நீங்களும் தொழில் அதிபராகலாம். 5 புதன்கிழமை தொடர்ந்து இந்த ஒரு தீபத்தை ஏற்றினால்!

dheepam

எல்லோருக்கும் சொந்த தொழில் செய்ய வேண்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கத்தான் செய்யும். சிலபேருக்கு ஜாதக கட்டத்தில் சொந்த தொழில் யோகம் அமைந்து விடும். சில பேருடைய ஜாதக கட்டத்தில் பரிகாரம் செய்தால், சொந்த தொழில் அமையும் படியான யோகம் இருக்கும். இப்படியாக உங்களுக்கு சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தால், உங்களுடைய ஜாதக கட்டத்தில் யோகம் இல்லை என்றாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் நல்ல தொழில் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த வழிபாட்டை போற போக்கில் செய்து விட்டுப் போகக்கூடாது.

puthan

முழுமையான மனதோடு, முழுமையான கோரிக்கையை இறைவனிடம் வைத்து நம்பிக்கையோடு வேண்டுதல் செய்ய வேண்டும். தொடர்ந்து வரக்கூடிய 5 புதன்கிழமைகளில் நீங்கள் காலையிலேயே, அதாவது பிரம்ம முகூர்த்த வேலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட வேண்டும்.

உங்கள் வீட்டு பூஜை அறையில், தரையில் கொஞ்சம் பச்சரிசியை பரப்பி வைத்துக்கொள்ளுங்கள், அந்த பச்சரிசி மேல் ஒரு தாம்பூலத் தட்டை வைத்து, அதன் மேலே கொஞ்சம் பச்சை பயிரை பரப்பி அதன் மேல் ஒரு அகல் தீபத்தை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

pachai_payaru

பிரம்ம முகூர்த்த வேளையில் இப்படி ஒரு தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்றிவைத்துவிட்டு, புதன் பகவானை மனதார வேண்டிக் கொண்டு உங்களுக்கு நல்லபடியாக சொந்த தொழில் அமைய வேண்டும். அதிகப்படியான லாபத்தை எடுக்க வேண்டும். நீங்கள் அந்த தொழிலில் நேர்மையாக செய்வீர்கள் என்ற உறுதி மொழியோடு இந்த வழிபாட்டை செய்தால் உங்களுக்கான பலன் கூடிய விரைவில் கிடைக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. உங்களையே அறியாமல் ஏதாவது ஒரு வாய்ப்பு உங்களுக்கு தானாகவே தேடி வரும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நிச்சயம் நீங்கள் கொடிகட்டிப் பார்ப்பீர்கள்.

இந்த வழிபாட்டை செய்யும் 5 வாரங்களும் பச்சரிசி பச்சைப்பயிறு புதியதாகத் தான் வைக்க வேண்டும். நீங்கள் பூஜை செய்த அந்த பச்சரிசியையும், பச்சை பயிரையும் ஏதாவது ஒரு நைவேதியமாக சமைத்து, உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு அந்த இறைவனுக்கு வைத்து பூஜை செய்து, அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கலாம் தவறொன்றும் கிடையாது.

deepam

நல்ல தொழில் அமைய வேண்டும் என்று புதன் பகவானை வழிபாடு செய்யும் போது, கூடவே சேர்த்து உங்களது குல தெய்வ வழிபாட்டையும் மறந்துவிடாதீர்கள். முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது நம்முடைய குல தெய்வத்திற்கு தன். குலதெய்வ அனுகிரகம் இருந்தால் போதும், மற்ற கிரகங்கள் எல்லாம் நம்மை தேடி வந்து நன்மையை கொடுக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.