வெயில் நேரத்திற்கு மதிய உணவாக உடல் சூட்டை தணிக்கும் இந்த மோர் குழம்பு செய்து, சுடச்சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள்

more1
- Advertisement -

பொதுவாகவே அதிகமான வெயில் நேரமாக இருந்தால் சாப்பிடவே தோன்றாது. வெயிலின் உஷ்ண தன்மையின் காரணமாக எப்பொழுதும் அதிகப்படியான வியர்வை சுரந்து கொண்டே இருக்கும். இதனால் உடல் மிகவும் களைப்புடன் இருக்கும். ஆகவே விருப்பமாக சாப்பிட முடியாது. இது போன்ற சூடான நேரத்தில் கார குழம்பு, மீன் குழம்பு போன்ற காரமான உணவுகளை பார்த்தாலே எரிச்சலாக இருக்கும். இவ்வாறு சாப்பிடுவதனால் உடல் சூடு அதிகமாகி வயிற்று வலி உண்டாகும். எனவே இது போன்ற உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இவ்வாறு தயிர்சாதம், மோர்சாதம் செய்து கொடுத்தால் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும். இப்படி சாப்பிடும்பொழுது வெயில் நேரத்திற்கு அவ்வளவு அற்புதமாக இருக்கும். வாருங்கள் இந்த மோர் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
தயிர் – அரை லிட்டர், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, அரிசி மாவு – 2 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், எண்ணெய் – 1 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் பொடியாக நறுக்க வேண்டும். பின்னர் 2 ஸ்பூன் அரிசி மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அரை லிட்டர் தயிரை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனையும் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் பொடியாக நறுக்கிய இஞ்சியையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ள அரிசி மாவையும் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு இவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பிறகு இவற்றுடன் தேவையான தண்ணீரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கொதி வர ஆரம்பித்ததும் அடுப்பை அனைத்து விட்டு கரைத்து வைத்துள்ள தயிரையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான மோர் குழம்பு தயாராகிவிட்டது. இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

- Advertisement -