ஏமாற்றம் இல்லாத ஏற்றம் பெற, துயரங்கள் நீங்க, ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடுகளில் இதுவும் ஒன்று! இந்த வழிபாட்டை மறந்தாலும் வாழ்க்கையில் தீராத துன்பம் வரும்.

amman1
- Advertisement -

நம்முடைய வாழ்வில் ஏமாற்றம் இருக்கக் கூடாது, துயரங்கள் இருக்கக் கூடாது என்றால், நாம் அடுத்தவரை ஏமாற்றத்தில் தள்ளிவிடக் கூடாது. அடுத்தவர்களுடைய வாழ்வில் துயரங்களை ஏற்படுத்தக்கூடாது. நம்மால், அடுத்தவருக்கு நல்லது நடக்கிறதோ இல்லையோ, கெடுதல் நடப்பதற்கு நாம் காரணமாக இருக்கவே கூடாது. இது முதல் விதி. பெரும்பாலும் இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும் இந்த இடத்தில், இந்த நேரத்தில் நினைவு கூற வேண்டியது அவசியமாயிற்று.

sad

காரணம், நமக்கு வரக்கூடிய ஏமாற்றங்களுக்கு நமக்கு வரக்கூடிய துயரங்களுக்கும், அடுத்தவர்களை கைகாட்டி, அடுத்தவர்களை குறை சொல்லும் பழக்கம் உள்ளவர்கள்தான் வாழ்க்கையில் பெரிய கஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். ‘கஷ்டங்களுக்கு அடுத்தவர்கள் காரணமில்லை. தனக்கு வரும் கஷ்டத்திற்கு தான் செய்த பாவ புண்ணிய கணக்குகள் தான் காரணம் என்று நினைப்பவர்கள் வாழ்க்கையில் தடுமாற்றம் அடைந்தாலும், முன்னேற்றத்தில் தடை இருக்காது.’ சரி, நீங்கள் வாழ்க்கையில் ஏமாற்றம் அடையாமல் இருக்க வேண்டுமென்றால் மேல் சொன்ன விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இதோடு சேர்த்து நம் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஆன்மீக ரீதியான ஒரு பரிகாரத்தையும் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பெரிய பெரிய கோவில்களுக்கு சென்று புண்ணியத்தை தேடிக் கொள்வார்கள். குறிப்பாக காசிக்கு சென்று மீண்டும் வீடு திரும்புபவர்கள், ஏதாவது ஒரு பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று சொல்லுவார்கள். இதை நிறைய பேர் தவறாக புரிந்து கொண்டு, அவர்கள் சாப்பிடும் ஏதாவது ஒரு பொருளை சாப்பிடாமல் இருப்பது, அவர்களுக்கு விருப்பமான ஏதாவது ஒன்றை தவிர்ப்பது, என்று தியாகம் செய்வதை விட, அவர்களுக்குள் இருக்கும் பொறாமை குணம், கெட்ட எண்ணம், அடுத்தவர்களைப் பார்த்து வயிற்றெரிச்சல் படுவது போன்ற ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்தை, தன் உள்ளத்தில் இருந்து வெளியே தூக்கிப் போடுவது தான் உயர்ந்தது. கெட்ட குணங்களை பஸ்பமாக்குவதுதான் உண்மையான தியாகம் என்பதையும் நாம் இந்த இடத்தில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

temple

நமக்கு வரக்கூடிய துயரங்கள் விலக வேண்டும் என்றால் முதலில் நாம் செய்யக்கூடிய வழிபாடு என்பது நம் ஊரில் இருக்கும், நம் ஊரை காக்கும் நம் வீட்டை காக்கும், நம்மை காக்கும், நம் ஊர் கோவில்களில் இருக்கும் தெய்வங்களை வழிபாடு செய்ய வேண்டும். அதாவது கிராமத்தில் வசிப்பவர்களுக்கு கிராம தேவி என்ற ஒரு கோவில் இருக்கும். கொஞ்சம் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு அவர்கள் வாழும் இடத்தை சுற்றி இருக்கக்கூடிய அம்மன் கோவில்கள், அப்படி இல்லை என்றால் வேறு ஏதாவது கோவில்கள் இருக்கும். சில ஊர்களில் எல்லைச்சாமி என்று இருக்கும் அல்லவா?

- Advertisement -

எவர் ஒருவர் தன்னுடைய பூர்வீக சொந்த ஊரில் இருக்கும் தெய்வங்களை வழிபடாமல், மறந்து விடுகிறார்களோ அவர்களுக்கு கஷ்டம் வருவதற்கு இதுவும் ஒரு காரணம். நீங்கள் இருக்கின்ற ஊரை விட்டு விட்டு, இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குப் போய் வசித்தாலும் சரி, வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களுடைய சொந்த ஊருக்கு சென்று அந்த கோவிலில் உள்ள தெய்வங்களை தரிசனம் செய்வது நல்லது.

thertha-yathirai

இப்படியாக உங்கள் ஊரில் எந்த தெய்வங்கள் இருந்தாலும், அதற்கான திருவிழா என்பது வருடத்திற்கு 1 முறையோ, 5 வருடத்திற்கு ஒரு முறையோ, கட்டாயம் நடைபெறும். அந்த திருவிழா சமயத்தின் போது நீங்கள் உங்களுடைய குடும்பத்தோடு குறிப்பிட்ட அந்த திருவிழா நாட்களில் தரிசனம் செய்தே ஆகவேண்டும்.

- Advertisement -

temple1

அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கு தீர்த்த அபிஷேகம் என்று ஒன்று கட்டாயம் நடைபெறும். நாம் கூட வீதியில் எல்லாம் பார்த்திருப்போம். மேளதாளத்தோடு தலையில் பித்தளை சொம்பு வைத்துக்கொண்டு, நடந்து சென்று தீர்த்தத்தைக் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

temple-lemon

உங்களால் முடிந்தால் இந்த தீர்த்தயாத்திரையில் நீங்களும் கலந்து கொண்டு, உங்களது கையாளும் ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்ய கொடுப்பது உங்களுடைய குடும்பத்திற்கு மிகவும் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. இதேபோல் சில கோவில்களில் பால் குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வார்கள்.

abishegam

உங்கள் கைகளால் அந்த பால் கலசத்தை ஏந்தி வந்து, அந்த தெய்வத்திற்கு கொடுத்து பால் அபிஷேகம் செய்வதும் மிகவும் நல்லது. முடிந்தவரை இந்த தீர்த்த யாத்திரைக்கு செல்பவர்கள் உபவாசம் இருந்து உங்களது பிரார்த்தனையை வேண்டிக்கொண்டால், அந்த வேண்டுதல் அந்தப் பிரார்த்தனை ஏமாற்றம் இல்லாமல் கூடிய விரைவில் நிறைவேறும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
காலத்தில் பலன் தரும் பைரவருக்கு வீட்டிலேயே இப்படி பூஜை செய்வதால் நன்மைகள் கிடைக்குமா? வீட்டில் பூஜை செய்வது சரியா? தவறா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -