வயிற்றில் இருக்கக்கூடிய அத்தனை பிரச்சனைகளும் நீங்க, உடலில் இருக்கும் கொழுப்பு கரைய சுண்டக்காய் வறுவலை இப்படி செய்து சாப்பிடுங்கள்.

sundakkai
- Advertisement -

சுண்டைக்காயை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் அது நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தரும். சுண்டைக்காயில் இருக்கும் துவர்ப்புத் தன்மை நீங்க, அதை எப்படி வறுவல் செய்வது என்பதை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த சுண்டைக்காயை நாம் சாப்பிடுவதால் குடலில் இருக்கும் புழு வெளியேற்றப்படுகிறது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரும்பு சத்து அதிகரிக்கும். ரத்த சோகை நீங்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு, அதிகமாக பால் சுரக்கும். சரி, குறிப்பை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

முதலில் பச்சையாக இருக்கக்கூடிய சுண்டைக் காய்களை எடுத்து கழுவி இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால், சிறிய ஊரலில் நசுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ஒரு அகலமான கடாயில் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் அளவு ஊற்றி அது நன்றாக காய்ந்ததும், உளுந்து – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு வாடை நீங்கியதும் மீடியம் சைஸ் தக்காளி பழம் ஒன்றை பொடியாக நறுக்கி சேர்த்து தக்காளியை நன்றாக வதக்கி விடுங்கள்.

vengayam thakkali

அடுத்தபடியாக தயாராக நசுக்கி வைத்திருக்கும் சுண்டைக்காயை கடாயில் கொட்டி, கட்டாயம் 3 நிமிடம் எண்ணெயில் வதக்க வேண்டும். சுண்டைக்காய் எண்ணெயில் நன்றாக வழங்கினால் தான் அதன் சுவை அதிகரிக்கும். வதங்கிய சுண்டைக்காயில் 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து, சீரகத்தூள் – 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், மல்லித் தூள் – 1/2 ஸ்பூன், சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு வேகவைத்து கொள்ளுங்கள்.

vanali

சுண்டைக்காய் வெந்ததும் மூடியைத் திறந்து சுண்டைக் காய்களை நன்றாக வதக்கி, தண்ணீர் வற்றும் படி சிவக்க வைத்து எடுத்தால் சூப்பரான சுண்டைக்காய் வறுவல் தயார். இப்படி செய்தால் சுண்டைக்காயை பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. மாதத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் சுண்டைக்காயை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது.

- Advertisement -