துலாம் ராசியில் அமர்ந்த சூரியன் – இதனால் உங்கள் ராசிக்கு என்ன பலன்

astrology

நவகிரகங்களில் முதன்மையான கிரகமாக போற்றப்படுபவர் “சூரிய பகவான்” ஆவர். இந்த சூரிய பகவான் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி இரவு 7.02 மணிக்கு சிம்ம ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த சூரிய பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படும் பொது பலன்களை இங்கு காண்போம்.

மேஷம்

Mesham Rasi

மேஷ ராசிக்கு ஆறாம் ராசியான கன்னி ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகி இருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு தனவரவுகள் சுமாராக தான் இருக்கும். உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள், தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் சகஜமான நிலை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரகளில் சராசரி லாபம் தான் கிடைக்கும். உடல் நலத்தில் அவ்வப்போது சிறு பாதிப்புகள் உண்டாகும்.

ரிஷபம்

Rishabam Rasi

- Advertisement -

ரிஷப ராசியினருக்கு ஐந்தாம் ராசியான கன்னி ராசிக்கு சூரியன் பெயர்ச்சியடைந்துள்ளதால் உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிவோர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். அரசியல் துறையில் இருப்பவர்கள் எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் தேற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பொருளாதார நிலை சராசரியான அளவில் இருக்கும். பண விவகாரங்களில் முன்னெச்சரிக்கை அவசியம்.

மிதுனம்

midhunam

மிதுன ராசியினருக்கு நான்காமிடமாகிய கன்னி ராசிக்கு சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் தேவையற்ற அலைச்சல்களால் சற்று உடல் நல பாதிப்பு ஏற்படலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சற்று தள்ளி வைப்பது நல்லது. உங்களுக்கு வந்து சேர வேண்டிய தன வரவுகள் வட்டியுடன் வந்து சேரும். பணியிடங்கள் மற்றும் வெளிநபர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். சிலர் வாங்கிய கடன்களை மொத்தமாக அடைக்கும் நிலை உருவாகும்.

கடகம்

Kadagam Rasi

கடக ராசியினருக்கு மூன்றாம் ராசியான கன்னி ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சியடைவதால் நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு வெற்றி ஏற்படும் சூழ்நிலை உருவாகும். பண வரவுகள் நன்றாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். வியாபாரம் மற்றும் தொழில்களில் சுமாரான லாபம் மட்டுமே கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல் போன்ற விவகாரங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

பெண் குழந்தை பெயர்கள் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

சிம்மம்

simmam

சிம்ம ராசியினருக்கு இரண்டாம் ராசியான கன்னி ராசியில் பெயர்ச்சியடைந்திருப்பதால் தன வரவுகள் சிறிது தாமதத்திற்கு பின்பு வந்து சேரும். வீட்டிலுள்ள பெண்களுக்கு உடல் நலக்குறைபாடுகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் ஏற்படும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. குழந்தைகள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

கன்னி

Kanni Rasi

கன்னி ராசியினருக்கு அந்த ராசியிலேயே சூரியன் பெயர்ந்திருப்பதால் உடலாரோக்கியத்தில் சிறிது பாதிப்புகள் இருக்கும். வேலை தேடும் நபர்களுக்கு சிறிது தாமதத்திற்கு பிறகு வேலை கிடைக்கும். ஒரு சிலர் புனித பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசியலில் இருப்பவர்கள் அனைத்திலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். குடும்ப பொருளாதார நிலை சராசரியாக இருக்கும்.

துலாம்

Thulam Rasi

துலாம் ராசியினருக்கு பன்னிரண்டாவது ராசியான கன்னி ராசிக்கு சூரியன் பெயர்ந்திருப்பதால் தந்தை வழியில் உடல் நல பாதிப்பால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். தம்பதிகளுக்கிடையே விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் மற்றும் வியாபார முயற்சிகளில் ஈடுபடுவதை ஒத்தி வைக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் ஆத்திரத்தை தவிர்த்து பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

விருச்சகம்

Virichigam Rasi

விருச்சிக ராசியினருக்கு பதினோறாவது ராசியான கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சியாவதால் பணியிலிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் ஊதிய உயர்வுகள் ஏற்படும். உடல் நலத்தில் கவனமுடன் இருப்பது அவசியம். உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் உருவாகும். உறவினர்கள் மற்றும் வெளியாட்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். பெண்கள் வழியில் தன வரவுகள் உண்டாகும்.

புரட்டாசி சனிக்கிழமை விரதம் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்

தனுசு

Dhanusu Rasi

தனுசு ராசியினருக்கு பத்தாவது ராசியான கன்னி ராசிக்கு சூரியன் பெயர்ந்திருப்பதால் மாணவர்கள் கல்வியில் சற்று சிரமப்படுவார்கள். ஒரு சிலருக்கு வெளிநாடுகள் செல்லக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சற்று தடை, தாமதத்திற்கு பின்பே வெற்றி கிட்டும். சிலர் புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சராசரியான லாபம் கிடைக்கும்.

மகரம்

Magaram rasi

மகர ராசியினருக்கு ஒன்பதாவது ராசியான கன்னி ராசிக்கு சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். உடல் மற்றும் மனதில் புதிய பலமும் உற்சாகமும் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை ஒத்தி வைப்பது நல்லது. குழந்தை இல்லாமல் வாடியவர்களுக்கு குழந்தை பிறகும். பணம் சம்பந்தமான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

கும்பம்

Kumbam Rasi

கும்ப ராசியினருக்கு எட்டாவது ராசியான கன்னி ராசிக்கு சூரியன் பெயர்ந்திருப்பதால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களுடன் சற்று அனுசரித்து செல்வது நல்லது. ஒரு சிலர் மக்களால் பாராட்டப்படும் காரியங்களை செய்து புகழ் பெறக்கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும்.

மீனம்

Meenam Rasi

மீன ராசியினருக்கு ஒன்பதாவது ராசியான கன்னி ராசிக்கு சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் குடும்பத்தில் இருப்பவர்கள் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவார்கள். பல காரணங்களுக்காக கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை உண்டாகும். குடும்ப பொருளாதார நிலை ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். உங்களுக்கு ஆகாதவர்கள் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுத்த முயலக்கூடும் என்பதால் எதிலும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு சிலர் ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்ளக்கூடும்.

ஜோதிடம், ஜாதகம், வார பலன், ஆன்மிக தகவல்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்யுங்கள்.