சூரிய திசை பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

Suriyan
- Advertisement -

ஜோதிடத்தில் திசை என்பது நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் ஒரு மனிதனின் வாழ்வில் அந்த கிரகத்திற்குரிய காலம் வரை ஆதிக்கம் செலுத்தும் நிலை ஆகும். ஜாதகம் கணிக்கின்ற போது அந்த ஜாதகரின் ஜாதகத்தில் கிரகங்களின் தசா புக்தி பலன்களை பார்க்கின்றபோது ஒருவருக்கு தசாநாதன் சிறப்பாக அமையப் பெற்று விட்டால் அதன் பலா பலன்கள் மிகச் சிறப்பாக இருக்கும். நவகிரகங்களில் முதன்மையானவர் உலகிற்கு ஒளியை தருபவரும், மனிதர்களில் தந்தைக்கு காரகனாக பித்ருகாரகன் என அழைக்கப்படுபவர் சூரிய பகவான் ஆவார். அந்த சூரிய பகவானை சூரிய திசை குறித்தும், அதன் பலன்களை குறித்தும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

sooriya-bagwan

வானில் இருக்கும் 9 கிரகங்களில் முதன்மையான கிரகம் சூரியன் ஆகும். சூரியனின் ஒளி உலகிற்கு வாழ்வளிப்பதாக இருக்கிறது. விஞ்ஞான ரீதியாக பார்க்கும் போது பல லட்ச கோடி ஆண்டுகளுக்கு முன்பு இப்போது நாம் வாழும் பூமி உட்பட அனைத்து கிரகங்களும் சூரியனிலிருந்து பிரிந்தது என்று கூறப்படுகிறது. எனவே பூமியில் வாழும் உயிர்களின் மீது ஒரு வித ஆக்கபூர்வமான ஆற்றலை சூரியன் செலுத்திய வண்ணம் இருக்கிறது.

- Advertisement -

நவகிரகங்களின் முதன்மையானவரான சூரிய பகவானின் சூரிய திசையின் காலம் 6 வருடங்களாகும். ஜாதகத்தில் மிக குறுகிய கால திசை கொண்ட கிரகமாக சூரிய பகவான் இருக்கிறார். தனது தசா காலத்தில் பல விதமான பலன்களை ஜாதகருக்கு உண்டாக்குகிறார். சூரிய பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னம் எனப்படும் முதல் வீட்டிற்கு 3, 6, 10, 11 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தாலும், அவ்விடங்களில் சூரியன் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும் தனது திசா காலத்தில் அந்த ஜாதகருக்கு நல்ல அதிகார பதவிகளை தருவார். சமுதாயத்தில் மற்றவர்கள் பாராட்டக் கூடிய அளவிற்கு ஒரு உன்னத நிலையினை அடைவார்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். உங்களுக்கு புகழ் உண்டாக தக்க காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் ஏற்படும். காவல் துறை, ராணுவம் போன்ற துறைகளில் தலைமை பதவியை பெறுவார்கள்.

Sooriyan

ஒரு நபரின் ஜாதகத்தில் சூரியன் துலாம் ராசியில் நீசம் பெறுவதும் மகரம், கும்பம் போன்ற சனியின் வீடுகளில் அமையப் பெறுவதும் 8,12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் அமையப் பெறுவதும் சூரிய திசை காலங்களில் அந்த ஜாதகருக்கு மிக பாதகமான பலன்களை தரும். மேற்கூறியவாறு சூரியன் ஜாதகத்தில் பாதகமான நிலையில் அமையபெற்றவர்களும், சூரிய திசை நடந்து கொண்டிருப்பவர்களும் தங்களின் வலது கை மோதிர விரலில் மாணிக்கக் கல் மோதிரம் அணிந்து கொள்வது, சிவ வழிபாடு, பிரதோஷ வழிபாடுகள் மேற்கொள்வதன் மூலம் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் கெடுதலான பலன்கள் நீங்கி நன்மைகள் பெறலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
12 ராசியினர் கடைபிடிக்க வேண்டிய பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Surya thisai palangal in Tamil. It is also called Surya dasa palangal in Tamil or Surya graha palangal in Tamil or Jathagathil suriyan in Tamil or Surya thisai palan.

.

- Advertisement -