வாடகை வீட்டில் இருப்பவர்கள் உங்களுக்கென சொந்த வீடு கட்ட இவரை மட்டும் மறக்காம கும்பிடுங்க போதும்!

sevvai-murugan

வாடகை வீட்டில் வாடகை கொடுத்து கஷ்டப்படுபவர்கள் மனதில், நிச்சயம் தனக்கென சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதை தவமாகவும், கனவாகவும் வைத்திருப்பவர்கள் உங்களில் நிறைய பேர் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? தங்களுடைய சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் எப்படி இருக்கிறார்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அங்காரகன், பூமிகாரகன் என்று செவ்வாய் பகவானை அழைப்பதுண்டு. செவ்வாயின் துணையின்றி உங்களால் வீடு என்ன! ஒரு ஓடு கூட வாங்க முடியாது. சொந்தமாக வீடு, நிலம் வாங்க யாரை? எப்படி வணங்க வேண்டும்? என்று இப்பதிவில் பார்ப்போம்.

sevvai

பூமி யோகம் பெற நீங்கள் வணங்க வேண்டிய தெய்வமாக செவ்வாய் பகவான் இருக்கிறார். செவ்வாய் பகவானின் அருள் பெற, இந்த கடவுளை வணங்கினால் போதும். தொழில் மற்றும் வியாபாரம் போன்ற வளர்ச்சிக்கு புதன் பகவானையும், புதனுக்கு உரியவர் ஏழுமலையானையும் வணங்க நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்பார்கள். அதே போல் தான் பூமி, வீடு, மனை போன்ற விஷயங்களுக்கு செவ்வாய் பகவானையும், செவ்வாய்க்கு உரிய முருகப் பெருமானையும் வணங்குவது அவசியமாகும்.

முருகப் பெருமான் மற்றும் செவ்வாய் பகவானுக்கு உரிய செவ்வாய்க்கிழமை அன்று அவர்களை வணங்கி வர சொந்த வீடு கட்ட நினைப்பவர்களின் கனவு நிச்சயம் நனவாகும். நவக்கிரகங்களில் செவ்வாய் பகவான் பூமிக்கு உரியவர். ஒரு மனை வாங்கி நீங்கள் வீடு கட்ட வேண்டும் என்று விரும்பினால் செவ்வாய் பகவானை வணங்கி வாருங்கள். செவ்வாய் காயத்ரி மந்திரத்தை செவ்வாய் பகவான் சன்னிதியில் 36 முறை உச்சரியுங்கள். செவ்வாய்க்கிழமை அன்று நவக்கிரக சந்நிதியில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் விரைவில் வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

sevvai

செவ்வாய் பகவானால் உங்களுக்கு ஏற்பட இருக்கும் தோஷங்களும் விலகும். உங்கள் சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் உச்சம் பெற்றிருந்தால் நிச்சயம் உங்களால் விரைவாக வீடு கட்டி குடியேற முடியும். ஒன்பது செவ்வாய்க் கிழமைகளில் விரதம் மேற்கொண்டு முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வந்தால் செவ்வாய் பகவானின் அருளும், முருகப்பெருமானின் அருளும் சேர்ந்து வீடு கட்டும் கனவு விரைவாகவே பலிக்கும்.

- Advertisement -

செவ்வாய்கிழமை அன்று அதிகாலையில் நீராடி உணவேதும் அருந்தாமல் விரதம் இருந்து அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று அவர் பெயரில் அர்ச்சனை செய்து, பின் வீட்டிற்கு வந்து உபவாசம் மேற்கொள்ள வேண்டும். முழுதாக உபவாசம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளலாம். பின்னர் வீட்டில் முருகப் பெருமானுக்கு இஷ்டமான நைவேத்தியங்கள் படைத்து, அவருக்கு உரிய காயத்ரி மந்திரம் கூறி, கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை வாசிக்க வேண்டும்.

பின்னர் மாலையில் மீண்டும் கோவிலுக்கு சென்று விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு நீங்கள் தாராளமாக உணவருந்தலாம். இப்படியாக ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் நீங்கள் விரதம் அனுஷ்டித்து முருகப்பெருமானின் அருள் பெற அவரின் ஸ்தோத்திரங்களை படித்து வந்தால் செவ்வாய் தோஷம் மற்றும் பாதிப்புகள் நீங்கி நினைத்த படியே வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். நவக்கிரக சன்னிதியில் செவ்வாய் பகவானுக்கு உரிய வஸ்திரத்தை வாங்கி சாற்றி, அவரின் மந்திரத்தை 36 முறை உச்சரித்து வர உங்களுக்கென தனியாக விரைவாகவே நிச்சயம் வீடு அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதையும் படிக்கலாமே
உங்கள் ராசிக்கு பைரவரை இப்படி வணங்கினால் நடக்கும் அதிசயங்களை நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.