உடலுக்கு ஆரோக்கியமான இந்த பூண்டு சட்னியை ஒரு முறை இவ்வாறு செய்து வைத்துக்கொள்ளுங்கள். பத்து நாள் ஆனாலும் செய்த பதம் மாறாமல் அதே சுவையில் இருக்கும்

poondu
- Advertisement -

இப்பொழுதெல்லாம் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என மூன்று வேளையும் மூன்று விதமான உணவுகளை சமைக்க வேண்டி இருக்கிறது. காலை மற்றும் மாலை வேளையில் பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை போன்ற உணவு வகைகள் தான் அதிகமாக செய்கின்றனர். இவற்றிற்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், குருமா என விதவிதமாக செய்ய வேண்டிய வேலை இருக்கிறது. தேங்காய் சட்னியை அதிகமாக செய்தால் அதன் சுவை எளிதில் சலித்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல் இரவில் தேங்காய் சட்னி சாப்பிட்டால் சிலருக்கு ஜீரணம் ஆவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் இந்தப் பூண்டு சட்னியை இவ்வாறு பக்குவமாக செய்து வைத்துக் கொண்டால் பத்து நாட்களுக்கும் சலிக்காமல் சாப்பிடலாம். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

coconut-chutney0

தேவையான பொருட்கள்:
பூண்டு – கால் கிலோ, புளி – எலுமிச்சம்பழ அளவு,எண்ணணெய் – 150 கிராம், வரமிளகாய் – 15, உப்பு – ஒன்றரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் கால் கிலோ அளவுள்ள பூண்டை தனித்தனியாக தட்டி, தோலுரித்து சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள பூண்டினை கடாயில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

poondu

அடுப்பை சிம்மில் வைத்து 5 லிருந்து 10 நிமிடம் பூண்டை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதனை வேறு ஒரு தட்டிற்க்கு மாற்றி நன்றாக ஆற விட வேண்டும். அதன் பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடுப்பின் மீது வைத்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் வர மிளகாயை காம்புடன் இந்த நீரில் சேர்த்து ஒரு கொதி வந்த பின்னர் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -

பிறகு தண்ணீரில் கொதிக்க வைத்த வர மிளகாயையும் பூண்டுடன் சேர்த்து ஆற வைக்கவேண்டும். இவை நன்றாக ஆறியதும் இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் எலுமிச்சை பழ அளவு புளியையும் சேர்த்து ஒன்றரை ஸ்பூன் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

Milagai

பின்னர் மீண்டும் அடுப்பை பற்றவைத்து பூண்டு வதக்கிய அதே கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள பூண்டு பேஸ்டை அதில் சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும். சிறிது நேரத்தில் இவை கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து விட வேண்டும். இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை கைவிடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

milagai chutney

கொஞ்சம் நேரம் செல்ல செல்ல பூண்டு பேஸ்ட் இறுகி கெட்டியாக ஆரம்பிக்கும். இந்த நிலையில் இதில் சேர்த்துள்ள எண்ணெய் தனியாக பிரிந்து வர ஆரம்பிக்கும். அப்போது அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின்னர் இவை நன்றாக ஆறிய பின் ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். ஒரு வாரம் ஆனாலும் நாம் செய்து வைத்த அதே சுவையில் அருமையாக இருக்கும்.

- Advertisement -