உங்கள் வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு எந்த பொருட்களை தானமாக கொடுக்க கூடாது? இப்படி தானம் கொடுத்தால் கட்டாயம் வீட்டிற்கு கஷ்டம் வரத்தான் செய்யும்.

women

பொதுவாகவே நம்முடைய இந்து சாஸ்திரப்படி நம் வீட்டிற்கு வருகை தரும் சுமங்கலி பெண்களை வெறும் கையோடு, வெறும் வயிற்றோடு நம் வீட்டிலிருந்து வெளியே அனுப்பக்கூடாது. சுமங்கலிப் பெண்கள் மட்டும் அல்லாமல், நம் வீட்டிற்கு வருகை தருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீரை மட்டுமாவது பருகக் கொடுக்க வேண்டும். அந்த வரிசையில் உங்கள் வீட்டிற்கு வருகை தரும் பெண்கள், உங்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போது, எந்த  பொருளை அவர்களுக்கு கொடுத்து வழி அனுப்பினால் மிகவும் நல்லது என்பதைப் பற்றியும், அந்தப் பொருளை எப்படி அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kungumam

உங்களுடைய விருப்பத்தோடு, உங்களுடைய மன நிறைவோடு உங்கள் வீட்டில் இருக்கும் எந்த ஒரு மங்களகரமான பொருட்களையும், உங்கள் வீட்டிற்கு வருகை தரும் சுமங்கலிப் பெண்களுக்கு கொடுத்து அனுப்பலாம். மஞ்சள், குங்குமம், பூ, வளையல், ரவிக்கைத் துணி, இப்படியாக எந்தப் பொருளை நீங்கள் விரும்பினாலும் உங்கள் வீட்டில் இருந்து, ஒரு பெண்ணுக்கு தாராளமாக தானம் கொடுக்கலாம்.

இதன் மூலம் உங்களுடைய வீட்டிற்கு கஷ்டம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் எந்த ஒரு பொருளை தானமாகக் கொடுத்தாலும், அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போது கொடுக்கக்கூடாது. நீங்கள் கொடுக்கும் பொருளை அந்த சுமங்கலி பெண் பெற்றுக்கொண்டு உங்களுடைய வீட்டிலிருந்து உடனடியாக வெளியே கிளம்பி விடக்கூடாது.

flower-poo

உங்களிடம் இருந்து தானமாக பெறப்பட்ட பொருளை அவர்களுடைய கையில் வைத்துக்கொண்டு ஒரு ஐந்து நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் உங்களுடைய வீட்டில் இருந்துவிட்டு அதன் பின்பு வீட்டைவிட்டு கிளம்புவது தான் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. இதேபோல், உங்களுடைய வீட்டில் மாலை நேரத்தில் தீபம் ஏற்றிய உடனே, வீட்டில் இருக்கும் சுமங்கலிப் பெண்களும் வெளியே செல்லக்கூடாது. உங்கள் வீட்டிற்கு வருகை தந்திருக்கும் சுமங்கலிப் பெண்களை, உடனடியாக விளக்கு வைத்த கையோடு வீட்டிலிருந்து அனுப்பி வைக்கக் கூடாது. விளக்கு ஏற்றி சிறிது நேரம் கழித்து கிளம்ப சொல்லலாம். 5 நிமிடம் கழித்து கிளம்பினாலும் போதும்.

அதேபோல் நம் வீட்டில் விளக்கை மலை ஏற்றியதும், நம் வீட்டிலிருந்து சுமங்கலிப்பெண்கள் உடனடியாக வீட்டிலிருந்து கிளம்பக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. மங்களகரமான எந்த பொருட்களையும் நம் வீட்டிலிருந்து அடுத்தவர்களுக்கு மனநிறைவோடு தானம் கொடுப்பதன் மூலம் நம் வீட்டிற்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது.

deepam

ஒருவேளை இந்த பொருளை தானம் கொடுப்பதன் மூலம் நம் வீட்டு ஐஸ்வரியம் வெளியில் போய்விடுமோ, என்ற சங்கடம் உங்களுடைய அடி மனதில் இருந்தால், அந்தப் பொருளை சங்கடத்துடன் எந்த ஒரு சுமங்கலிப் பெண்களுக்கும் தானமாக கொடுக்காதீர்கள். அது உங்களுக்கு முழுமையான பலனைக் கொடுக்காது, மாறாக தானம் கொடுப்பவற்கு கஷ்டம் வருவதற்கும் வாய்ப்பு உண்டு என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.