இன்று சிவன் கோயிலிற்கு சென்றால் 108 பிரதோஷ வழிபாடு செய்த பலனை பெறலாம் தெரியுமா ?

Gdd Sivan lingam

சிவனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது திங்கட்கிழமை, அதே போல சிவனை வழிபட சிறந்த நேரமாக கருதப்படுவது பிரதோஷ நேரம், சிவனுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை. இவை மூன்று ஒரு சேர அமைந்து வந்திருக்கும் ஒரு அற்புதமான தினமே இன்று(29-01-2018). இத்தகைய சிறப்பான ஒரு நாள் 108 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வரக்கூடியது என்று கூறப்படுகிறது.

Sivan God

இன்றைய பிரதோஷ நாள் திங்கட்கிழமையில் வந்துள்ளதால் சோமவார பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சோமம் என்ற சொல்லுக்கு சூரியன் என்று சந்திரன் என்றும் இருவேறு பொருள்கள் உள்ளன. சந்திரனை தலையில் சூடிய சிவபெருமானை திங்கள் அன்று வரும் பிரதோஷ நாளில் வழிபடுவோருக்கு வாழ்வில் உள்ள தடைகள் நீங்கும், மன நிம்மதி பெருகும், தீராத குழப்பங்கள் தீரும்.

பொதுவாக பிரதோஷம் கால வேளையில் சிவனை வழிபடுவதால் புண்ணியம் ஏற்படும் என்பது ஐதீகம். ஆனால் இன்று திங்கட்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தில் பிரதோஷம் அமைந்துள்ளதால் இந்த நன்னாளில் சிவனை வழிபடுவோருக்கு 108 பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பிரதோஷத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தை மாதத்தில் அமைந்துள்ளது இந்த நன்னாள்.

sivan

இன்று சிவன் கோயிலிற்கு சென்று சிவபெருமானுக்கு வில்வத்தை சார்தலாம். அதோடு நந்தி தேவருக்கு செவ்வரளி மற்றும் அருகம்புல் மாலையை வழங்கலாம். பால், தயிர், இளநீர் கொண்டு அபிஷேகம் செய்து நந்தி தேவரின் அருளையும் பெறலாம். சிவாலயங்களுக்கு செல்ல முடியாதோர் ” ஓம் நம சிவாய” என்ற மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வரலாம்.

nandhi

இதையும் படிக்கலாமே:
சிவன் கோயிலிற்கு செல்லும் சமயத்தில் கூற வேண்டிய நந்தி காயத்ரி மந்திரம்

இன்று உங்களால் முடிந்தவரை பசியால் வாடும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கலாம், சிவாலயத்திற்கு சொந்தமான இடங்களில் வில்வ மரக்கன்றுகளை நடலாம், ஜீவ சமாதிகளுக்கு சென்று சித்தர்களை வழிபட்டு அன்னதானம் வழங்கலாம். இப்படி இன்று உங்களால் முடிந்த ஏதோ ஒன்றை செய்து பரம்பொருளின் பூரண அருளை பெறலாம். பிரதோஷ நேரம் என்று கூறப்படும் மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சிவனை வழிபடுவது மேலும் சிறப்பு சேர்க்கும்.