சின்ன சின்ன இந்த சமையல் குறிப்புகள், உங்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும். கிச்சனில் நீங்களும் ஸ்மார்ட் பெண்மணியாக மாற பயனுள்ள 10 குறிப்புகள்.

- Advertisement -

நாம் தெரிந்து வைத்திருக்கும் சின்ன சின்ன குறிப்புகள் கூட சமையல் அறையில் சில சமயம் பெரிய உதவியாக இருக்கும். அதுபோலதான் ஸ்மார்ட்டான சின்ன சின்ன சமையலறை, வீட்டுக் குறிப்புகளை இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குறிப்புகளை நீங்களும் தெரிந்து வைத்துக்கொண்டால் ஸ்மார்ட் பெண்மணி என்ற பட்டமும் உங்களுக்கு கிடைக்கும். அந்த அளவிற்கு பயனுள்ள 10 சமையல் மற்றும் வீட்டு குறிப்புகள் உங்களுக்காக.

பூண்டு கொட்டி வைத்திருக்கும் கூடையில் கொஞ்சமாக கேழ்வரகை தூவி விடுங்கள். பூண்டு சீக்கிரம் கெட்டுப் போகாமல் பூச்சு பிடிக்காமல் இருக்கும்.

- Advertisement -

நீக்க முடியாத கறை துணியில் பட்டால் அதில் நீலகிரி தைலத்தை ஊற்றி 2 நிமிடம் ஊறவைத்து நன்றாக கையாலேயே கசக்கும் போது கறை இருந்த இடம் தெரியாமல் போய்விடும். உதாரணத்திற்கு காபி கறை, டீக்கறை, இரத்தக் கறை, எண்ணெய் கறை போன்ற கரைகளுக்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

சமைத்து முடித்த உடனேயே அடுப்பு லேசாக சூடாக இருக்கும்போதே ஈரத்துணியை வைத்து துடைத்து எடுத்து விட வேண்டும். இப்படி செய்தால் சமையல் அடுப்பு சுலபமாக சுத்தமாகி எப்போதும் பளபளப்பாக இருக்கும்.

- Advertisement -

தினமும் காலில் போடக்கூடிய ஷூ வை துவைக்க முடியாது. தூசு படிந்து பொலிவிழந்து காணப்படும் ஷூ மேலே சிறிது சோடா மாவை தூவி விட்டு இரண்டு நிமிடம் கழித்து துணியை போட்டு துடைத்து விட்டால் உடனே ஷூ பளபளப்பாக மாறும்.

பிரிட்ஜில் ஸ்டோர் செய்ய முடியாத அளவு நிறைய காய்கறிகளை வாங்கி விட்டீர்களா. அதை வாடாமல் எப்படி பாதுகாப்பது. ஒரு அகலமான தட்டில் கொட்டிய காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வைத்தால் காய்கறி மூன்று நாட்களுக்கு வாடாமல் இருக்கும். காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து நன்றாக பிழிந்து மூடிக் கொள்ளலாம்.

- Advertisement -

மொறு மொறு முறுக்கு சீடை பிஸ்கட் போன்ற பொருட்களை ஸ்டோர் செய்து வைத்தால் அது சீக்கிரத்தில் நமுத்து போய்விடும் அல்லவா. ஒரு வெள்ளை துணியில் சிறிதளவு உப்பைப் போட்டு முடிச்சாக கட்டி அதை ஸ்னாக்ஸ் டப்பாவில் போட்டு வைத்தால் மொறுமொறுப்பாக இருக்கும். பொருட்கள் சீக்கிரத்தில் நமுத்து போகாது.

கத்தியில் சிறிது எலுமிச்சம் பழச் சாறை தடவி விட்டு அதன் பின்பு பழங்களை நறுக்கினால் பழங்கள் சீக்கிரத்தில் கருத்துப் போகாமல் இருக்கும். உதாரணத்திற்கு ஆப்பிளை வெட்டி உடனே கறுத்துப் போகும் அல்லவா.

ஓமம் வெல்லம் இந்த இரண்டு பொருட்களையும் சம அளவில் எடுத்து கலந்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விடுங்கள். இதை ஒரு வாணலியில் போட்டு நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய காலில் முள் கண்ணாடி துகள் மர செரா ஏதாவது குத்தி அது உள்ளேயே தங்கி விட்டால், அந்த இடத்தில் சூடான இந்த ஓமம் வெல்லம் சேர்த்த கலவையை வைத்து, ஒரு துணியை போட்டு கட்டினால் உள்ளே இருக்கும் கண்ணாடி துகள் உடனடியாக வெளியே வந்துவிடும்.

உங்களுடைய குழந்தைகள் தூங்கும்போது படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறார்களா. அவர்களுக்கு தூங்குவதற்கு முன்பாக இரண்டு ஸ்பூன் தேன் கொடுங்கள். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் முற்றிலுமாக நின்றுவிடும்.

சமைக்கும்போது கையை சுட்டுக் கொண்டால் அந்த இடத்தில் உடனடியாக வெண்ணெயை தடவி விட வேண்டும். இப்படி செய்தால் எரிச்சல் குறையும். அந்த இடம் செப்டிக் ஆகாமலும் சீழ் பிடிக்காமலும் இருக்கும்.

- Advertisement -