித்தர்
– ஜீவசமாதி: ராமேஸ்வரம்
20. பூராடம் – ராமதேவ சித்தர் (யகோபு)
– ஜீவசமாதி: மெக்கா (அரபு நாடு), அழகர் மாலையில் ஒளிவட்டம் வந்து செல்லும்.
21. உத்திராடம் – கொங்கணர் சித்தர்
– ஜீவசமாதி: திருப்பதி
22. திருவோணம் – தட்சிணமூர்த்தி சித்தர்
– ஜீவசமாதி: பள்ளிதென்னல், பாண்டிச்‌சேரி

Thirumoolar

23. அவிட்டம் – திருமூலர் சித்தர்
– ஜீவசமாதி: சிதம்பரம்
24. சதயம் – கௌபாலர் சித்தர்
– ஜீவசமாதி: தெளிவாக இல்லை
25. பூரட்டாதி – ஜோதிமுனி சித்தர்
– ஜீவசமாதி: தெரியவில்லை
26. உத்திரட்டாதி – டமரகர் சித்தர்
– ஜீவசமாதி: இல்லை (காற்றோடு காற்றாக கலந்து விட்டார் என்று கூறப்படுகிறது.)
27. ரேவதி – சுந்தரானந்தர் சித்தர்
– ஜீவசமாதி: மதுரை

- Advertisement -

மந்திரம்:
ஓம் குருவே சரணம்
ஓம் குருவே சரணம்
ஓம் குருவே சரணம்
ஓம் ஸ்ரீ அகத்திய சித்த குரு சாமியே, உன் திருவடி சரணம்! சரணம்!

இந்த மந்திரத்தை அவரவர்களுடைய சித்தர் பெயரை மட்டும் மாற்றி உச்சரிக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களின் சித்தர் வியாசர் என்றால் அகத்திய என்ற வார்த்தைக்கு பதிலாக ஓம் ஸ்ரீ வியாச சித்த குரு சாமியே, உன் திருவடி சரணம்! சரணம்! என்று மாற்றி உச்சரிக்க வேண்டும். ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் இதுபோல் தங்களின் சித்தர்களை மனதார நினைத்து அவரின் திருவடியை வணங்கி பிரார்த்தனை செய்வதன் மூலம் உங்களின் கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. பொதுவாகவே நம் அன்றாட வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்து நம்மை காப்பது இந்த சித்தர்கள் தான் என்ற கருத்தும் நிலவி வருகிறது. அந்த நட்சத்திரக்காரர்களுக்கு ஆபத்து நேரும் பொழுது சித்தர்கள் துணை நின்று நம்மை காத்து வருகிறார்கள் எனவே அவரை வேண்டுவதன் மூலம் நமக்கு தேவையான வரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் தொழிலில் இருக்கும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற வேண்டுமா? 6நாள் முருகன் வழிபாடு போதும்.

English Overview:
Here we have 27 birth star and its siddha. 27 natchathira siddhar valipadu Tamil. Natchathirathirkuriya siddhargal in Tamil. Siddhar vazhipadu in Tamil.

- Advertisement -