ஒருமுறை இந்த வெண்டைக்காய் மோர் குழம்பை செய்து கொடுத்து பாருங்கள். இனி வீட்டில் உள்ளவர்கள் மறுபடியும் இதைச் செய்யச் சொல்லி உங்களைத் தொல்லை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்

vendakkai-mor-kulambu3
- Advertisement -

தினமும் மதிய உணவிற்காக ஏதேனும் ஒரு குழம்பு, பொரியல் என்று சமைத்து வைக்கப்படுகிறது. ஆனால் இன்றைய வெப்பமான சூழ்நிலையில் காரமான குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவை இன்னும் நமது உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்துகிறது. அதற்காக உணவுடன் தயிர் சேர்த்துக் கொள்வது என்பது நமது உடல் சூட்டை சமநிலையில் வைக்கிறது. அதற்காக இந்த மோர் குழம்பை தினமும் சிறிதளவாவது சாதத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் மோர் குழம்புடன் வெண்டைக்காய் சேர்த்து செய்யும் மோர் குழம்பு மிகவும் சுவையாக இருக்கிறது. கல்யாண வீடுகளிலும், விசேஷ பந்தியிலும் இதுபோன்ற வெண்டைக்காய் மோர் குழம்பு இடம்பெறுகிறது. வாருங்கள் இந்த சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – 20, புளிக்காத மோர் – 500 மில்லி, கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், துவரம்பருப்பு – இரண்டு ஸ்பூன், காய்ந்தமிளகாய் – இரண்டு, பச்சை மிளகாய் – ஒன்று, தேங்காய் – 1/2 மூடி, அரிசி – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், உப்பு ஒரு ஸ்பூன் கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெண்டைக்காயை தண்ணீரில் சுத்தமாக அலசிக் கொண்டு, அவற்றை காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி விட்டு, வெண்டைக்காயை இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெண்டைக் காய்களை சேர்த்து வதக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மறுபடியும் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் அரிசி, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு மற்றும் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் அரை மூடி தேங்காயைத் துருவி சேர்த்து, அதனையும் வறுத்துக் கொண்டு, ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் 500 மில்லி மோருடன் அரைத்து வைத்துள்ள இந்த பருப்பு கலவையை கலந்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பின் மீது வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் இரண்டு வரமிளகாய் மற்றும் ஒரு பச்சை மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போட்டு வதக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து கலந்து, மோருடன் வதக்கி வைத்துள்ள வெண்டையும் சேர்த்து கலந்து விடவேண்டும் இறுதியாக கொத்தமல்லித் தழையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -