மசாலா ஸ்டஃப்பிங் கத்தரிக்காய் சேர்த்து இப்படி சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பை நீங்களும் ஒருமுறை செய்து உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் அசத்திடுங்கள்

ennai-katharikai
- Advertisement -

ஒவ்வொருவரின் வீட்டிலும் தினமும் மதிய உணவிற்கு சாதத்துடன் கலந்து சாப்பிட ஏதேனும் ஒரு குழம்பு செய்வது வழக்கமான விஷயம் தான். அவ்வாறு தினமும் செய்யும் குழம்பு வகைகளான சாம்பார், காரக் குழம்பு, குருமா, கீரை குழம்பு இப்படி ஒரு நான்கு குழம்புகளை தான் தினமும் ஒவ்வொன்றாக செய்து வைக்கின்றனர். இதே குழம்புகளை சற்று வித்தியாசமான சுவையில் சமைத்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் உங்களை அசந்து போய் பார்ப்பார்கள். அந்த அளவிற்கு அவற்றின் சுவை உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் வியக்க வைத்திடும். அப்படி ஒரு சுவையான மசாலா ஸ்டஃப்பிங் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பை எப்படி அருமையான சுவையில் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 2, சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 7 பல், தக்காளி – 3, சோம்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், துருவிய தேங்காய் – கால் கப், உப்பு – ஒரு ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 1, எண்ணெய் – 6 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் சின்ன வெங்காயத்தையும் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் சோம்பு, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து அனைத்தையும் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் கால் கப் தேங்காய் துருவல் சேர்த்து ஈரப்பதம் போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் கத்தரிக்காயை சுத்தமாக கழுவிக் கொண்டு, அவற்றின் காம்பை மட்டும் நறுக்கி விட்டு, அதன் பின்புறத்தில் நான்கு துண்டுகளாக பிரியும் வகையில் கீறிக் கொள்ள வேண்டும்.

பின்னர் கத்தரிக்காயின் நடுவே அரைத்து வைத்துள்ள மசாலாவை கொஞ்சமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அனைத்து கத்தரிக்காயிலும் மசாலா சேர்த்த பிறகு அடுப்பின் மீது கடாயை வைத்து, நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் இந்த கத்தரிக்காயை சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கத்தரிக்காய்களை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

பிறகு அதே கடாயில் கடுகு சேர்த்து தாளித்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை ஊற்றி நன்றாக வதக்கிய பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும். குழம்பு நன்றாக கொதித்த உடன் வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயை இவற்றுடன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறுதியாக அரை ஸ்பூன் உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -