மூன்று மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாத சுவையான ரசப்பொடி ஒருமுறை செய்து வைத்துக்கொள்ளுங்கள். சட்டென ரசம் வைக்க ஒரு ஸ்பூன் ரசப்பொடி போதும்

rasam
- Advertisement -

மதிய உணவிற்காக சாதம் செய்து குழம்பு, கூட்டு, பொரியல் என்று பலவிதமான டிஷ்களை செய்து வைத்தாலும் இறுதியாக ரசம் ஊற்றி சாப்பிட்டால் மட்டும்தான் முழு திருப்தியாக இருக்கும். ஒரு சில வீடுகளில் தினமும் ரசம் வைப்பார்கள். நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் சரியான முறையில் செரிமானம் ஆவதற்காக ரசத்தை இறுதியாக சாப்பிடுகிறோம். இதில் சேர்த்துள்ள மசாலா பொருட்கள் அனைத்தும் நமது உடலின் சீரண சக்தியை அதிகரிக்கின்றன. எனவே எந்த உணவை சாப்பிட்டாலும் இறுதியாக ரசத்தை சிறிதளவு சேர்த்து சாப்பிட்டோம் என்றால் வயிற்று பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. அவ்வாறு தினமும் ரசம் வைப்பதை மிகவும் சுலபமாக்கும் வகையில் இந்த ரச பொடியை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். மூன்று மாதங்கள் ஆனாலும் இதனை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். வாருங்கள் இந்த ரசப்பொடி எப்படி செய்வது என்பதையும், அதனை வைத்து ரசம் வைக்கும் முறையையும் தெரிந்து கொள்வோம்.

food

ரசப்பொடி செய்யும் முறை:
முதலில் ஒரு பேனை அடுப்பின் மீது வைத்து ஒரு கப் துவரம் பருப்பு சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை வேறொரு தட்டில் மாற்றி வைத்து, அதே பேனில் 8 வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன்பிறகு கால் கப் சீரகம் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் கால் கப் மிளகு சேர்த்து லேசாக வறுக்க வேண்டும், பிறகு கால் கப் தனியா சேர்த்து அதனையும் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து கறிவேப்பிலை மொரமொரப்பாக மாறும் வரை நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் அடுப்பை அனைத்து அந்த சூட்டிலேயே ஒரு ஸ்பூன் பெருங்காயத்தை வறுத்துக் கொள்ள வேண்டும்.

Milagu-1

இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தனித்தனியாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு இவை அனைத்தையும் நன்றாக ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

ரசம் செய்முறை:
முதலில் நெல்லிக்காய் அளவு எலுமிச்சை பழத்தை கரைத்து புளித் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தக்காளியை அரிந்து புளித் தண்ணீரில் சேர்த்துக் கொண்டு அதனுடன் ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழையும் சேர்த்து தக்காளியை நன்றாக கரைத்து விட வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள ரச பொடியில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து இதனுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

rasam

பிறகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள் கால் ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும் பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு காய்ந்த மிளகாய் மற்றும் நசுக்கிய 5 பல் பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் தாளித்த இதனை ரசத்துடன் சேர்த்து அடுப்பின் மீது வைத்து ஒரு கொதி வரும்வரை அப்படியே விட வேண்டும்.

rasa-podi

பின்னர் இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி தழை கருவேப்பிலை சேர்த்து இறக்க வேண்டும் அவ்வளவுதான் சுடச்சுட சுவையான ரசம் தயார் ஆகிவிட்டது ஒருமுறை இவ்வாறு செய்து சுவைத்துப் பாருங்கள் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

- Advertisement -