இப்படி ஒரு சிறு கீரை தொக்கு செய்து கொடுத்தால் கீரை பிடிக்காது என்ற வார்த்தை உங்கள் வீட்டில் யார் வாயிலிருந்தும் வராது.

keerai-thokku
- Advertisement -

யார் வீட்டில் போய் கேட்டுப் பாருங்கள். கீரையே எங்களுக்கு பிடிக்காது என்று தான் சொல்லுவார்கள். சத்து நிறைந்த இந்த கீரையை கொஞ்சம் ருசியாக சமைத்து கொடுப்போமே. இப்படி சிறுகீரையில் ஒரு தொக்கு செய்து வைத்து பாருங்கள். குண்டான் சோறு சுட சுட வடித்து வைத்தாலும் பத்தாது. சாப்பாட்டில் போட்டு பிசைந்து பிசைந்து சாப்பிட தோன்றும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய சிறு கீரை தொக்கு சுவையாக எப்படி செய்வது ரெசிபியை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

செய்முறை

முதலில் ஒரு கட்டு சிறு கீரையை எடுத்து கிள்ளி சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இலசான கீரையாக இருந்தால் கொஞ்சம் தண்டுகளோடு சேர்த்துக் கொள்ளலாம். தவறு கிடையாது. தண்ணீரில் அலசிய கீரையை தண்ணீரை வடிய வைத்து அப்படியே தனியாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வெந்தயம் 1/4 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், வர மிளகாய் 10, போட்டு வறுக்கவும். வரமிளகாய் பொன்னிறமாக சிவந்து வந்தவுடன் தோல் உரித்த பூண்டு பல் 20, நறுக்கிய பெரிய வெங்காயம் 2, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் போட்டு வதக்கி விடுங்கள்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் நறுக்கிய தக்காளிப் பழம் 3, சின்ன எலுமிச்சம்பழம் அளவு புளியை, சின்ன சின்ன துண்டுகளாக பிரித்து இதில் போட்டு, உப்பு தேவையான அளவு, போட்டு எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விடுங்கள். தக்காளி லேசாக வெந்து வந்த பிறகு கழுவி வைத்திருக்கும் கீரையை இதோட சேர்த்து 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து விட்டு ஒரு மூடி போட்டு 5 லிருந்து 6 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

- Advertisement -

கீரை சூப்பராக வெந்து கிடைக்கும். இப்போது கடாயில் இருக்கும் இந்த கலவையை ஒரு கிண்ணத்தில் கொட்டி நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பல்ஸ் மோடில் அரைக்க வேண்டும். மொழு மொழுப்பாக அரைக்க கூடாது. கீரை தொக்கு தொக்காக, திப்பி திப்பியாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அரைத்த இந்த கீரை அப்படியே இருக்கட்டும்.

ஒரு அகலமான கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காய வடகம், வரமிளகாய், பெருங்காயம், தாளித்து மிக்ஸி ஜாரில் இருக்கும் கீரையை அந்த தாளிப்பில் கொட்டி ஒரே ஒரு பிரட்டு பிரட்டி, அடுப்பை அணைத்து விட்டால் சூப்பரான கீரை தொக்கு தயார்.

- Advertisement -

வெங்காய வடகம் உங்கள் வீட்டில் இல்லை என்றால் கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம் 10 பல், கருவேப்பிலை போட்டு நன்றாக சிவக்க வறுத்து இந்த தாலிப்பில் கீரையை ஊற்றவும். இப்படி ஒரு வாசம் நிறைந்த, இப்படி ஒரு சுவை நிறைந்த கீரையை எங்கேயும் டேஸ் பண்ணி இருக்க மாட்டீங்க. (கீரை ரொம்பவும் தனியாக இருக்க தண்ணீராக இருக்கக் கூடாது. தொக்கு பதத்தில் கொஞ்சம் கட்டியாக தான் இருக்க.) மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: சூப்பரான ஈவினிங் டீ டைம்மை இன்னுமே சூப்பராக்க ஒரு கப் டீயோட மொறு மொறுன்னு கிரிஸ்பியான இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.

இந்தக் கீரையில் நாம் பருப்பு சேர்க்கவில்லை. வெறும் வெங்காயம் தக்காளி புளி சேர்த்து இப்படி கீரையை தொக்கு செய்தால் இதனுடைய சுவை வேற லெவல் டேஸ்ல கிடைக்கும்ங்க. சான்சே இல்ல. கீரை பிரியர்களுக்கு இந்த ரெசிபி ஒரு வரப் பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். கீரை பிடிக்காதவர்களுக்கு அதைவிட நல்லது. புதுசாக நீங்கள் கீரை சாப்பிட பழகி விடுவீர்கள்.

- Advertisement -