சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் : மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு பெயர்த்த சுக்கிர பகவான். இதனால் 12 ராசிக்கும் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

sukran-peyarchi
- Advertisement -

ஒரு மனிதனுக்கு செல்வம், கலாரசனை, இல்லற வாழ்க்கை ஆகியவற்றை அருளும் நவகிரக நாயகனாக சுக்கிர பகவான் திகழ்கிறார். இந்த சுக்கிர பகவான் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி இரவு 7.51 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். வருகின்ற ஜூலை மாதம் 7 ஆம் தேதி வரை கடக ராசியில் சுக்கிர பகவான் இருப்பதன் காரணமாக 12 ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

- Advertisement -

Mesham Rasi

மேஷ ராசியினருக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியால் ஈடுபடுகின்ற காரியங்கள் அனைத்தும் தடை, தாமதங்களின்றி நல்லபடியாக முடியும். காதல் விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். சகோதர உறவுகளால் ஆதாயம் ஏற்படும். லட்சுமி கடாட்சம் ஏற்படுவதால் எதிர்பாராத வகையில் தன லாபங்கள் இருக்கும். குறிப்பாக பெண்கள் மூலமாக பண வரவுகள் உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லக்கூடிய யோகமும் உண்டாகும்.

ரிஷபம்

- Advertisement -

rishabam

ரிஷப ராசியினருக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி என்பது காதல் விவகாரங்களில் அனுகூலங்களை ஏற்படுத்தும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். புதிய வீடு, வாகனம் வாங்குகின்ற யோகம் சிலருக்கு ஏற்படும். கொடுத்த வாக்கை நிறைவேற்றி நல்ல பெயரை சம்பாதிப்பீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழும், பொருளும் ஒரு சேர பெறக்கூடிய வாய்ப்புகள் அமையும்.

மிதுனம்

- Advertisement -

midhunam

மிதுன ராசியினருக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி காலத்தில் தங்களின் சொந்த திறமையாலும் உழைப்பாலும் தாராள பொருள் வரவு உண்டாகும். சிலருக்கு பெரிய மனிதர்களின் தொடர்பால் பொருளாதார ரீதியிலான அனுகூலங்கள் இருக்கும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். சிலர் விலையுயர்ந்த ஆடம்பர பொருட்களை வாங்குகின்ற யோகம் ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தங்க ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும்.

கடகம்

kadagam

கடக ராசியினருக்கு அந்த ராசியிலேயே சுக்கிரன் பெயர்ச்சியாகி இருப்பதால் பல வித யோகங்கள் இந்த ராசியினருக்கு ஏற்படும். திருமணம் செய்தல், புதிய வீடு கட்டுதல் போன்ற சுப காரிய விரயங்கள் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும், சேமிப்பு அவசியம். கலைத்துறையில் இருப்பவர்கள் சமூகத்தில் புகழையும், நல்ல வருமானத்தையும் பெறுவார்கள்.

சிம்மம்

simmam

சிம்ம ராசியினருக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி என்பது பொருளாதார ரீதியிலான முன்னேற்றங்களை கொடுக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெற்று நல்ல லாபம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வருமானம் ஏற்படும். சிலருக்கு வாழ்க்கைத் துணை வழியில் சொத்து சேர்க்கை உண்டாகும். குழந்தைகள் கல்வியிலும், கலைகளிலும் சிறப்பான நிலையை பெறுவார்கள்.

கன்னி

kanni

கன்னி ராசியினருக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி காலத்தில் கலவையான பலன்களே உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழக வேண்டும். வாகனங்கள் வழியில் சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் தங்களின் திறமையால் பொருளாதார நிலையில் ஏற்றம் காண்பார்கள். பண வரவுகளில் சிக்கல் ஏற்படும் என்றாலும் முழுமையான தொகை உங்களுக்கு வந்து சேரும்.

துலாம்

Thulam Rasi

துலாம் ராசியினருக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியால் பல நற்பலன்கள் உண்டாகும். விருந்து, உபகாரம் போன்ற நிகழ்வுகளில் அதிகம் கலந்து கொள்ளும் சூழல் ஏற்படும். காதல் விவகாரங்களில் வெற்றி உண்டாகும். திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கைத் துணையால் மணமகிழ்ச்சி ஏற்படும். சிலர் திடீர் வெளியூர் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய அமைப்பு உருவாகும். பொருளாதார நிலையில் நல்ல ஏற்றம் காணப்படும்.

விருச்சிகம்

viruchagam

விருச்சிக ராசியினருக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி காரணமாக தாராள பொருள் வரவு இருந்தாலும் அதற்கேற்றார் போல் செலவுகளும் வந்து சேரும். வாழ்க்கைத் துணைக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வெளியூர் பயணங்களின் பொழுது அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். பணம் தொடர்பான விவகாரங்களில் பிறரிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஆடம்பர செலவுகளை குறைத்து, சேமிப்பை அதிகரிப்பதால் கஷ்டமில்லாமல் இந்த ஒரு மாத காலத்தை ஓட்டி விடலாம்.

தனுசு

dhanusu

தனுசு ராசியினருக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி காலத்தில் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் ஏற்படும். காதல் உறவுகளில் வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில் பிற பெண்களுடன் பழகும் பொழுது மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். திருமணம் ஆகாமல் தவித்தவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகங்களில் இருப்பவருக்கு மிக உயர்ந்த பதவி கிடைக்கக்கூடும்.

மகரம்

magaram

மகர ராசியினருக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி காலத்தில் மன அழுத்தம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளை கொடுக்கும். சிலருக்கு கடன் வாங்கும் சூழலும் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். குடும்பத்தினருக்கு உடல்நல பாதிப்புகளால் மருத்துவ செலவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் உரசல்கள் ஏற்படலாம். கொடுக்கல் – வாங்கல்களில் இழுபறி நிலை ஏற்படும்.

கும்பம்

kumbam

கும்ப ராசியினருக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி காலத்தில் உடல் நலம் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத வருமானங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் திறமையால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை பயணம் மேற்கொள்வார்கள். திருமணமாகி குழந்தை பேறு இல்லாமல் தவித்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். சிலர் புதிய வாகனம், வீடு வாங்குகின்ற யோகத்தை பெறுவார்கள்.

மீனம்

Meenam Rasi

மீன ராசியினருக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி என்பது கலவையான பலன்களை தரக்கூடியதாக இருக்கும். சிலர் பழைய வாகனங்களை விற்று, புது வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைத்து, அதன் காரணமாக பணிச்சுமை கூடும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய லாபங்கள் இல்லையென்றாலும் நஷ்டம் ஏற்படாது. குடும்பத்திற்காக சிலர் கடன் வாங்கும் சூழலும் ஏற்படும்.

- Advertisement -