பாரம்பரியமான முறையில் சர்க்கரை பொங்கல் செய்முறை

sakkarai pongal
- Advertisement -

பொங்கல் என்றாலே ஞாபகத்திற்கு வருவது சர்க்கரை பொங்கல் தான். இந்த பொங்கலை இரண்டு வகையில் செய்வார்கள். ஒன்று பால் பொங்கல் மற்றொன்று சர்க்கரை பொங்கல். பொங்கல் தினத்தன்று வேறு என்னனென்ன விசேஷமான உணவுகளை சமைத்தாலும் இந்த பொங்கல் தானே அன்றைய ஸ்பெஷல் உணவு.

இது வெறும் உணவை சமைக்கும் தினமாக இல்லாமல் உழவர்கள் நன்றி செலுத்தும் விதமாகவும் சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் கொண்டாடப்படும் ஒரு அற்புதமான பண்டிகை. இப்போது இந்த பண்டிகையின் முக்கிய உணவான சர்க்கரைப் பொங்கலை நம் பாரம்பரியமான முறையில் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 2 கப்,
காய்ச்சிய பால் -2 கப்,
வெல்லம் – 2 1/2 கப்,
பாசிப்பருப்பு -1 கப்,
கடலைப்பருப்பு – 1/2 கப்,
ஏலக்காய் – 2, முந்திரி திராட்சை -10,
நெய் -3 டேபிள் ஸ்பூன்

செய்முறை

இந்தப் பொங்கல் செய்வதற்கு முதலில் பச்சரிசி பாசிப்பருப்பு கடலைப்பருப்பு மூன்றையும் ஒரு முறை தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி கீழே ஊற்றி விடுங்கள். அடுத்து இரண்டாவது மூன்றாவது தண்ணீர் ஊற்றி அலசும் போது அந்த தண்ணீரை வடிகட்டி பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இதை பொங்கல் செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக ஊற வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் பொங்கல் பானையை வைத்த பிறகு பாலை முதலில் ஊற்ற வேண்டும். இதற்கு காய்ச்சாத பாலையும் ஊற்றலாம். பலர் பொங்கல் அன்று புது பானையில் வைப்பார்கள். காய்ச்சாத பாலை முதலில் ஊற்றும் போது பால் திரிந்து விடுவதற்கான வாய்ப்பு உண்டு. ஆகையால் பாலை காய்ச்சி ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நாம் எடுத்து வைத்த அரிசி பருப்பு கலந்த தண்ணீரையும் பானையின் முக்கால் பாகம் வரும் வரை ஊற்றுங்கள்.

தண்ணீர் போதவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் கூட சேர்த்துக் கொள்ளுங்கள். பால் நன்றாக பொங்கி வந்த பிறகு ஊற வைத்து அரிசியை இதில் சேர்த்து கை விடாமல் நன்றாக கலந்து கொண்டே இருங்கள். அரிசி நன்றாக வெந்து வரவேண்டும். பொங்கல் நன்றாக குழைய வெந்த பிறகு வெல்லத்தை நன்றாக நுணுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரிசி நன்றாக வெந்த பிறகு தான் வெல்லத்தை சேர்க்க வேண்டும். அதற்கு முன்பாக சேர்த்து விட்டால் அரிசி வேகாது பொங்கல் நன்றாக வராது. நாம் சாதாரணமாக வீட்டில் பொங்கல் செய்தால் வெல்லத்தை காய்ச்சி வடிகட்டி ஊற்றி செய்யலாம். இந்த பொங்கலுக்கு அப்படி செய்ய முடியாது. ஆகவே வெள்ளத்தை தரமானதாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். வெல்லம் சேர்த்து நன்றாக கலந்த பிறகு ஏலக்காய் நுணுக்கி இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வெல்லம் சேர்த்த பிறகு கொஞ்சம் நேரம் கூட கை விடாமல் கலந்து விடுங்கள். பால் சேர்த்து இருப்பதால் சீக்கிரத்தில் அடி பிடித்து விடும். பொங்கல் நன்றாக வெந்த பிறகு இறக்கி வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி சூடானவுடன் முந்திரி திராட்சை சேர்த்து அதையும் பொங்களில் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். நம்முடைய பாரம்பரியமான சக்கரை பொங்கல் தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: பொங்கல் பல காய் அவியல் செய்முறை

இந்த பொங்கலுக்கு பாரம்பரியமான இந்த சர்க்கரை பொங்கலை பாரம்பரியமான முறையில் இதே அளவுகளுடன் சேர்த்து செய்து பொங்கல் சாப்பிடுங்கள் இந்த பொங்கலை உங்கள் வாழ்நாளில் மறக்கவே மாட்டீர்கள். திருநாளை மேலும் சிறப்பானதாக மாற்றி அனைவரும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட தெய்வீகம் குழு சார்பாக எங்களுடைய பொங்கல் தின வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

- Advertisement -