எளிதாக கிடக்கும் சுக்கின் வியக்க வைக்கும் பயன்கள்

sukku
- Advertisement -

இஞ்சியை நன்றாக காயவைத்து அதில் உள்ள தண்ணீர் வற்றியவுடன் சுக்கு என்ற பெயரில் நமக்கு கிடைக்கிறது. பொதுவாக குழந்தைகளுக்கு பசி எடுக்க வில்லை என்றாலும் வயிறானது மந்தத் தன்மையை அடைந்தாலும் சிறிதளவு சுக்கு அறைத்து ஊற்று என்று நம் வீட்டில் உள்ள பாட்டி நமக்கு இன்றளவும் கை வைத்தியத்தை சொல்லுவார்கள். சாதாரணமாக எல்லா மளிகை கடைகளிலும் கிடைப்பதால் இந்த சுக்கின் பெருமையானது சிலருக்கு தெரியாமல் போய்விட்டது? நம் அன்றாட உபாதைகளை தீர்க்க இந்த சுக்கு பலவகையில் உபயோகப்படுத்தப்படுகிறது  என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

sukku

வயிறு எரிச்சலை நீக்க
கரும்புச் சாறுடன், சுக்கு சிறிதளவு சேர்த்து தினந்தோறும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த சாறினை குடித்து வந்தால் வயிறு எரிச்சலானது குணமாகும்.

- Advertisement -

மூட்டு வலியை நீக்க
சுக்கில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகம் உள்ளது. இரண்டு ஸ்பூன் சுக்குத் தூளுடன், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி அதில் சிறிதளவு தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் மூட்டில் ஏற்படும் வீக்கமும், மூட்டு வலியும் குணமாகும்.

sukku

இருமலை நீக்க
சுக்குத் தூளை பயன்படுத்தி தேனீர் தயாரித்து தொடர்ந்து குடித்து வந்தால் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

- Advertisement -

தலைவலியை குணப்படுத்த
சிலருக்கு வேலை சுமையினாலும், நீண்ட தூர பயணம் மேற்கொண்டாலும், தலைபாரம் வந்துவிடும். தலையில் நீர் கோர்த்து இருந்தால், இரு புருவங்களுக்கு கீழ்ப்பகுதியில் தாங்கமுடியாத வலி வந்துவிடும். இதனை நீக்க சுக்கை சொரசொரப்பாக இருக்கும் கல்லில் உரசி, அதிலிருந்து கிடைக்கும் விழுதுடன், சிறிதளவு பெருங்காயதூளை சேர்த்து தலையில் பற்றுப் போல போட்டு வந்தால் சிறிது நேரத்திலேயே நல்ல பலன் கிடைக்கும். தலையில் இருக்கும் நீரை உறிஞ்சும் சக்தியை சுக்கு பெற்றுள்ளது.

sukku

பல் கூச்சம் வாய் துர்நாற்றம் நீங்க
சிறிதளவு சுக்குப் பொடியுடன் உப்பு சேர்த்து தினமும் காலையில் பல் விளக்க வேண்டும். இது நம் வாய் துர்நாற்றத்தையும், பல் கூச்சத்தையும் நீக்கும்.

- Advertisement -

வயிற்றுப் பிடிப்பு
அதிகமான வேலை சுமை காரணமாக நன்றாக சாப்பிடாமல், நன்றாக தூங்காமல் மன அழுத்தம் ஏற்படும். இதன்மூலம் வயிற்றில் வாய்வு பிடிப்பு உண்டாகிவிடும். அப்போது அரை ஸ்பூன் சுக்குத் தூளுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் உடனடி நிவாரணம் அடையலாம்.

sukku

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு
பொதுவாக அனைவருமே வாரம் ஒருமுறை சுக்கு தூள் சேர்த்த குழம்பினை சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகவும் நல்லது. வயதானவர்களுக்கு ஏற்படும் வாத நோய், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு இது உதவியாக இருக்கும்.

உடல் எடையை குறைக்க
ஒரு டம்ளர் தண்ணீருடன், அரை ஸ்பூன் சுக்கு தூளை சேர்த்து வெதுவெதுப்பாக சூடுபடுத்தி தேன் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து நம் தொப்பையின் அளவும் குறைந்து நம் உடல் எடை சீராக இருக்கும்.

sukku

சிறுநீரக நோய்த்தொற்று
சில நேரங்களில் சிறுநீரானது முழுமையாக வெளியே வராமல் தேங்கிவிட்டால் சிறுநீர் தொற்று ஏற்பட்டுவிடும். வெதுவெதுப்பான பாலில் சுக்கு தூளையும், நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீரக நோய் தொற்றானது நீங்கும்.

சுக்கைப் பற்றிய சில டிப்ஸ் உங்களுக்காக
1. சுக்குடன் வேப்பம்பட்டை சேர்த்து கஷாயமாக காய்ச்சி குடித்து வந்தால் ஆரம்ப நிலையிலுள்ள வாதமானது சரியாகிவிடும்.

2. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் சேர்த்து கசாயம் வைத்து குடித்து வந்தால் நீண்ட நாட்களாக குணமாகாமல் இருக்கும் சளியானது மூன்றே நாளில் குணமாகும்.

sukku

3. சுக்கு, கருப்பட்டி, மிளகு இவைகளை தண்ணீரில் சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டி குடித்துவர உடல் சோர்வானது நீக்கப்பட்டு சுறுசுறுப்பாகும்.

4. சுக்குடன் துளசி இலையையும் சேர்த்து மென்று சாப்பிட்டால் வாந்தி, குமட்டல் நிற்கும்.

5. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை இவைகளை நன்றாக மென்று சாப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் தேள், பூரான், விஷப்பூச்சி கடித்த விஷம் முறியும்.

இதையும் படிக்கலாமே
செம்பருத்தி பூவின் மருத்துவ பயன்கள்

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sukku benefits in Tamil. Sukku uses in Tamil. Sukku payangal in Tamil. Sukku nanmaigal in Tamil. Sukku health benefits in Tamil.

- Advertisement -