நாளைய ஆறு கிரக சேர்க்கையும் – 12 ராசிக்கான துல்லியமான பலன்களும்

plantes-and-rasiwheel
- Advertisement -

நாளை தனுசு ராசியில் ஆறு கிரகங்களும் ஒன்றாக சந்திக்கின்றனர். இது போல் 537 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. எனினும் 1962 இல் பிப்ரவரி மாதம் மூன்றாம் நாள் கடகத்தில் ராகு பகவான் இருக்க, மகர ராசியில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், வியாழன், சனி, கேது ஆகிய எட்டு கிரகங்களும் ஒன்றாக இதே போல் சந்தித்தது. அச்சமயத்தில் உலகம் அழிந்து விடும். இயற்கை சீற்றத்திற்கு ஆளாகி விடும் என்று நாடெங்கிலும் மக்கள் பீதியில் உறைந்து இருந்தார்கள். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இந்நிகழ்வானது பெரும் சர்ச்சைக்குள் சிக்கியது. அதேபோல் நாளை நடைபெற இருக்கும் ஆறு கிரக கூட்டணி என்னவெல்லாம் பிரச்சனைகளை உலகத்தில் உண்டு பண்ண போகிறதோ என்றும் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

உலகில் இருக்கும் ஒவ்வொரு மனித உயிரினத்திற்கும் கிரகங்களின் சுழற்சிக்கும் தொடர்பு இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. எனவே இந்த கிரகங்களின் சுழற்சியானது ஏதாவது ஒரு சமயத்தில் எதிர்பாராத நிகழ்வாக மாற்றி நடைபெறும் பொழுது அதனால் பூமியில் இருப்பவர்களுக்கு ஏதாவது ஆபத்து நிகழலாம் என்ற பயம் பொதுவாக ஏற்படுகிறது. நெருப்பு ராசியான தனுசு ராசியில் இந்நிகழ்வு நடைபெற இருப்பதால் நெருப்பினால் உலகத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள் இருப்பினும் குரு பகவான் தன் சொந்த வீடான தனுசு ராசியில் இருப்பதால் அத்தகைய ஆபத்திலிருந்து காப்பாற்றுவார் என்றும் நம்பப்படுகிறது. மிதுன ராசியில் அமர்ந்து கொண்டு ராகுபகவான் ஆறு கிரகங்களையும் பார்வையிடுவதால் காற்றினால் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த கிரக சேர்க்கை நடைபெற இருக்கும் இந்த மூன்று நாட்களிலும் மூன்றுவிதமான தெய்வ கடாட்சம் நிறைந்த நாட்களாக அமைந்து இருக்கிறது நல்ல பலனை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று புதன்கிழமை அனுமன் ஜெயந்தியும், நாளை வியாழக்கிழமை அமாவாசையும், வெள்ளிக்கிழமை சந்திர தரிசனமும் நிகழ்கிறது இவற்றுடன் சூரியகிரகணம் வருவதால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருக்கிறது என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். இறை வழிபாட்டிற்குரிய நல்ல நாட்களாக இம்மூன்று நாட்களும் கருதப்படுகிறது. மூன்று நாட்கள் இறை வழிபாட்டை மேற்கொண்டு சிறப்பான பலன்களை அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 12 ராசிக்கான துல்லியமான பலன்களை இப்போது காணலாம்.

மேஷ ராசி:
மேஷ ராசிக்காரர்களே இந்த கிரக சேர்க்கையால் உங்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. இன்றைய தினம் ஹனுமத் ஜெயந்தி என்பதால் ஹனுமனை வழிபடுவதால் சிறப்பான பலன்களை நீங்கள் அடையலாம். உங்களின் ராசிக்கு மூன்றாம் இடத்தை சூரியபகவான் பார்வையிடுவதால் வீண் விரயங்கள் ஏற்படலாம். இன்றைய நாளில் தொலை தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

ரிஷப ராசி:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த கிரக சேர்க்கையால் சிறுசிறு பாதிப்புகள் உருவாகலாம். ஆரோக்கியத்தில் குறைபாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. நீங்கள் எதை செய்ய நினைத்தாலும் அதில் பல தடங்கல்கள் ஏற்படலாம் எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இந்நாளில் திட உணவை தவிர்ப்பது நல்லது. அதிக அளவில் தண்ணீர் பருகுங்கள். உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்து அவருக்குரிய மந்திரத்தை ஜெபிப்பது நல்லது.

மிதுன ராசி:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கிரக சேர்க்கையால் சிறிது எச்சரிக்கையுடன் இருக்கக்கூடிய நாளாக இருக்கும். இந்த நாட்களில் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தினால் பெரிய சிக்கலில் கொண்டு போய் முடியும். எனவே ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். எதையும் அலட்சியமாக விட்டு விடாதீர்கள். ராகு கேது சாதகமாக இல்லாததால் அவற்றிற்குரிய பரிகாரத்தை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

கடக ராசி:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆறு கிரஹ சேர்க்கையால் பெரிதாக ஒன்றும் பாதிப்புகள் ஏற்படாது. சூரிய கிரகணத்தின் போது பின்பற்ற வேண்டிய சாதாரண வழிமுறைகளை சரியாக பின்பற்றி வருவது நல்லது. நீங்கள் எதை செய்வதானாலும் தனியாக செய்வது நல்லது. கூட்டு முயற்சி உங்களுக்கு பலன் தராது. வெள்ளிக்கிழமை தவறாமல் தெய்வ வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் சிறப்பான பலன்களை நீங்கள் அடையலாம்.

சிம்ம ராசி:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆறு கிரக சேர்க்கையினால் குடும்பத்தில் சில குழப்பங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வீண் விரயம், குடும்பத்தில் குழப்பம், கணவன்-மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் இதுபோன்ற பிரச்சினைகளால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். ஆரோக்கிய குறைபாடு ஏற்படாமல் இருக்க ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. முன்னோர் வழிபாடு உங்களின் வாழ்க்கையை செம்மையாக்கும்.

கன்னி ராசி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த கிரகங்களின் கூட்டணியால் சில பிரச்சனைகள் வந்து மறையலாம் எனினும் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. உத்தியோகத்தில் பிரச்சனை, குடும்பத்தினருடன் பிரச்சனை போன்றவற்றை தவிர்ப்பதற்கு நவகிரக வழிபாடு மேற்கொள்வது சிறப்பான நாளாக மாற்றுவதற்கு உதவும். சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள் சிறப்பான வாழ்க்கை அமையும்.

துலாம் ராசி:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த 6 கிரக சேர்க்கையினால் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் இருக்கிறது. உங்களது ராசிக்கு
மூன்றாமிடத்தில் இதுபோன்ற ஒரு கூட்டணி அமைவது நல்ல பலன்களை தராது. வெளி நபர்களால் பகை உண்டாகலாம். உடல் நலத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீங்கள் வெளியே எங்கும் செல்லாமல் இருப்பது நல்லது. சூரிய கிரகணத்தன்று பின்பற்ற வேண்டிய முறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். வெள்ளிக்கிழமை அம்பாளை வழிபடுவது சிறந்தது.

விருச்சிக ராசி:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த கூட்டணியானது பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்படுத்தாது. உஷ்ணத்தால் சில ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம் எனவே அதிக அளவில் நீர்ச் சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய தினம் ஹனுமத் ஜெயந்தி என்பதால் அனுமனை நினைத்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது சிறந்தது.

தனுசு ராசி:
தனுசு ராசிக்காரர்களுக்கு 6 கிரக சேர்க்கையினால் நல்லதும் கெட்டதும் கலந்த பலனாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. உங்கள் ராசியில் தான் 6 கிரகங்களும் சந்திக்கின்றன. இந்நிகழ்வு சரியானதல்ல என்றாலும் உங்கள் ராசியாதிபதி குரு பகவான் வீற்றிருப்பதால் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்த மாட்டார் என்று கணிக்கபடுகிறது. எந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தன்று சரியான பரிகாரத்தை மேற்கொள்கிறார்களோ இல்லையோ தனுசு ராசிக்காரர்கள் சரியாக கடைபிடிப்பது நல்லது. இறை வழிபாடுகளில் முழுமனதுடன் கவனத்தை செலுத்தி உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை உச்சரித்தால் நல்ல பலன்களை பெறலாம்.

மகர ராசி:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆறு கிரகங்கள் சேர்க்கையால் உத்தியோகத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். உங்களின் பணிகளில் நீங்கள் எவ்வளவுதான் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டாலும் அதற்குரிய பலன் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். இந்த மூன்று நாட்களுக்குரிய மூன்று தெய்வங்களையும் தவறாமல் வழிபடுவதின் மூலம் உங்களின் பிரச்சினைகளை குறைக்கலாம்.

கும்ப ராசி:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆறுகள் கிரக சேர்க்கையினால் பெரிதாக ஒன்றும் பாதிப்புகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை. உங்களின் உடல்நலத்தில் மற்றும் உங்கள் குடும்பத்தாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொலைதூர பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. வெளியில் எங்கு சென்றாலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். வியாழக்கிழமை குரு பகவானை வழிபடுவது சிறந்தது.

மீன ராசி:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஆறு கிரக சேர்க்கையினால் வருகின்ற அனைத்து வாய்ப்புகளும் தட்டிப் போய்விடும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு அதிகப்படியான ஓய்வு தேவைப்படும். உங்களின் மன நிம்மதிக்கு தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்வது நல்லது. இறை வழிபாட்டை விட சிறந்த தியானம் கிடையாது எனவே இறை வழிபாடுகளில் கவனம் செலுத்துங்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். சிறந்த வாழ்க்கை மாற்றம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே
ஆறு கிரக சேர்க்கையினால் நிகழவிருப்பது என்ன?

- Advertisement -