வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் மகாலட்சுமிக்கு எந்த மாலை சாற்றி? எப்படி வழிபட்டால் 16 செல்வங்களும் கிடைக்கும் தெரியுமா?

lakshmi-kuthu-vilakku
- Advertisement -

வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி பூஜை செய்வது என்பது ரொம்பவே விசேஷமானதாக கருதப்படுகிறது. அதிலும் இந்த சுக்கிர ஹோரையில் மகாலட்சுமிக்கு இப்படி பூஜை செய்து வந்தால் அள்ள அள்ள குறையாத செல்வங்களும், பணமும், ரத்தினங்களும் பெருகுவதாக ஐதீகம் உண்டு. அக்காலத்தில் மன்னாதி மன்னர்களும் இவ்வகையில் மகாலட்சுமிக்கு பூஜை செய்து தங்களுடைய கஜானாவை பெருக்கி கொண்டனர் என்கிறது புராணங்கள். அப்படியான ஒரு எளிய மகாலட்சுமி வழிபாட்டு முறையை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மகாலட்சுமி படம் அல்லது விக்கிரகம் வைத்திருப்பவர்கள் அதற்கு முறையாக அலங்கரிக்க வேண்டும். விக்ரகம் வைத்திருப்பவர்கள் அதற்குப் பட்டு வஸ்திரம் சாற்றி அலங்கரிக்கலாம். அது போல ஆடை, ஆபரணங்கள் அணிவித்து மகிழலாம். படம் வைத்திருப்பவர்கள் நன்கு சுத்தம் செய்து ஜவ்வாது கலந்த சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். சந்தனத்துடன் ஜவ்வாது சேர்த்து வைக்கும் பொழுது பூஜை அறை ரொம்பவும் தெய்வீகமானதாக மனம் வீசும்.

- Advertisement -

விக்கிரகத்திற்கும் இதே போல சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு வைத்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமிக்கு 9, 21, 51 அல்லது 108 ஆகிய எண்ணிக்கைகளில் கிராம்புகளை ஒரு மஞ்சள் நூலால் மாலை போல கட்டி அணிவிக்க வேண்டும். மகாலட்சுமிக்கு ரொம்பவும் விருப்பமான இந்த கிராம்பு மாலையை நீங்கள் அணிவித்தால் குடும்பத்தில் இருக்கும் இன்னல்கள் நீங்கி அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

பின்னர் வாசனை மிகுந்த மல்லிகை மலர்களை சாற்றுங்கள். அது போல மூன்று தேவியர்களும் வீற்றிருக்கும் தாமரை மலர்களை சமர்ப்பிக்க வேண்டும். எனவே மகாலட்சுமிக்கு தாமரை மலரை விருப்பமான மலராக இருப்பதால் தாமரை மலர் கிடைத்தால் வாங்கி வந்து வையுங்கள். வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் தாமரை மலர் வைத்து மகாலட்சுமிக்கு வழிபட்டு வருபவர்களுக்கு தடைகள் நீங்கி தொட்டதெல்லாம் வெற்றியாகும் என்பது ஐதீகம். மேலும் திருமண தடைகள், தொழில் தடைகள், வருமான தடை, காரிய தடை என்று எத்தகைய தடைகளும் அகன்று விடும் என்பதால் தாமரை மலருக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

- Advertisement -

பின்னர் ஒரு சுத்தமான வெற்றிலையை விரித்து அதன் நுனிப்பகுதியில் மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். அதன் மீது ஒரு அகல் தீபம் வைத்து அதில் சுத்தமான பசு நெய் ஊற்றுங்கள், பசு நெய் மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான ஒரு தீப பொருளாக இருக்கிறது. எனவே நெய்யால் தீபம் ஏற்றுவது தான் ரொம்பவே விசேஷமானது. நெய் இல்லாதவர்கள் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். வாரம் ஒரு முறை நெய் தீபம் ஏற்றுவதில் நாம் குறைந்து விடப் போவது இல்லை.

மகாலட்சுமிக்கு நைய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல் வைக்கலாம். சர்க்கரை பொங்கல் செய்ய முடியவில்லை என்றால் சாதாரணமாக கற்கண்டு, டைமன் கற்கண்டு, பேரிச்சைப்பழம், உலர் திராட்சை, முந்திரி பருப்பு போன்றவற்றையும் வைக்கலாம். பின்னர் மகாலட்சுமி 108 நாமாவளிகளை உச்சரித்து, குங்கும அர்ச்சனை அல்லது மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்யலாம். பிறகு நெய் தீபம் ஏற்றி தூப, தீப, ஆரத்தி காண்பிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சுக்கிர ஹோரையில் முறையாக மகாலட்சுமிக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தால் எத்தகைய வறுமையில் இருந்தாலும் நீங்கள் செல்வ மழையில் நனையலாம்.

- Advertisement -