இனி வெயிலில் அலைஞ்சு முகம் கறுத்து போயிடுமே என்ற கவலையே இல்லாம வெளியே சென்று வர இந்த பேக் போட்டாலே போதும். வெயில் பட்டு கறுத்து போன முகத்தை பத்தே நிமிஷத்துல பளிச்சென்று மாத்திடலாம்.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் முகத்தை பளிச்சென்று பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப முகத்தை பராமரிப்பது மாறுபடும். அதுவும் இந்த வெயில் காலத்தில் கேட்கவே வேண்டாம் கொஞ்சம் நேரம் வெளியில் சென்று வந்தாலே முகம் முழுவதும் கறுத்து விடும். உடனே அதை சரி செய்யா விட்டால் அந்த நிறம் நிரந்தரமாக நம்முடைய முகத்தில் தங்கி விடும். இப்போது இந்த அழகு குறிப்பு பதிவில் முகத்தை எளிமையான முறையில் பளிச்சென்று மாற்றுவது எப்படி என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

முன்பெல்லாம் இந்த வெயிலை குறித்தும் வெயிலினால் முகம் கருத்து விடுவது குறித்தும் பெரிய அளவில் யாரும் யோசித்தது கிடையாது. காரணம் அப்போதெல்லாம் அதிக அளவில் பெண்கள் வெளியில் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்க வில்லை. ஆனால் இன்றைய கால கட்டத்தில் பெண்கள் கட்டாயம் வெளியில் சென்று வேலை பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இதனால் அவர்களுடைய சருமம் பெரிய அளவில் பாதிப்புக்கும் உண்டாகிறது. இந்த ஒரு குறிப்பு நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டால் எவ்வளவு வெயில் அடித்தாலும் உங்கள் முகத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள முடியும். வாங்க அது என்னவென்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

வெயிலினால் கருத்து போன முகம் வெள்ளையாக மாற
நீங்கள் வெளியில் சென்று வந்தவுடன் முதலில் உங்கள் முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவிய பிறகு மெல்லிய காட்டன் துணி வைத்து துடைத்து விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் வெளியில் இருக்கும் தூசு, அழுக்குகள் நம் முகத்தில் தங்காமல் உடனே வெளியேறி விடும். இது அடுத்ததாக நீங்கள் போடும் பேக் வேலை செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.

இப்போது ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் தயிர் இவை இரண்டையும் கலக்க ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து நன்றாக ஒரு பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். இப்போது ஒரு முழு எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டு பாதியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முதல் பாதி எலுமிச்சை பழத்தை எடுத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் பேஸ்டில் முக்கி அதை முகத்தில் வட்ட வடிவில் மசாஜ் செய்வது போல முகம் முழுவதும் தேய்த்து விடுங்கள். இப்படி தேய்த்த பிறகு இந்த கிரீம் உங்கள் முகத்தில் பத்து நிமிடம் வரை அப்படியே இருக்க வேண்டும்.

பத்து நிமிடம் கழித்து அடுத்த பாதி எலுமிச்சை பழத்தை இதே போல பேஸ்ட்டில் நன்றாக தொட்டு எடுத்து மீண்டும் ஒரு முறை லேசாக மசாஜ் செய்து கொடுங்கள். அதன் பிறகு முகத்தை நல்ல சுத்தமான தண்ணீர் கொண்டு அலசிய பிறகு மெல்லிய காட்டன் துணி வைத்து துடைத்து விடுங்கள். அதன் பிறகு உங்கள் இடம் இருக்கும் மாஸ்டரைசர் அல்லது ஆலோவேரா ஜெல் ஏதேனும் ஒன்றை முகத்தில் அப்ளை செய்து விடுங்கள். வெயிலினால் எந்த அளவு உங்கள் சருமம் பாதித்திருந்தாலும் இப்படி செய்யும் பொழுது நிச்சயம் பளிச்சென்று மாறி விடும்.

- Advertisement -

தயிர்,கடலை மாவு இரண்டுமே முகத்தில் இருக்கும் அழுகுகள் எல்லாம் நீக்கி முகம் பளிச்சென்று மாற பெரிதும் உதவி செய்யும். இத்துடன் எலுமிச்சை, ஆரஞ்சு இரண்டிலும் இருக்கும் சிட்ரிக் வெயிலினால் ஏற்பட்டிருக்கும் சன்டேனை உடனடியாக நீக்கி முகம் பிரகாசமாக மாற உதவி செய்யும்.

இதையும் படிக்கலாமே: காபி தூள் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை நீக்குமா எப்படி? கருவளையம் எளிதாக நீங்க இப்படி செய்யுங்கள்!

இனி நீங்க வெளியில் எங்கு சென்று வந்தாலும் உடனே இந்த பேக்கை போட்டு விடுங்கள். வெயிலால் முகம் கறுத்து விடுமே என்ற பயம் இனி உங்களுக்கு வரவே வராது.

- Advertisement -