வயசானாலும் உங்க முகத்தில் அழகு குறையாது. சுருக்கங்கள், கோடுகள், விழாமல் எப்போதும் இளமையான தோற்றத்தைப் பெற இந்த 1 பொருள் போதும்.

face23
- Advertisement -

ஒரு சில பேருக்கு சின்ன வயதிலேயே முகம் பார்ப்பதற்கு வயதான தோற்றத்தில் இருக்கும். சருமத்தில் அதிகமாக சுருக்கம் இருக்கும். முகத்தில் ஆங்காங்கே ரிங்கிள்ஸ் என்று சொல்லப்படும் கோடுகள் இருக்கும். அதாவது சிரிக்கும்போது விழக்கூடிய அந்த கோடு அப்படியே படிந்து வயதான தோற்றத்தை கொடுக்கும் அல்லவா. இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் வராமல் உங்களுடைய தோல் சுருங்கி தளர்ந்து போகாமல், உங்களுடைய முகம் பார்ப்பதற்கு எப்போதும் இளமையாகவே இருக்க இந்த குறிப்பு ட்ரை பண்ணி பார்க்கலாம். வயதான தோற்றம் வந்தவர்களும் இந்த குறிப்பை முயற்சி செய்யலாம். டீன் ஏஜில் இருப்பவர்கள் சீக்கிரத்தில் வயதான தோற்றம் வராமல் இருக்கவும் இந்த குறிப்பை ட்ரை பண்ணலாம்.

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள் அன்னாசி பூ. பிரியாணிக்கு போடுவாங்க இல்லையா. இதை star anise என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். இந்த ஒரு பொருளை வைத்தே நம்முடைய ஆன்டி ஏஜிங் டோனர் சுலபமாக வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம். இந்த டோனரை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் ஏதாவது கண்ணுக்குத் தெரியாத இன்பெக்சன் இருந்தாலும் அது சரியாகிவிடும். முகப்பருக்கள் மறையவும் இந்த டோனர் உதவியாக இருக்கும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சொம்பு அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். அதில் 5 லிருந்து 6 அன்னாசி பூவை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க வையுங்கள். ஒரு சொம்பு தண்ணீர் ஆனது அரை சொம்பு தண்ணீர் அளவு சுண்டி வந்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு நன்றாக ஆற வைத்து வடிகட்டி இந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் ஐந்து நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

இந்த டோனரை உங்களுடைய முகத்தில் எப்போது வேண்டும் என்றாலும் ஸ்பிரே செய்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து நான்கு முறை ஸ்பிரே செய்து கொள்ளலாம். ஆனால் முகத்தில் இந்த ஸ்பிரே அடிப்பதற்கு, முன்பு முகத்தில் மேக்கப் இருந்தால் அதை கழுவி விட வேண்டும். முகத்தை சுத்தமாக கழுவி துடைத்த பின்பு தான் இந்த டோனரை முகத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

வாரத்தில் மூன்று நாட்கள் இந்த டோனரை பயன்படுத்தலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்துங்கள். இந்த டோனரை பயன்படுத்த தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய முகத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். முகச்சுருக்கம் மறைந்திருக்கும். ரிங்கல்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை உணருவீர்கள். உங்களுக்கு எப்போதும் இளமையாக இருக்க ஆசையா அப்போ இந்த டோனர் குறிப்பு உங்களுக்காக மட்டும் தான்.

இந்த டோனரோடு சேர்த்து நீங்கள் இன்னும் ஒரு சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். மன அழுத்தத்தோடு எப்போதும் சோகத்தோடு இருந்தால், சீக்கிரம் வயதான தோற்றம் வந்துவிடும். எப்போதுமே எந்த கவலை இருந்தாலும் அதை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு மனதை நிம்மதியாக சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். நிம்மதியாக தூங்குங்கள். பிரச்சனை யாருக்குத்தான் இல்லை. அது பாட்டுக்கு வரும் போகும். ஆரோக்கியத்தை குறைப்பதற்கு காரணம் மனக்கவலை தான். அழகை குறைப்பதற்கும் காரணம் இந்த மனக்கவலை தான். சந்தோஷமா இருங்க. சந்தோஷமா வாழ்க்கையை நகர்த்திச் செல்லுங்கள். 100 வயதிலும் இளமை உங்கள் மனதிற்குள் இருக்கும் என்ற இந்த கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -