நச்சுனு ஒரு கேரட் ஜூஸ் சும்மா சூப்பரா இப்படி போட்டு ஒருமுறை குடித்து பாருங்க. அடிக்கிற வெயிலுக்கு வேற லெவல் எனர்ஜி கிடைக்கும்.

juice
- Advertisement -

அடிக்கிற வெயிலுக்கு செயற்கையாக பாட்டிலில் அடைத்து இருக்கும் பழச்சாறுகள், குளிர்பானங்களை வாங்கி குடிப்பதைவிட, இயற்கையாகவே நம்முடைய வீட்டில் ஜூஸ் போட்டு குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு கேரட் ஜூஸ் சூப்பராக சுவையாக வித்தியாசமாக நம்முடைய வீட்டிலேயே எப்படி போடுவது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இரண்டு பேர் குடிக்கும் அளவிற்கு பின் சொல்லக்கூடிய அளவுகள் சரியானதாக இருக்கும். இன்னும் நிறைய பேருக்கு நீங்கள் கேரட் ஜூஸை போடுவதாக இருந்தால் இதனுடைய அளவுகளை இன்னும் கொஞ்சம் கூட்டிக் கொள்ளுங்கள் போதும்.

- Advertisement -

முதலில் 250 கிராம் அளவு கேரட்டை எடுத்து தோல் சீவி கொஞ்சம் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரே ஒரு ஏலக்காயை உரித்து உள்ளே இருக்கும் விதைகளில் ஒரு சின்ன விதை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும். நிறைய ஏலக்காய் சேர்க்க கூடாது. ஒரு ஏலக்காய்க்கு உள்ளே இருக்கும் விதையில் பாதி தான் சேர்க்க வேண்டும்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெட்டி வைத்திருக்கும் கேரட், தோல் சீவிய இஞ்சி 1/2 இன்ச், எடுத்து வைத்திருக்கும் ஏலக்காய் விதை, 250ml அளவு ஐஸ் வாட்டரை ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். கேரட்டை நன்றாக மைய விழுது போல அரைத்த உடன் கூடவே இன்னும் ஒரு 250ml அளவு தண்ணீரை ஊற்றி இந்த ஜூஸை அப்படியே வடிகட்டி கொள்ளுங்கள். இரண்டு டம்ளர் ஜூஸ் நமக்கு கிடைத்திருக்கும்.

- Advertisement -

இப்போது இந்த ஜூஸுடன் 4 ஸ்பூன் லெமன் ஜூஸ், 1 ஸ்பூன் சர்க்கரை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் துண்டுகள் 4 சேர்த்து, நன்றாக கலந்து இறுதியாக ஊற வைத்த 1 ஸ்பூன் சப்ஜா விதைகளை இதில் போட்டு கலந்து இரண்டு கண்ணாடி தம்ளரில் ஊற்றி தேவைப்பட்டால் ஐஸ்க்யூப் போட்டு பரிமாறி பாருங்கள். இனிப்பு புளிப்பு காரம் சேர்த்த சூப்பரான கேரட் ஜூஸ் வெயிலுக்கு குடிப்பதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும். (பச்சை மிளகாய் மிக மிகக் குறைந்த அளவு சேர்க்க வேண்டும்.)

இனிப்பு புளிப்பு காரம் ஏலக்காய் வாசம் எல்லாமே அளவோடுதான் இருக்க வேண்டும். மேலே சொன்ன அளவுகளில் கேரட் ஜூஸை போட்டு பாருங்கள் அருமையாக இருக்கும். ஏதாவது ஒரு பொருளினுடைய வாசம் அதிகம் ஆகிவிட்டாலும் ஜூஸ் சரியான பக்குவத்தில் இருக்காது. இந்த அருமையான ஜூஸை உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -