உங்களுக்கு சொத்துகள் சேர, இல்லற வாழ்வு சிறக்க இம்மந்திரம் துதியுங்கள்

murugan

உலகெங்கும் வாழும் தமிழர்கள் மிகவும் விரும்பி வணங்கப்படும் கடவுளாக முருகப்பெருமான் இருக்கிறார். சூரபத்மனை அழிப்பதற்கு சிவபெருமானால் தனது நெற்றி கண்ணில் இருந்து ஒளியின் வடிவாக தோற்றுவிக்கப்பட்டு, ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, கார்த்திகேயன் என்ற பெயர் பெற்றார். முருகப்பெருமானுக்கு சுப்ரமணியர் என்கிற மற்றொரு பெயரும் உண்டு. அந்த சுப்பிரமணியர் ஆகிய முருகப்பெருமானுக்குரிய சுப்ரமண்ய பஞ்சாக்ஷரி மூல மந்திரம் இதோ.

Murugan_ Swamimalai

சுப்ரமண்ய பஞ்சாக்ஷரி மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்ளீம் ஐம்
ஈம் நம் லம் ஸௌ சரவணபவ

murugan

சுகங்கள் பலவற்றை அருளும் சுப்பிரமணியர் எனப்பெயர் கொண்ட முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த பஞ்சாக்ஷரி மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் துதிப்பது சிறப்பானதாகும். வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, உங்கள் வீட்டின் பூஜையறையில் இருக்கும் முருகபெருமான் படத்திற்கு செண்பக மலர்களை சமர்ப்பித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றிய பின்பு இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை துதிப்பதால் புத்திசாலித்தனம் பெருகும். புதிய சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். தம்பதிகளுக்கு இடையே இருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கி, திருமண வாழ்க்கை சிறக்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் கொடுக்கும். எதிரிகள் தொல்லை, துஷ்ட சக்திகள் போன்றவற்றிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்கும்.

Murugan_ Swamimalai

- Advertisement -

முருகன் வழிபாட்டிற்குரிய தினங்கள்

தினந்தோறும் முருகப் பெருமானை வழிபடலாம் என்றாலும் அவரின் முழுமையான அருளைப் பெறுவதற்கு வழிபாடு செய்ய மாதத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வருகின்ற சஷ்டி தினங்கள் ஆகியவை சிறப்பான தினங்களாக இருக்கின்றன. ஐப்பசி மாதத்தில் வருகின்ற சஷ்டி திதியில் கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் சிறப்பான பலன்கள் ஏற்படும். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதாவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளும் விரதம் சஷ்டி விரதம். அதுபோல கார்த்திகை மாதம் முழுவதும் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தர வல்லதாகும்.

kantha sasti kavasam lyrics

முருகன் வழிபாடு பலன்கள்

முருகப்பெருமானின் முறைப்படி வழிபடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும். எதிரிகள் தொல்லைகளை நீக்கும். மேலும் எதிரிகள் உருவாகாமலும் தடுக்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து காக்கப்படுகிறார்கள். திடீர் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன் மனைவி கருத்து வேறுபாடு உண்டாகும். குடும்ப பிரச்சனைகள் விரைவில் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். வேலை தேடி அலைபவர்களுக்கு தங்களுக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும். தொழில், வியாபாரங்கள் சிறக்கும். லாபங்கள் பெருகும்.

இதையும் படிக்கலாமே:
தோஷங்களை நிவர்த்தி செய்யும் பிள்ளையார் மந்திரம்

இது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Subramanya panchakshari mantra in Tamil. It is also called as Murugan mantras in Tamil or Murugan moola mantras in Tamil or Moola mantras in Tamil or Murugan manthirangal in Tamil.