100 கிராம் பட்டாணி இருந்தால் போதும். பத்து பேர் சாப்பிடும் இந்த சுவையான இந்த சுண்டல் மசாலாவை சுவையாக செய்திடலாம்

sundal
- Advertisement -

மாலை நேர என்றலே கொஞ்சம் பசிக்க ஆரம்பிக்கும். ஏனென்றால் மதிய நேரத்திற்கும் இரவு நேரத்திற்க்கும் இடையே அதிகப்படியான இடைவெளிகள் இருக்கின்றது. அதனால் தான் இந்த நேரத்தில் கொஞ்சம் பசியை குறைப்பதற்காக அனைவரும் டீ குடிக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறோம். டீ குடிக்கும் நேரத்தில் குழந்தைகளுக்கு சுவையான உணவு வகைகள் செய்து கொடுத்தால் அவர்களும் விருப்பமாக சாப்பிடுவார்கள். பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் சுடச்சுட சாப்பிட விருப்பமான உணவைக் கொடுத்தால் தட்டாமல் சாப்பிடுவார்கள். அப்படி அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு சுண்டல் மசாலாவை எப்படி சுவையாக செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
பட்டாணி – 100 கிராம், வெங்காயம் – 2, தக்காளி – 2, மிளகு – கால் ஸ்பூன், ஏலக்காய் – 2, கிராம்பு – 3, பட்டை சிறிய துண்டு – 2, மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், தனியா தூள் – ஒன்றரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், சாட் மசாலா – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பூண்டு – ஒரு கைப்பிடி, இஞ்சி சிறிய துண்டு – 2, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி, புதினா – அரை கைப்பிடி, உருளை கிழங்கு – 3, எண்ணெய் – 6 ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, சோம்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் 100 கிராம் பட்டாணியை முதல் நாள் இரவே தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். பின்னர் அதனை ஒரு குக்கரில் சேர்த்து, அதனுடன் 3 உருளைக்கிழங்கை தோலுரித்து சேர்த்து, தண்ணீர் ஊற்றி, 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பிறகு வேக வைத்த பட்டாணியில் இருந்து ஒரு கரண்டி பட்டாணியை தனியாக எடுத்து வைத்து, மீதமிருக்கும் அனைத்தையும் மத்து அல்லது மேஷர் வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தக்காளி, வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் பூண்டை தோலுரித்து வைக்கவேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் சோம்பு, சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு, வெங்காயம், தக்காளி, பூண்டு பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி இவை அனைத்தையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஏற்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் எடுத்து வைத்துள்ள பட்டாணியையும் சேர்த்து கொண்டு, அதனுடன் கொத்தமல்லி, புதினா சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மீண்டும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, மிளகாய்த்தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் இவற்றுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, இவை அனைத்தையும் நிறம் மாறும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை சேர்த்து, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு இதனுடன் கரம் மசாலா, சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். இவை அனைத்தும் நன்றாக கொதித்ததும் அடுப்பை அனைத்து விட வேண்டும். இதனுடன் சிறிதளவு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சுட சுட பரிமாறிக் கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

- Advertisement -