பார்வையால் வளைந்த ஆணியை நிமிர்த்தும் சித்தர் – வீடியோ

Sithu vilaiyattu

வீடியோ கீழே இணைக்கப்பட்டுளளது
சித்தர்களால் செய்ய முடியாதது இவ்வுலகில் ஏதும் இல்லை என்பது நாம் அறிந்த உண்மை. அதே போல சித்தர்களின் அருள் பெற்ற ஒருவரால் பல சித்து விளையாட்டுகளை புரிய முடியும். அந்த வகையில் ஒருவர் பல சித்து விளையாட்டுகளை புரிந்து பார்ப்பவர்களை திகைப்பில் ஆழ்த்துகிறார். அவர் ஒரு வளைந்த ஆணியை தொடாமலே நிமிர்த்து காட்டும் வீடியோ பதிவு கீழே உள்ளது.

இவருடைய பெயர் பாலகிருஷ்ணன். இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு ஒரு சித்தரை சந்தித்துள்ளார். இவரிடம் பல வருடங்கள் பழகியது போல அவர் இவரிடம் பேசி உள்ளார். ஆனால் இவரோ அவரை இதற்கு முன்பு பார்த்தது கிடையாது. எனினும் அவரிடம் உரையாடி உள்ளார். அப்படி உரையாடிக்கொண்டிருக்கையில் அவர் இவருக்கு ஒரு அதிசயத்தை நிகழ்த்தி காட்டியுள்ளார். அது என்ன வென்றால் இவர் மூன்று வாழை பழங்களை சாப்பிட்டு விட்டு அதன் தூளை பாறை மீது போட்டுள்ளார். உடனே அந்த சித்தர் அதன் மீது ஒரு துண்டை போட்டுள்ளார். மீண்டும் துண்டை எடுக்கும்போது அதற்கு கீழே 6 வாழை பழங்கள் இருந்துள்ளன.

இந்த அதிசயத்தை கண்ட உடன் அவரிடம் இது போன்ற கலைகளை கற்கும் ஆர்வம் பாலக்ரிஷ்ணனுக்கு வந்துள்ளது. அன்று முதல் தினமும் அவர் சித்தரை சந்திக்க சென்றுள்ளார். சிதறும் அவருக்கு தொடர்ந்து பெயர்ச்சி அளித்துள்ளார். கடந்த 1999 ஆண்டு அந்த சித்தர் ஜீவசமாதி அடைந்துள்ளார். ஆனால் அவர் எங்கு எப்போது ஜீவசமாதி அடைந்தார் என்பது பாலக்ரிஷ்ணனுக்கு தெரியவில்லை. ஆனால் அதன் பிறகு அந்த சித்தர் சூட்சுமி ரூபத்தில் வந்து இன்றும் இவருக்கு பல சித்த கலைகளை கற்று தந்துகொண்டிருக்கிறாராம். இந்த விஷயங்கள் அனைத்தும் பாலா கிருஷ்ணன் அவரை பற்றி கூறியது.