திருநீறில் இருந்து வினோத பொருட்களை எடுக்கும் துறவி – வீடியோ

Thiruneeru munivar

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் பலர் தங்கம் உள்ளிட்ட பல பொருட்களை மூலிகை மூலமாகவே எளிதில் உருவாக்கினார். அதோடு தாங்கள் கற்ற சித்த கலை மூலமாகவும் இறைவனின் அருளாசியோடு லிங்கம் உள்ளிட்ட பல பொருட்களை அவர்கள் வாயில் இருந்து எடுப்பது போன்ற அதிசயங்களை நிகழ்த்தி காட்டியுள்ளனர். அது போன்று ஒரு அதிசயத்தை நிகழ்த்துகிறார் ஒரு துறவி. இதோ அதன் வீடியோ காட்சி.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகாபுரி என்னும் ஊரில் வசித்துவருபவர் ஞானசித்தர் வீர துறவி. இவர், தான் நினைத்த மாத்திரத்தில் எந்த ஒரு பொருளையும் வர வரைக்கும் ஆற்றல் பெற்றவர் என்று கூறப்படுகிறது. இந்த கலைக்கு பேர் சொர்ணகளை. இந்த கலையானது ஆதிகாலத்தில் தமிழகத்தில் இருந்திருந்தாலும் கூட தற்காலத்தில் இது போன்ற கலை முழுமையாக அழிந்துவிட்டது என்று கூறப்படுகிறது. ஆனால் இவர் தான் அந்த கலையை முழுமையாக கற்றுள்ளதாக கூறுகிறார்.

ராஜவம்சத்தில் பிறந்த இவர் பல ரிஷிகளிடம் இந்த கலையை கற்றதாக கூறுகிறார். இதன் மூலம் இவர் நினைத்த மாத்திரத்தில் யாருக்கு வேண்டுமானாலும் பணத்தையோ, தங்கத்தையோ, வெள்ளியையோ வர வைத்து தர இயலுமாம். ஆனால் அதற்கு ஒரே ஒரு நிபந்தை என்னவென்றால் உண்மையில் அந்த மனிதருக்கு பணமோ தங்கமோ தேவையாக இருக்க வேண்டுமாம். இந்த கலையை செய்ய இவருக்கு ஒரு தேவதை உதவுவதாகவும் சொல்கிறார் இவர்.