சித்தரால் உருவாக்கப்பட்ட அதிசய கட்டிடம் – இங்கு தியானித்தால் 7 சக்கரங்களையும் இயக்க முடியும்.

Paradhesi swamigal veedu

ஆதி காலத்தில் மனிதன் தன் உடல்பலமான மனித சக்திக்கு மிஞ்சிய ஒரு சக்தி, இந்த அண்டம் முழுதும் வியாபித்துள்ளது என்பதை நன்கு உணர்ந்து, அத்தகைய சக்திகளுக்கு ஒரு உருவத்தை தந்து அதை இறைவனாக பாவித்து வழிபடலானான். பிற்காலத்தில் ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைந்த “யோகிகள், சித்தர்கள் மற்றும் ரிஷிகள்” அண்டம் முழுக்க இருக்கும் அந்த பிரபஞ்ச சக்தி மனிதனுக்குள்ளேயே இருக்கிறதென்றும், ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சூட்சமமாக இருக்கும் “மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்னேயம் சஹஸ்ரஹாரம்” என்கிற “7 சக்கரங்களை” இயக்குவதன் மூலம் இறையனுபவத்தை பெறமுடியும் என்கிற உண்மையை கண்டுபிடித்தனர். அப்படி எல்லோரும் இறையனுபவத்தை பெறுவதற்காக சித்தர் ஒருவர் கண்டறிந்த ஒன்றை பற்றி இந்த வீடியோவில் பாப்போம் வாருங்கள்.

திருச்சியில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு “பொன்மலை பரதேசி சுவாமிகள்” என்று வாழ்ந்த சித்தர் ஒருவர் மனிதனின் உடலில் சூட்சமமாக இருக்கும் “7 சக்கரங்களை” தியானம் செய்து, இயக்கி எல்லோரும் இறைவனுடன் கலக்கும் நிலையை அடைய, அதற்கேற்ற வித்தியாசமான வடிவமைப்பில் ஒரு கட்டிடத்தை கட்டியிருக்கிறார் அந்த சித்தர். தியானத்தில் “குண்டலினி தியான” முறையே மிகவும் சிறந்தது எனவும், அதில் ஏழு சக்கரங்களில், ஒவ்வொரு சக்கரத்தையும் இயக்குவதற்கென சில பிரத்தியோக யோக முறை, மந்திரங்கள், மூச்சுப்பயிற்சி முறை இருப்பதாகவும், இம்மூன்றையும் சரியாக தியானப் பயிற்சியின் மூலம் ஒன்றிணைத்தால், நாமும் சித்தர்களின் அஷ்டமா சித்திகளை பெற முடியும் என இங்கு தியானம் பயில்பவர்கள் கூறுகிறார்கள்.

இக்கட்டிடத்தில் பாதாளத்தில் தொடங்கி மொட்டைமாடி வரை 7 நிலைகளைக்கொண்ட அடுக்கில் தியான அறைகள் இருக்கின்றன. அதில் அந்த பாதாள அறை முதல் 7 ஆவது அடுக்கு மாடி அறை வரை ஒரு துளை இருக்கிறது. அந்த துளை மூலாதார சக்கரத்திலிருந்து “குண்டலினி சக்தி” மேலெழுந்து 7 ஆவது சக்கரமான “சஹஸ்ரஹாரத்தை” கடந்து பிரபஞ்சத்தில் கலப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிறதாக கூறுகிறார்கள். இந்த கட்டிடத்தை நிர்வகிக்கும் பொன்மலை பரதேசி சித்தரின் பரம்பரையினர்.

மக்கள் பயன்பெற இத்தகைய நுட்பமான கட்டிடத்தை கட்டிய பொன்மலை பரதேசி சுவாமிகள் தன் இறுதிக்காலத்தில் பொதிகை மலைக்கு சென்று அங்கேயே முக்தி அடைந்ததாகவும், பிறகு அவரின் திருவுடலை இங்கே திருச்சிக்கு கொண்டு வந்து சமாதி அமைத்து அவர் வழிபட படுவதாக கூறுகிறார்கள், அவரை குருவாக கருதி அவரை வழிபடும் அவரது சீடர்கள்.