நமக்கு வரும் ஆபத்துக்களை போக்கும் எளிய பரிகாரங்கள் இதோ

Kaali Amman

நாம் செய்வது நன்மையான காரியமாக இருந்தாலும், தீமையான காரியங்களாக இருந்தாலும் அதற்கான வினை பயனை நாம் அனுபவித்து தான் ஆக வேண்டும். பரிகாரங்கள் என்பது நமக்கு ஏற்படவிருக்கும் நமது கர்ம வினைகளுக்கான பலன்களின் கடுமைத்தன்மையை குறைக்குமே தவிர முழுமையாக வினைப்பயனை தடுத்து விடாது. கடுமையான பாதிப்பு ஏற்படுவதை விட சிறியளவு பாதிப்பு ஏற்படுவதால் அதிகம் கெடுதியில்லை. அந்த வகையில் நமது அன்றாட வாழ்க்கையில் கண் திருஷ்டி, துஷ்ட சக்திகள், மாந்திரீக பாதிப்புகளை நீக்க சில எளிமையான பரிகாரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. அப்பரிகாரங்களை விரிவாக இங்கு அறிந்து கொள்ளலாம்.

Amman pariharam

வெளியிலிருந்து நமது வீட்டிற்குள் பிற நபர்களின் துஷ்ட பார்வை, திரிஷ்டியை முறியடிப்பதற்கு வீட்டின் கண் திருஷ்டி விநாயகரின் படத்தை மாட்டி வைப்பது நல்லது. வீட்டின் முற்றத்தில் பல வண்ண பூக்களையும் வளர்க்கலாம். உங்கள் வீட்டு வரவேற்பு அறையில் வண்ண மீன்கள் தொட்டியை வைத்து அதில் சில வண்ண மீன்களை விட்டு வளர்ப்பது நல்லது.

மீன்கள் ஈரறிவு பிராணிகளாக இருந்தாலும், தன்னை வளர்ப்பவர்கள் மீது பாசமும், நன்றியும் கொண்ட ஒரு உயிரினமாகும். மீன்கள் தீய அதிர்வுகளை நன்கு உணரக்கூடிய ஒரு உயிரினமும் கூட. நமது வீடுகளில் நல்ல ஆரோக்கியமாக வளர்க்கப்படும் மீன்கள் எந்த வித பாதிப்புகளும் இல்லாமல் திடீரென்று இறப்பதற்கு காரணம் நமது வீட்டை நோக்கி ஏவப்படும் தீய சக்திகள், நமது வினை பயனால் நமக்கு ஏற்பட இருக்கும் ஆபத்துகளை அந்த மீன்கள் ஏற்றுக்கொண்டு உயிர் துறப்பது தான்.

fish

அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் கருவேலம் பட்டை பொடி, வெண் கடுகு பொடி ஆகியவற்றை சாம்பிராணியில் போட்டு, வரும் புகையை வீடு, கடை, தொழிற்கூடங்கள் போன்றவற்றில் காட்டி வர திருஷ்டிகள், தீய சக்திகள் அனைத்தும் அவ்விடத்தை விட்டு நீங்கும். ஆகாச கருட கிழங்கை வாங்கி, அதற்கு மஞ்சள் சந்தனம் ஆற்றும் குங்குமம் இட்டு, கருப்பு நிற கம்பிளி கயிற்றில் கட்டி வீட்டு வாசலில் தொங்க விடுவதால் துஷ்ட சக்திகள், கண் திருஷ்டிகள், மாந்திரீக ஏவல்கள் போன்றவற்றை வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கும்.

- Advertisement -

Amavasya-Poornima

மிகுந்த கடன் தொல்லையால் அவதிபடுபவர்கள் விநாயகர் ஆலயத்திற்கு சென்று தங்களின் பெயரில் பூ, தேங்காய் கொடுத்து அர்ச்சனை செய்த பின்பு, அந்த தேங்காயை உடைத்து அதில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணையை ஒன்றாக கலந்து தீபம் ஏற்றினால் கடன் தொல்லை விரைவில் நீங்க வழிபிறக்கும். உங்கள் வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் தேக்கமில்லாத முன்னேற்றங்கள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
காளஹஸ்தி கோவில் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Simple pariharam in Tamil. These pariharam will help us get away from difficulties.