வீசிய புயலை மந்திரம் ஜெபித்து நிறுத்திய அதிசயம் – வீடியோ

Lord sivan

இறைவனைத் தவிர வேறு ஒன்றையும் விரும்பாதவர்கள் தான் ரிஷிகளும், ஞானிகளும். அப்படி அந்த இறை நிலையை அவர்கள் அடைந்து விட்ட பின்பு, அவர்களுக்கு இந்த “மந்திரங்கள், யந்திர-தந்திரங்கள்” போன்ற கலைகள் தேவைப்படவில்லை. ஆனால் வாழ்வில் அன்றாடம் பல கஷ்டங்களை அனுபவிக்கும் சாமானிய மக்கள் இத்தைகைய “மந்திர, யந்திர- தந்திரங்களைக் கொண்டு தங்கள் வாழ்வை வளமாக்கிக்கொள்ள, அவர்களுக்கு இத்தகைய கலைகளை போதித்தனர் அந்த ஆன்மிக பெரியோர்கள். பொதுவாக பெரும்பாலானோருக்கு மந்திரங்களை ஜெபிப்பதால் உண்மையிலேயே பலன் ஏற்படுகிறதா என்கிற சந்தேகம் எழுகிறது. அப்படிப்பட்டவர்கள் இந்த காணொளியைக் முழுதும் பார்த்த பின் ஒரு முடிவுக்கு வருவது சிறப்பு.

இக்காணொளி உத்தர பிரதேச மாநிலம் “கிருஷ்ண பரமாத்மா” பிறந்த ஊரான மதுராவில் அங்கு ஓடும் “யமுனை நதி” தீரத்தில் பதிவுசெய்யப்பட்டது. இங்குள்ள யமுனை நதிக்கரையில் மாலையில் சந்தியா கால பஜனை மற்றும் பூஜைக்கான ஏற்பாடுகளை பக்தர்கள் சிலர் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று வானில் கருமேகங்கள் சூழ ஆரம்பித்தது. மேலும் பலத்த சூறாவளி காற்றும் வீச ஆரம்பித்தது. அந்த சக்தி வாய்ந்த காற்று அந்த நதியோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பூஜை மேடை மற்றும் அலங்காரங்களை தூக்கி வீசும் அளவுக்கு வீசுகிறது. மேலும் லேசான தூறலும் பொழிய ஆரம்பித்தது. இதையெல்லாம் கண்ட அந்த பக்தர்கள் எங்கே மாலை யமுனை நதி சந்தியாக் கால பூஜையும், பஜனையும் நடக்காமல் போய் விடுமோ என்று பயந்தனர்.

அப்போது அந்த பக்தர்களில் ஒருவர் இந்த “யமுனை நதி தாயின்” ஏதோ ஒரு வித கோபத்தால் தான் இவ்வாறெல்லாம் நடக்கிறது என்பதை உணர்ந்து, அவளை சாந்தப் படுத்த “சமஸ்க்ரிதத்தில்” இந்நதியை போற்றி இயற்றப்பட்ட “யமுனாஷ்டகம்” மந்திரத்தை பக்தியுடன் துதிக்க ஆரம்பித்தார். இதைக் கேட்டதும் இம்மந்திரத்தை அறிந்த மற்ற பக்தர்களும், அவருடன் இணைந்து அம்மந்திரத்தை கூறி கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

என்ன ஒரு அதிசயம் சற்று முன்பு வரை கரு மேகங்களும், சூறாவளி காற்றும், லேசான மழையும் இருந்த இடத்தில் இம்மந்திரம் ஜெபிக்கப்பட்ட பின்பு வீசிய சூறைக் காற்று சட்டென அடங்கியது. லேசாக பொழிந்து கொண்டிருந்த மழை நின்றது. மேலும் வானில் சூழ்ந்திருந்த கருமேகங்கள் விலகி மீண்டும் சூரியனின் ஒளி தெரிந்தது.

இதன் பிறகு மீண்டும் அந்த மாலை வேளை பூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கி செய்யப் பட்டு, அந்த மாலை யமுனை நதி சந்தியா கால பூஜை மற்றும் பஜனையும் இனிதே நடந்தது.
உண்மையான பக்தியுடன் செய்யப்படும் மந்திர உச்சாடனங்கள் நிச்சயம் பலனளிக்கும் என்பதை இந்நிகழ்வு காட்டுகிறது.
மந்திர ஜெபத்தின் சக்தியை நிரூபிக்க இந்நிகழ்வை விட வேறு ஒரு சிறந்த உதாரணம் இருக்க முடியாது.