ஜோதிடம் : 12 ராசியினருக்கும் ஏப்ரல் மாத சூரிய பெயர்ச்சி பலன்கள் இதோ

suriyan-peyarchi

ஜோதிட சாஸ்திரத்தில் சூரிய பகவான் முதன்மையான கிரகம் என எடுத்து கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 2.26 மணிக்கு “மீன” ராசியிலிருந்து “மேஷ” ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதனால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

Mesham Rasi

மேஷ ராசியிலேயே சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உடல் நிலை நன்றாக இருக்கும். நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் ஒழியும். புதிய வீடு, மனை வாங்கும் சூழல் சிலருக்கு உண்டாகும். தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் தீரும். சுப காரியங்களில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். பொருள் வரவில் எந்த குறையும் ஏற்படாது. பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயங்கள் உண்டாகும்.

ரிஷபம்:

Rishabam Rasi

- Advertisement -

ரிஷப ராசிக்கு 12 ஆம் வீட்டிற்கு சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உடல்நலத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பணியிடங்களில் வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களோடு பிரச்சனைகள் தோன்றலாம். எதிர்பார்த்த உதவிகள் சிறிது தாமதத்திற்கு பிறகு கிடைக்கும். தந்தைக்கு உடல்நலம் பாதித்து மருத்துவ செலவுகள் ஏற்பட கூடும். தொழில், வியாபாரங்களில் பெரிய லாபங்கள் இல்லையென்றாலும் நஷ்டம் ஏற்படாது.

மிதுனம்:

midhunam

மிதுன ராசிக்கு 11 ஆம் வீடான மேஷ ராசிக்கு புதிதாகத் தொடங்கிய தொழில் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணவரவுகள் சற்று இழுபறி நிலை ஏற்பட்டு வந்து சேரும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வைக்க வேண்டும். ஒரு சிலருக்கு தந்தை வழி உறவினர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

கடகம்:

Kadagam Rasi

கடக ராசிக்கு சூரியன் 10 ஆம் வீடான மேஷ ராசிக்கு சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உடலிலும் மனதிலும் புதிய உற்சாகம் ஏற்படும். கல்வி, கலைகளில் மாணவர்கள் சிறப்பார்கள். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும். வெளிநாடுகள் செல்லும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பொது மக்களிடம் உங்களின் செல்வாக்கு உயரும்.

சிம்மம்:

simmam

சிம்ம ராசிக்கு இந்த ராசியின் அதிபதியாகிய சூரியன் 9 ஆம் வீடான மேஷ ராசியில் இருப்பதால் வருமானம் சீரான அளவில் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு பூமி லாபம் ஏற்படும். தொழிலுக்காக அரசாங்க வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதர உறவுகளால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை இருக்கும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி கடன்களை தீர்ப்பீர்கள்.

கன்னி:

Kanni Rasi

கன்னி ராசிக்கு சூரியன் 8 ஆம் இடத்தில் அமர்வதால் அடிக்கடி மருத்துவ செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். தொழில், வியாபாரங்களில் கடுமையான போட்டி இருக்கும். குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல் வாங்கலில் சிக்கல்கள் உருவாகும். உறவினர்களுடன் மனக்கசப்பு உண்டாகலாம். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சிகள் செய்தால் மட்டுமே வெற்றிகளை பெற முடியும். பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

துலாம்:

Thulam Rasi

துலாம் ராசிக்கு 7 ஆம் வீடான மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் நீண்ட காலமாக தடைபட்டு வந்த சுப காரியங்கள் நடைபெறும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களோடு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உஷ்ணம் சம்பந்தமான பாதிப்புகள் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வைப்பது அவசியம். சிலருக்கு கடன் வாங்கும் சூழலும் உண்டாகும். பெண்கள் வழியில் சிலர் பிரச்சனைகளை சந்திக்க கூடும்.

விருச்சகம்:

Virichigam Rasi

விருச்சிக ராசிக்கு 6 ஆம் இடமான மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சியாகியிருப்பதால் உங்களுக்கோ உங்களின் நெருங்கிய உறவுகளுக்கோ ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். தொழில், வியாபாரங்களில் போட்டி நிலவினாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வாகனங்களில் பயணம் செய்யும் போது எச்சரிக்கை தேவை. பணியிடங்களில் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவதால் பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். குழந்தைகள் வழியில் சிலருக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு:

Dhanusu Rasi

தனுசு ராசிக்கு 5 ஆம் வீடான மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் கடுமையான உழைப்பை தந்து வெற்றி பெறுவீர்கள். சிறு உடல் நல பாதிப்புகள் இருக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். தொழில், வியாபாரங்கள் சராசரியான அளவில் இருக்கும். தந்தை வழி உறவுகளால் நன்மைகள் உண்டாகும். புதிய முயற்சிகளை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது. விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு சராசரியான லாபமே கிடைக்கும்.

மகரம்:

Magaram rasi

மகர ராசிக்கு 4 ஆம் வீடான மீன ராசிக்கு சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உடல் நலம் அடிக்கடி பாதிப்படைந்து சரியாகும். புதிய முயற்சிகளை சற்று தாமதித்து செயல்படுத்துவது நல்லது. கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகளை அடைவதில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக தீரும். பணியாளர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளால் உங்களுக்கு லாபங்கள் ஏற்படும். சிலர் தொலைதூர பயணங்கள் செல்லும் சூழல் உண்டாகும்.

கும்பம்:
Kumbam Rasi

கும்ப ராசிக்கு சூரியன் 3 ஆம் இடமான மேஷ ராசிக்கு பெயர்ச்சியடைந்திருப்பதால் சிலருக்கு கடன் வாங்க கூடிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். பணியிடங்களில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். தொழில், வியாபாரங்களில் சராசரியான நிலையே இருக்கும். சகோதா உறவுகளால் சிலருக்கு பிரச்சனைகள் உண்டாகும். சிலருக்கு மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும்.

மீனம்:

Meenam Rasi

மீன ராசிக்கு 2 ஆம் வீடான மேஷத்தில் சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உடலில் சிறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் இருப்பது அவசியம். மக்களிடம் செல்வாக்கு ஏற்படும். பணவரவுகளில் குறை ஏதும் ஏற்படாது. சிலர் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதும்,புனித யாத்திரை மேற்கொள்ளும் சூழல் அமையும். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவிகள் கிடைக்கும் அமைப்பு உருவாகும்.

இதையும் படிக்கலாமே:
குடும்ப விடயங்களில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Surya peyarchi april 2019 in Tamil. It is also called as 12 rasi palangal in Tamil or Suryan peyarchi in Tamil or 12 rasi palan in Tamil or 12 rasigal in Tamil.