இந்த 5 விஷயங்களை தெரிந்து வைத்திருந்தால் வீட்டு வேலை இன்னும் உங்களுக்கு சுலபமாகுமே!

samaiyal-tips-5
- Advertisement -

சில சமயங்களில் நமக்கு சமையல் அறையில் சமைக்கும் போது அசௌகரியமாக இருக்கும். சில விஷயங்களை எப்படி சரி செய்வது? என்பது தெரியாமல் போய்விடும். இந்த சில குறிப்புகளை தெரிந்து வைத்திருந்தால் தேவையான நேரத்திற்கு நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். அசைவ பிரியர்கள் கண்டிப்பாக இதனை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். நம் வேலையை சுலபமாக்க கூடிய இந்த 5 விஷயங்களை பற்றிய குறிப்புகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

fish

குறிப்பு 1:
அசைவப் பிரியர்கள் அசைவம் சமைக்கும் பொழுது குறிப்பாக இறால், மீன் போன்ற உணவுகளை சமைக்கும் போது அதில் இருந்து வரும் மாமிச வாடை முற்றிலும் நீங்க சுத்தம் செய்த பின்பு, இறுதியாக மஞ்சள் தூள் மற்றும் கல்லுப்பு கலந்து மூன்று முறை அலசலாம். பின்னர் 5 நிமிடத்திற்கு நீங்கள் அரிசி கழுவிய தண்ணீரில் ஊற வைத்து அதன் பின் வடிகட்டி சமைத்தால் கொஞ்சம் கூட நீச்ச வாடை அடிக்காமல் ரொம்பவே சூப்பராக சமைத்து விடலாம்.

- Advertisement -

குறிப்பு 2:
இஞ்சி, பூண்டு பேஸ்ட் எப்பொழுதும் கடையில் வாங்குவதை தவிர்க்கவும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது மொத்தமாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். கடையில் வாங்கினால் நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்க அதனுடன் வினிகர் சேர்த்து இருப்பார்கள். இதனால் அதன் மணம் வித்தியாசப்படும். நீங்கள் வாங்கி இருந்தால் தெரிந்திருக்க கூடும். மணம் மாறாமல், அதன் குணம் மாறாமல் அப்படியே இருக்க இஞ்சி, பூண்டு பேஸ்ட் நாம் வீட்டில் மொத்தமாக அரைக்கும் பொழுது அதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து, கால் டீஸ்பூன் உப்பு போட்டு வைத்தால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

egg

குறிப்பு 3:
சில சமயங்களில் நாம் முட்டை அவிக்கும் பொழுது சரியாக வேகாமல் இருக்கும். இதனால் முட்டையின் தோலை உரிக்கும் பொழுது ஓட்டிக் கொண்டு விடும். முதல் முட்டையை நீங்கள் உரிக்கும் பொழுது உங்களுக்கு இந்த பிரச்சனை இருப்பது தெரிந்து விட்டால், அடுத்து முட்டையை உரிக்காமல் அப்படியே இரண்டு நிமிடம் இடுக்கியால் பிடித்து அடுப்பின் நெருப்பில் காட்டி எடுக்கவும். பின்பு தண்ணீரில் வைத்து ஆற விட்டு உரித்தால் ரொம்பவே சுலபமாக உரிந்து வந்துவிடும்.

- Advertisement -

குறிப்பு 4:
முந்திரி, பாதாம் வைத்துக் கொள்ள தனித்தனியாக டப்பாக்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இனி இல்லை. ஒரு பெரிய டப்பாவை எடுத்துக் கொண்டு அதில் இரண்டு அல்லது நான்கு பாகமாக அட்டையை சொருகி பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நட்ஸ் வகைகளை போட்டு வைத்துக் கொள்ளலாம். நாம் தேடும் பொழுது தனித் தனியாக தேட வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த ஒரு டப்பாவை எடுத்தா எல்லாம் நட்ஸூம் நமக்கு கிடைத்துவிடும். தேவையான நட்ஸை எடுக்க மற்ற பகுதிகளை கைகளால் மூடி பின்னர் கவிழ்த்தால் போதும்.

flask4

குறிப்பு 5:
டீ பிளாஸ்க், ஹாட் பாக்ஸ், எண்ணெய் கேன் போன்ற ஏர் டைட் பொருட்கள் வீட்டில் இருந்தால் அதனை நீங்கள் சுத்தம் செய்யும் பொழுது அதிலிருந்து வழவழப்பு தன்மையும், ஒருவித வாசனையும் அவ்வளவு சுலபமாக போகாது. இதற்கு கொஞ்சம் அரிசி, கொஞ்சம் கல் உப்பு சேர்த்து அதனுடன் ஹாண்ட் வாஷ் அல்லது டூத் பேஸ்ட் ஏதாவது ஒன்றை போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு குலுக்கி எடுத்தால் போதும். 2 நிமிடத்தில் எந்த வித துர் வாடையும் இல்லாமல், ஸ்கிரப்பர் போல இவை செயல்பட்டு நமக்கு வழவழப்பு இல்லாத பிரஷ்ஷான கண்டைனராக கொடுத்துவிடும். இதே போல உங்கள் கைகளில் இருக்கும் நீங்காத கெட்ட வாடையை எளிதாக நீக்க சோப்பிற்கு பதிலாக டூத் பேஸ்ட்டை கைகளில் தடவிக் கழுவினால் போதும், எவ்வளவு கடினமான வாடையும் நொடியில் நீங்கும்.

- Advertisement -