உங்கள் ராசிக்கு பைரவரை இப்படி வணங்கினால் நடக்கும் அதிசயங்களை நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

bairavar-astro

64 பைரவர்கள் இருந்தாலும் சில குறிப்பிட்ட பைரவர்களை பக்தர்கள் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது. பைரவருக்குள் நவகிரகங்களும் அடங்கி உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அனைத்து ராசியினரும் பைரவரை வணங்கினால் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். பைரவரை ஒவ்வொரு ராசியினரும் எப்படி வழிபட வேண்டும்? என்பதற்கு வழிமுறை ஒன்று உள்ளது. இவ்வாறாக தன்னுடைய ராசிக்கு ஏற்ப பைரவரை வணங்கினால் தோஷங்கள் தீர்ந்து, நல்வாழ்வு பெறுவார்கள் என்பது நம்பிக்கை. அதைப் பற்றிய விரிவான தகவல்கள் இந்த பதிவின் மூலம் காணலாம் வாருங்கள்.

bairavar

சிரசு முதல் பாதம் வரை ஒவ்வொரு ராசியினரும் ஒவ்வொரு அம்சங்களை பார்த்து வழிபடுவது மிகவும் நல்லது. அவ்வகையில் மேஷ ராசிக்காரர்களுக்கு பைரவருடைய உடலில் சிரசு எனப்படும் தலைப் பகுதியை பார்த்து வணங்குவது தோஷத்தை போக்கும். அடுத்ததாக இருக்கும் ரிஷப ராசிக்காரர்கள் முறையே கழுத்தையும், மிதுன ராசிக்காரர்கள் தோல் பகுதியையும், கடகத்தில் பிறந்தவர்கள் மார்பையும், சிம்ம ராசிக்காரர்கள் வயிற்றுப் பகுதியையும், ககன்னியில் பிறந்தவர்கள் குறியையும், துலாம் ராசிக்காரர்கள் தொடை பகுதியையும், விருச்சிக ராசிக்காரர்கள் முட்டியையும், தனுசு ராசிக்காரர்கள் மற்றும் மகர ராசிக்காரர்கள் முட்டியின் கீழ்பகுதியும், கும்ப ராசிக்காரர்கள் கணுக்காலையும், மீன ராசிக்காரர்கள் பாதம் பார்த்தும் வழிபடுவது தோஷங்களை நீக்க வல்லது.

இவ்வாறாக தங்களுடைய ராசிக்கு ஏற்ப அவருடைய அம்சங்களை பார்த்து வழிபட கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இழந்த செல்வத்தை, சொத்துக்களை திரும்ப பெறுவதற்கு காலபைரவரை 9 முறை வலம் வந்து 11 மிளகுகளை ஒரு வெள்ளைத் துணியில் முடித்து அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி திரியாக்கி தீபமேற்ற வேண்டும். இவ்வாறு 11 அஷ்டமி தினங்களில் செய்து வர இழந்த பொருட்கள் திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கை.

el deepam

வளர்பிறை அஷ்டமி திதியில் சதுர்கால பைரவருக்கு ஒரு ரூபாய் நாணயங்களை 108 என்ற எண்ணிக்கையில் அர்ச்சனை செய்து அந்த நாணயங்களை, வீடு அல்லது தொழில் செய்யும் ஸ்தலங்களில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட்டால் செல்வ தடை இருக்கவே இருக்காது என்பது நம்பிக்கை. மேலும் செல்வ வளம் பெருகும். சதுர்கால பைரவர் நான்கு யோகங்களுக்கான பைரவர் என்பது பூரண வரலாறு.

- Advertisement -

sathur-kala-bairavar

வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேற கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதிகளில் அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் 8 முறை வலம் வந்து செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து பைரவர் அஷ்டகம் வாசித்தால் நினைத்ததெல்லாம் அப்படியே நடக்கும். இது போல் 6 தேய்பிறை அஷ்டமிகளில் செய்ய வேண்டும். பைரவ சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கும், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும்.

swarna bairavar

பைரவருக்கு சனி பகவான் குருவாக இருப்பதால் சனிதோஷம் நீங்கவும், சனி திசை நடப்பவர்களும் பைரவருக்கு நான்கு அகல் தீபம் ஏற்றி சிகப்பு ரோஜாக்களை மாலையாக சாற்றி வழிபட துன்பங்கள் குறையும். திருமண தடை நீங்கி சுப காரியம் கைகூட ஞாயிறு அல்லது திங்கள் கிழமைகளில் விபூதி அலங்காரம் செய்து வடை மாலை சாற்றி வழிபடலாம். வழக்கு போன்றவற்றில் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்க பைரவருக்கு செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் மலரால் அர்ச்சனை செய்து தயிர் சாதம், வேர்கடலை உருண்டை, தேங்காய் மற்றும் தேன் போன்ற நிவேதனங்களை படைத்து பக்தர்களுக்கு கொடுக்க உங்கள் பிரச்சனைகள் தீரும். கெட்ட சக்திகள் அகலவும் இது போல் பரிகாரம் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே
வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்க சுலபமான சூட்சமம், உங்களுக்காக! பல மடங்கு லாபத்தை கொட்டிக் கொடுக்கும் சின்ன ரகசியத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.