கத்தரிக்காய், உருளைக்கிழங்கு வைத்து இவ்வளவு சுவையான டிஷ். நீங்களும் ஒருமுறை செய்து தான் பாருங்களேன்

brinjal
- Advertisement -

தினம் தினம் மூன்று வேளை உணவு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும். அவ்வாறு மூன்று வேளைக்கும் மூன்று விதமான உணவுகளை சமைத்துக் கொடுப்பதேன்பது மிகவும் கடினமான செயல் தான். அதிலும் மதிய வேலை என்றாலே சாதம், குழம்பு, பொரியல் என்று பலதரப்பட்ட உணவுகளை சமைக்க வேண்டியிருக்கும். அவ்வாறு சாம்பார், மோர் குழம்பு, ரசம் போன்ற குழம்பு வகைகள் செய்யும் பொழுது அதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும் இந்த கத்திரிக்காய், உருளைக்கிழங்கு கிரேவியை நீங்களும் ட்ரை செய்து பாருங்கள். இதன் சுவை சாப்பிடுபவர்களை இன்னும் ஒரு பிடி சாதத்தை சேர்த்து சாப்பிட தோன்றும். அந்த அளவிற்கு நாவில் எச்சில் ஊறும் சுவையில் மணமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – கால் கிலோ, உருளைக்கிழங்கு – 4, வெந்தயக் கீரை – ஒரு கைப்பிடி, தக்காளி – 3, உப்பு – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 1, பச்சை மிளகாய் – 4, எண்ணெய் – 5 ஸ்பூன், தனியா தூள் – 2 ஸ்பூன், மிளகாய்தூள் – ஒன்றரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி.

- Advertisement -

செய்முறை:
முதலில் இஞ்சியைப் பொடியாக துருவி வைக்க வேண்டும். பின்னர் உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காயை பொடியாக அரிந்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் போட்டு, அரை ஸ்பூன் உப்பு சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது உருளைக்கிழங்கு மற்றும் கத்தரிக்காய் கருத்துப் போகாமல் இருக்கும்.

பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, ஐந்து ஸ்பூன் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் துருவிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு கைப்பிடி வெந்தயக் கீரை மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் பிறகு இதனுடன் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து அனைத்தையும் ஒன்று சேர வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து, அனைத்தையும் எண்ணெயிலேயே நன்றாக வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, கலந்து விட்டு, தட்டு போட்டு மூடி, 7 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு தண்ணீர் அனைத்தும் சுண்டி காய்கள் நன்றாக வெந்து விட்டதா என்று பார்க்க வேண்டும்.

பிறகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு, ஒன்றரை ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் 2 ஸ்பூன் தனியா தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து, 5 நிமிடம் மூடி வைக்க வேண்டும். பின்னர் இறுதியாக ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழைகளைத் தூவி, அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கத்திரிக்காய், உருளைக்கிழங்கு கிரேவி தயாராகிவிட்டது. இதனை சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்.

- Advertisement -