பூஜை அறையில் இருக்கும் சுவாமி படம் கீழே விழுந்து உடைந்து விட்டால் அபசகுனமா? குடும்பத்திற்கு கெட்டது நடக்காமல் இருக்க இதை செய்தாலே போதும்.

pooja-room-sivan
- Advertisement -

பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்கள் எதிர்பாராமல் கீழே விழுந்து உடைந்து விட்டால் என்ன செய்வது. இதன் மூலம் நமக்கு கஷ்டம் வருமா. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏதாவது தோஷம் பிடிக்குமா அல்லது கெட்ட சகுனத்தின் அறிகுறியா. உடைந்த சுவாமி படத்தை என்ன செய்வது. இப்படி பூஜை அறையில் இருக்கும் சுவாமி படம் உடைந்து விட்டால் ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா, என்ற அத்தனை சந்தேகங்களுக்கும் உண்டான விடையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நம்முடைய கவனக்குறைவு காரணமாகத்தான் சுவாமி படம் கீழே விழுந்து உடையும். அதாவது அடித்த ஆணி, சரியாக இருக்காது. அல்லது நீண்ட நாட்களாக மாட்டி வைத்திருக்கும் படத்தை எடுத்து சுத்தம் செய்து பராமரித்து இருக்க மாட்டோம். அப்படி இல்லை என்றால் காற்றின் மூலம் சுவாமி படம் கீழே விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அல்லது கை தவறி நீங்கள் சுவாமி படத்தை கீழே போட்டு விட்டால் அதனுடைய கண்ணாடி உடைந்து விடும். இப்படி எந்த சூழ்நிலையில் உங்கள் வீட்டில் இருக்கும் சுவாமி படம் உடைந்தாலும் உடனே அதை நினைத்து வீட்டில் இருப்பவர்கள் பதட்டப்பட வேண்டாம்.

- Advertisement -

சுவாமி படம் கீழே விழுந்து உடைந்ததற்கு என்ன காரணமாக இருக்குமோ என்று நிறைய கெட்டதை சிந்தித்து மனதை போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. இந்த பிரச்சனைக்கு தீர்வினை அப்படியே சுவாமி இடம் விட்டு விடுங்கள். உங்கள் வீட்டின் அருகில் ஏதாவது ஒரு சிவன் கோவில் இருந்தால் அந்த சிவன் கோவிலுக்கு வில்வ இலையை உங்கள் கையாலே மாலையாக கட்டிக் கொடுக்க வேண்டும். கோவிலுக்கு செல்லும்போது குடும்பத்துடன் அனைவரும் சென்று, உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரிலும் சுவாமிக்கு ஒரு அர்ச்சனை செய்து சுவாமிக்கு, தேங்காய் உடைக்க வேண்டும். வில்வ இலை அர்ச்சனை செய்ய வேண்டும்.

கவன குறைவு காரணமாக பூஜை அறையில் சுவாமி படம் உடைந்து விட்டது. இதனால் எங்கள் குடும்பத்திற்கு ஏதேனும் சங்கடங்கள் வருவதாக இருந்தால் கூட, அதை நீ தான் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எம்பெருமானின் பாதங்களில் உங்களுடைய பிரச்சனையை இறக்கி வைத்து விடுங்கள். ஏதாவது அபசகுனமாக உங்கள் வீட்டில் பிரச்சனைகள் வருவதாக இருந்தாலும் அதை அந்த சுவாமி பார்த்துக் கொள்ளும்.

- Advertisement -

விஷ்ணு பகவானை வழிபாடு செய்பவர்கள் சிலர் சிவன் கோவிலுக்கு செல்ல மாட்டார்கள். உங்களுக்கு நாமம் போடும் பழக்கம் இருந்தால் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி இலையால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து இதே போல வேண்டுதலை வைக்கலாம். இதை செய்தாலே போதும். உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் எந்த பிரச்சனையும் வராது.

உடைந்த சுவாமி படத்தை என்ன செய்வது. கொண்டு போய் கோவில் மரத்தடியிலோ அல்லது வேறு ஏதாவது இடத்திலோ வைத்து விடக்கூடாது. ஓடும் தண்ணீரில் சுவாமி படங்களை விட்டு நீர் நிலைகளை அசுத்தம் செய்யவும் கூடாது. உடைந்த சுவாமி படத்தில் இருக்கும் கண்ணாடியை பக்குவமாக நீக்கிவிடுங்கள். மேலே இருக்கும் சட்டத்தையும் பக்குவமாக நீக்கிவிடுங்கள். கண்ணாடி, சட்டத்தை குப்பையில் தான் போட்டாக வேண்டும். இப்போது மிஞ்சி இருப்பது உங்களுக்கு சுவாமியின் அட்டை மட்டும்தான். அதாவது காகிதத்தில் பதிக்கப்பட்ட சுவாமி உருவம் இருக்கும்.

ஒரு சுத்தமான பக்கெட்டில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூளை கரைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் சுவாமிபடம் அச்சிடப்பட்ட காகிதத்தை போட்டு நன்றாக ஊற வைத்து அதன் பின்பு உங்கள் கையை வைத்து கரைத்தால் சுவாமி படம் அனைத்தும் தண்ணீரில் கரைந்து விடும். இந்த தண்ணீரை செடி கொடிகள் இருக்கும் இடத்தில் ஊற்றிவிடலாம். இதே போல தான் செல்லரித்த நீண்ட நாள் பயன்படுத்தாத சுவாமி படங்களையும் நீங்கள் வீட்டில் இருந்து அப்புறப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -